உள்ளடக்கத்துக்குச் செல்

செல்வக்குழு ஆட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


செல்வக்குழு ஆட்சி அல்லது புளூட்டோக்கிராசி (plutocracy, கிரேக்க மொழி πλοῦτος, ploutos, பொருள் "செல்வம்", மற்றும் κράτος, kratos, பொருள் "அதிகாரம், மேலாட்சி, ஆட்சி"), என்பது ஒரு சமூகம் அல்லது அமைப்பை சிறுபான்மையான பெரும் செல்வந்தக் குடிமக்கள் ஆள்வதாகும். இச்சொல் முதன்முதலில் 1652இல் பயன்படுத்தப்பட்டது. [1] மக்களாட்சி, முதலாளித்துவம், சமூகவுடைமை அல்லது அரசின்மை, போலன்றி இத்தகைய முறைமை ஓர் நிறுவப்பட்ட அரசியல் தத்துவம் அல்ல; இதனை முறையாக ஆதரிப்போரும் இல்லை. சமூகத்தில் மிகவும் செல்வமிக்க வகுப்பினர் இத்தகைய முறைமையை மறைமுகமாகவோ அறியாவண்ணமோ செயற்படுத்த முயல்வர். பெரும்பாலான நேரங்களில் புளூட்டோகிராசி என்ற சொல் இழிவான சொல்லாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. [2]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Plutocracy". Merriam Webster. பார்க்கப்பட்ட நாள் 13 October 2012.
  2. "The study of attitudes is reasonably easy [...] it's concluded that for roughly 70% of the population - the lower 70% on the wealth/income scale - they have no influence on policy whatsoever. They're effectively disenfranchised. As you move up the wealth/income ladder, you get a little bit more influence on policy. When you get to the top, which is maybe a tenth of one percent, people essentially get what they want, i.e. they determine the policy. So the proper term for that is not democracy; it's plutocracy." Extract from the transcript of a speech delivered by Noam Chomsky in Bonn, Germany, at DW Global Media Forum, 15th August 2013.

மேற்படிப்பிற்கு

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வக்குழு_ஆட்சி&oldid=2823967" இலிருந்து மீள்விக்கப்பட்டது