செலினா பர்வின்
செலினா பர்வின் | |
---|---|
பிறப்பு | செலினா பர்வின் 31 மார்ச் 1931 சோட்டா கல்யாண் நகர், இராம்கானி வட்டம், நவகாளி மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாதற்போது வங்காளதேசம்) |
இறப்பு | 14திசம்பர் 1971 (வயது 40) ராயர்பசார் போத்தபூமி, டாக்கா, பாக்கித்தான் (தற்போது வங்காளதேசம்) |
தேசியம் | 1931 முதல் 1947 வரை பிரித்தானைய இந்தியர், 1947 முதல் 1971 கிழக்கு பாக்கித்தானியர் |
மற்ற பெயர்கள் | மன்வாரா பேகம் |
பணி | பத்திரிக்கையாளர் |
பெற்றோர் | மௌல்வி அபிதுர் ரகுமான் (தந்தை) மோச்சமத் சாஜிதா கத்தூன் (தாயார்) |
செலினா பர்வின் (Selina Parvin) (31 மார்ச் 1931 – 14 திசம்பர் 1971) வங்காளதேச பத்திரிகையாளரும், கவிஞரும் ஆவார்.[1] 1971இல் வங்காளதேசத்தில் 9 மாதங்கள் நீடித்த சுதந்திரப் போருக்குப் பிறகு, 14 திசம்பர் அன்று அல்-பாதரால்[2] கொல்லப்பட்ட கொல்லப்பட்ட அறிவார்ந்த தியாகிகளில் இவரும் ஒருவர். இந்த நாள் பின்னர் அறிவார்ந்த தியாகிகள் தினமாக கொண்டாடப்பட்டது. இவர் வீக்லி பேகம், வீக்லி லலானா, ஷிலாலிபி ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றினார்.[3] இவர் 18 திசம்பர் 1971 அன்று அஜிம்பூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். [4]
குழந்தைப் பருவம்
[தொகு]செலினா, பழைய நவகாளி மாவட்டத்தின் ராம்கஞ்ச் பகுதியில் பிறந்தார்.[3] [4] இவரது தந்தை முகமது அபிதுர் ரகுமான் ஆசிரியராக இருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பெனி மாவட்டத்தில் இவரது தந்தையின் வீடு கைப்பற்றப்பட்டபோது, குடும்பம் கிராமத்தில் குடியேற வேண்டியிருந்தது. தனது 12 வயதில் ஆறாம் வகுப்பு படித்த இவர் கவிதைகளையும், கதைகளையும் எழுத ஆரம்பித்தார். பாரம்பரிய பழமைவாத கிராமப்புற சூழல் காரணமாக இவர் பள்ளிப்படிப்பை நிறுத்த வேணமில்லாமல் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆனால் இவர் தன்னுடைய கணவனுடன் வாழ மறுத்துவிட்டார். மேலும் படிக்க விரும்பினாலும் மெட்ரிகுலேசன் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் விவாகரத்து செய்தனர்.[5]
தொழில்
[தொகு]செலினா பர்வின், 1957இல் மிட்போர்ட் மருத்துவமனையில் ஒரு செவிலியர் வேலை பெற்றார். இவர் 1959இல் பகோல் ரோகேயா விடுதியில் விடுதிக் காப்பாளராக சில காலம் பணியாற்றினார். மேலும்,1960இல் அசிம்பூர் பேபி பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். அவர் 1965இல் சலீமுல்லா அனாதை இல்லத்தில் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் 1966இல் 'வீக்லி பேகம்' என்ற பத்திரிக்கையின்ஆசிரியரின் செயலாளராக சேர்ந்தார். 1967 இல் செலினா பர்வின் வீக்லி லலானா என்ற இதழில் பத்திரிகையாளராக சேர்ந்தார். பின்னர் இவர் ஒரு அரசியல்வாதியை மணந்தார். மேலும் பல்வேறு பத்திரிகைகளுடன் பணிபுரிந்தார். தனது சொந்த விடுதலை சார்பு[2] பத்திரிகையான சைலாலிபி என்பதை ஒழுங்கற்ற அடிப்படையில் வெளியிட்டார்.[5] வீக்லியில் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு சுதந்திர போராளிகளிகளுக்கு உதவினார்.[2] சைலாலிபியில், செலினா பர்வீன், பேராசிரியர் முனீர் ஆர் சௌத்ரி, பத்திரிகையாளர் சாகிதுல்லா கைசர், சாகிர் ரைகான், ஏஎன்எம் கோலம் முஸ்தபா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் கட்டுரைகளை வெளியிடுவார்.[2] [6]
இறப்பு
[தொகு]திசம்பர் 13, 1971 அன்று, மற்ற அறிவார்ந்த தியாகிகளைப் போலவே, செலினா பர்வினும் துணை இராணுவப் படையான அல்-பதாரின் உறுப்பினர்களால் கைப்பற்றப்பட்டார். இவருடைய மகன் சுமனுக்கு 7 வயதுதான் நிரமியிருந்தது. [7] இவர் திசம்பர் 14 அன்று கொடூரமாக கொல்லப்பட்டார். பின்னர் இவரது உடல் ராயர்பசார் போத்தபூமியில் கண்டுபிடிக்கப்பட்டது.[7]
நவம்பர் 3, 2013 அன்று, இலண்டனில் வசிக்கும் முஸ்லிம் தலைவரான சவுத்ரி முயீன்-உதின், அமெரிக்காவில் வசிக்கும் அஷ்ரபுஸ் ஜமான் கான் ஆகியோர் 1971 திசம்பரில் டாக்கா பல்கலைக்கழகத்தின் ஒன்பது ஆசிரியர்கள், செலினா பர்வின், ஆறு பத்திரிகையாளர்கள், மூன்று மருத்துவர்கள் உட்பட 18 பேரின் கடத்தல் மற்றும் கொலைகளில் தொடர்புடையவர்கள் என்று நீதிமன்றம் கண்டறிந்ததைத் தொடர்ந்து அவர்கள் ஆஜராகமல் தண்டனை விதிக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Profiles of martyred intellectuals". 14 December 2006. http://archive.thedailystar.net/suppliments/2006/december/december14th/intellectuals.htm.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "It was matricide". 4 November 2013. http://www.thedailystar.net/beta2/news/it-was-matricide/.
- ↑ 3.0 3.1 suppliments/2006/december/december14th/intellectuals.htm "Profiles of martyred intellectuals". 14 December 2006. http://archive.thedailystar.net/ suppliments/2006/december/december14th/intellectuals.htm.
- ↑ 4.0 4.1 Banglapedia: National Encyclopedia of Bangladesh.
- ↑ 5.0 5.1 স্মৃতি: ১৯৭১, Volume 4, Page 98, Bangla Academy, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 984-07-3351-6
- ↑ Chowdhury, Syed Tashfin. "UK Muslim leader Chowdhury Mueen Uddin sentenced to death in Bangladesh".
- ↑ 7.0 7.1 Hoque, Mofidul (14 December 2013). "Long Walk to Justice". The Daily Star. http://archive.thedailystar.net/beta2/news/long-walk-to-justice/. பார்த்த நாள்: 31 December 2013.
மேலும் படிக்க
[தொகு]- "AFD arranges festival of independent films". New Age. 11 May 2011 இம் மூலத்தில் இருந்து 29 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130129195609/http://newagebd.com/newspaper1/archive_details.php?date=2011-05-11&nid=18322.
- Shahidullah, Kaiser. "Martyred Intellectuals: The saga lives on...". The Daily Star. http://archive.thedailystar.net/suppliments/2009/december/martyred_day_special/page01.htm.