சாகிர் ரைகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாகிர் ரைகான்
Zahir Raihan (1935–1972).jpg
தாய்மொழியில் பெயர்জহির রায়হান
பிறப்புஆகத்து 19, 1935(1935-08-19)
வங்காளம், பிரித்தானிய இந்தியா
காணாமல்போனது30 சனவரி 1972 (aged 36)
வங்காள தேசம்
கல்விவங்காள மொழியில் இளங்கலைப் பட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்தாக்கா பல்கலைக்கழகம்
பணி
 • இயக்குனர்
 • புதின எழுத்தாளர்
 • எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஸ்டாப் ஜெனோசைட்
வாழ்க்கைத்
துணை
 • சுமிதா தேவி
  (m. 1961; div. Expression error: Unexpected < operator.)
 • சுசோன்டா
  (m. 1968; death Expression error: Unexpected < operator.)
பிள்ளைகள்
 • பிபுல்
 • அனோல்
 • தபு
 • அரபாத்
உறவினர்கள்சாகிதுல்லா கைசர் (சகோதரர்)
விருதுகள்full list

சாகிர் ரைகான் (பிறப்பு: 19 ஆகத்து 1935 - காணாமல் போனார்: 30 சனவரி 1972) என்பவர் வங்காள தேசத்தைச் சேர்ந்த புதின ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். 1971 ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போரின்போது தயாரிக்கப்பட்ட ஸ்டாப் ஜெனோசைட் என்ற ஆவணப்படத்தால் அறியப்படுகின்றார்.[1] அவரது மரணத்திற்குப் பின்னர் 1977 ஆம் ஆண்டில் இல் ஏகுஷே படக் விருதும், 1992 ஆம் ஆண்டில் வங்காளதேச அரசினால் சுதந்திர தின விருதும் வழங்கப்பட்டது.[2]

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்[தொகு]

ரைகான் முகமது சாகிருல்லா 1935 ஆம் ஆண்டு ஆகத்து 19 அன்று அப்போதைய நோகாலி மாவட்டத்தின் கீழ் இருந்த ஃபெனி மகாகுமாவில் மஜூபூர் கிராமத்தில் பிறந்தார். [3]1947 ஆம் ஆண்டில் வங்காளப் பிரிவினைக்குப் பிறகு அவர் தனது பெற்றோருடன் கல்கத்தாவிலிருந்து தனது கிராமத்திற்குத் திரும்பினார். டாக்கா பல்கலைக்கழகத்தில் வங்காள மொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும் ரைகான் வங்காள இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

பணி[தொகு]

இலக்கியப் படைப்பாளரான ரைகான் 1950 ஆம் ஆண்டில் ஜுகர் அலோவில் இணைந்து பத்திரிகையாளராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் அவர் கப்சாரா, ஜான்ட்ரிக் மற்றும் சினிமா போன்ற செய்தித்தாள்களிலும் பணியாற்றினார். அவர் 1956 ஆம் ஆண்டில் புரோபாஹோ பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[4] 1955 ஆம் ஆண்டில் சூரியகிரகன் என்ற தலைப்பில் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. சாகிர் 1957 ஆம் ஆண்டில் உருது திரைப்படமான ஜாகோ ஹுவா சவேராவில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.[5] இதுவே திரைத்துறையில் அவரது முதல் நேரடி ஈடுபாடு ஆகும். ஜெ நாடி மருபத்தே என்ற திரைப்படத்திலும் சலாவுதீனின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். திரைப்படத் தயாரிப்பாளரான எத்தேஷாமினது திரைப்படமான ஈ தேஷ் தோமர் அமர் என்ற படத்தின் தலைப்பு பாடலை எழுதினார். 1960 ஆம் ஆண்டில் கோகோனோ ஆஷேனி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் 1961 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1964 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் முதல் வண்ணப் திரைப்படமான சங்கம் என்ற திரைப்படத்தை உருவாக்கினார். அடுத்த ஆண்டு தனது முதல் சினிமாஸ்கோப் படமான பஹானா திரைப்படத்தை பூர்த்தி செய்தார்.

ரைகான் 1952 ஆம் ஆண்டின் மொழி இயக்கத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். மேலும் 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று நடைப் பெற்ற அம்தலாவின் வரலாற்றுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மொழி இயக்கத்தின் தாக்கத்தினால் அதை அடிப்படையாகக் கொண்டு ஜிபோன் தேக் நேயா என்ற திரைப்படத்தை உருவாக்கினார். கிழக்கு பாகிஸ்தானில் 1969ம் ஆண்டின் வெகுஜன எழுச்சியிலும் பங்கேற்றார் . 1971 ஆம் ஆண்டில் வங்காளதேச விடுதலைப் போரில் இணைந்தார். மேலும் விடுதலைப் போர் தொடர்பான ஆவணப்படங்களை உருவாக்கினார். விடுதலைப் போரின் போது ரைகான் கல்கத்தாவுக்குச் சென்றார். அங்கு அவரது படம் ஜிபோன் தேக் நியா திரையிடப்பட்டது. இவரது திரைப்படத்தை சத்யஜித் ரே , மிருனல் சென் , தபன் சின்ஹா மற்றும் ரித்விக் கட்டக் ஆகியோர் பாராட்டினர். அச் சமயத்தில் அவர் நிதி சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தாலும், கல்கத்தாவில் திரையிடப்பட்டு பெற்ற பணத்தை அவர் சுதந்திர போராளிகள் அறக்கட்டளைக்கு வழங்கினார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ரைகான் 1961 ஆம் ஆண்டில் சுமிதா தேவி என்பவரையும், 1968 ஆம் ஆண்டில் சுச்சொண்டா திருமணம் முடித்தார். இருவரும் திரைப்பட நடிகைகள் ஆவார்கள். சுமிதா, ரைகான் இணையருக்கு பிபுல் ரைகான் மற்றும் அனோல் ரைகான் என்ற இரண்டு புதல்வர்களும், சுச்சொண்டா, ரைகான் இணையருக்கு ஓபு ரைகான் மற்றும் டோபு ரைகான் என்ற இரண்டு புதல்வர்களும் இருந்தனர்.[7]

மறைவு[தொகு]

விடுதலைப் போரின் இறுதி நாட்களில் பாகிஸ்தான் இராணுவத்தினால் அல்லது உள்ளூர் ஒத்துழைப்பாளர்களால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளரான ஷாஹிதுல்லா கைசரைக் கண்டுபிடிக்க முயன்ற ரைகான் 1972 ஆம் ஆண்டு சனவரி 30 அன்று காணாமல் போனார். தலைநகர் டாக்காவின் புறநகர்ப் பகுதியான மிர்பூருக்குச் சென்றபோது, ​​ஆயுதமேந்திய பிஹாரி ஒத்துழைப்பாளர்கள் மற்றும் பாகிஸ்தான் இராணுவ படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இவரும், இன்னும் பலரும் கொல்லப்பட்டனர் என்று நம்பப்படுகின்றது.[8]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகிர்_ரைகான்&oldid=2896812" இருந்து மீள்விக்கப்பட்டது