உள்ளடக்கத்துக்குச் செல்

செரியா, புருனே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செரியா (ஆங்கிலம்: Seria) என்பது போர்னியோ தீவின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு நகரமாகும்.புருணையின் பெலைட் மாவட்டத்திலில் அமைந்துள்ளது. இது நாட்டின் பெட்ரோலியத் தொழிலின் பிறப்பிடமாகும், இங்கு 1929 இல் எண்ணெய் தோண்டியெடுக்கப்பட்டது.[1] செரியா ஒரு நகராட்சியாகும். அத்துடன் இதே பெயரின் முகிமின் கீழ் இரண்டு கிராம அளவிலான துணைப்பிரிவுகளாகவும் இருக்கிறது [2] நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான கழுதைகள் உள்ளன. இது நகரத்தின் அதிகாரப்பூர்வமற்ற அடையாளமாக மாறியுள்ளது.

வரலாறு

[தொகு]

செரியா முதலில் பதங் பெராவா என்று அழைக்கப்பட்டது, இது மலாய் மொழியில் காட்டு புறாவின் புலம் என்று பொருள்படும். புருனே தாருசுலாமின் வரலாற்று அகராதியின் படி, 'சீரியா' என்ற பெயர் பிரித்தானிய அதிகாரிகளால் வழங்கப்பட்டது, இது தென்கிழக்கு ஒதுக்கப்பட்ட தொழில்துறை பகுதியாகும். இந்தத் தொழில்துறை பகுதி 1929 இல் முதன்முதலில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

முதல் வணிக எண்ணெய் கிணறு [3] 1929 ஆம் ஆண்டில் செரியா ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள பதங் பெராவாவில் (சுங்கை செரியா) தோண்டியெடுக்கப்பட்டது.[4] செரியா பகுதி 1936 இல் நகராட்சி பகுதியாக அரசிதழில் பதிவு செய்யப்பட்டது. இப்பொது முதல் இந்த நகரம் கோலா பெலைட் சுகாதார வாரியத்தின் அதிகாரத்தின் கீழ் வந்தது [5] இது கோலா பெலைட்டின் நகராட்சி பகுதிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.

1962 டிசம்பர் 8 அன்று முடியாட்சிக்கு எதிரான ஒரு சிறிய கிளர்ச்சியின் மையங்களில் செரியாவும் ஒன்றாகும். இந்தக் கிளர்ச்சி பிரித்தன் இராணுவத்தால் அடக்கப்பட்டது. இந்த நிகழ்வு புருனே கிளர்ச்சி என்று அறியப்படுகிறது.[6] மறைந்த சுல்தான் உமர் அலி சைபுதீனின் ஆட்சியின் கீழ், சலான் சுல்தான் ஒமர் அலி என்ற பகுதியில் தற்போதைய வணிகக் கட்டிடங்கள் கட்டப்பட்டது.

இருப்பிடம்

[தொகு]

செரியா முகிமின் பெலேட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகராட்சியின் நகர மையம் வடக்கில் சலான் தெங்கா மற்றும் செரியா அரினா, கிழக்கில் சலான் இலோராங் சாது பாரத், தெற்கே சலான் போல்கியா மற்றும் மேற்கில் சலான் இலோராங் திகா பாரத் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 0.603 கி.மீ. ஆகும் [7] பனகாவின் புறநகர்ப் பகுதிகள் நகரின் மேற்கே அமைந்துள்ளன, கம்போங் பாரு நகரின் கிழக்கே அமைந்துள்ளது.

பெலேட் மாவட்டத்தின் நிர்வாக தலைநகரான கோலா பெலேட் மேற்கில் சுமார் 10 மைல் (16 கிலோமீட்டர்) தொலைவில் அமைந்துள்ளது மற்றும் இரு சாலைகளிலும் செரியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெலைட் மாவட்டத்தில் உள்ள முகிம் லாபி, இது செரியாவின் கிழக்கே அமைந்துள்ளது. மேலும் தேசிய தலைநகரான பந்தர் செரி பெகவன் வடகிழக்கில் சுமார் 100 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

கம்போங்

[தொகு]

நாட்டின் பிற நகராட்சி பகுதிகளைப் போலல்லாமல், பெக்கன் செரியா கிராமங்களாக பிரிக்கப்படவில்லை. இருப்பினும் அண்டைப் பகுதியான கம்புங் செரியாவின் புறநகர்ப் பகுதியாக செயல்படுகிறது.[8]

எண்ணெய் மற்றும் எரிவாயு

[தொகு]

புருனேயில் உள்ள எண்ணெய் தொழிற்துறையின் மையமாக செரியா உள்ளது. மேலும் புருனேயில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வணிக கடலோர எண்ணெய் வயலாகும்

படகு மற்றும் நதி, துறைமுகங்கள்

[தொகு]

செரியாவில் படகு சேவைகள், நதி சேவைகள் அல்லது துறைமுக சேவைகள் எதுவும் இல்லை. அருகிலுள்ள துறைமுகம் கோலா பெலைட்டில் உள்ளது, மற்றும் புருனேயில் அருகிலுள்ள ஆழ்கடல் துறைமுகம் முயரா துறைமுகமாகும்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Brunei in Brief" (PDF). www.information.gov.bn. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
  2. "Belait District" (PDF). www.information.gov.bn. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
  3. 1929 க்கு முன்னர் ஜெருடோங் பகுதியிலும் லாபி பகுதியிலும் வர்த்தகமற்ற அளவு எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது
  4. அதன் பின்னர் நதி அதன் போக்கை மாற்றிவிட்டது. அப்போதிருந்து முதல் கிணறு ஆற்றின் வாயின் கிழக்குப் பகுதியில் உள்ளது. கடலரிப்பு காரணமாக முதல் கிணற்றின் இருப்பிடமும் நீருக்கடியில் உள்ளது. நாளின் ஒரு பகுதியில் குறைந்த அலைகளின் போது மட்டுமே நிலத்தில் தெரிகிறது. ஆறு அதன் பெயரை எண்ணெய் தொழிலுக்கு ஆதரவாக வளர்ந்த நகரத்திற்கு வழங்கியுள்ளது
  5. இப்போது கோலா பெலேட் / செரியா நகராட்சி வாரியம். அல்லது மலாய் மொழியில் லெம்பாகா பண்டரன் கோலா பெலைட் டான் செரியா என்பது லோராங் போல்கியாவில் ஒரு செரியா கிளை அலுவலகத்துடன் அமைந்துள்ளது.
  6. Brunei Uprising - retrieved 04-06-2007
  7. Kuala Belait and Seria Municipal Board பரணிடப்பட்டது 5 ஆகத்து 2012 at Archive.today
  8. Poskod Daerah Belait பரணிடப்பட்டது 2 ஏப்பிரல் 2008 at the வந்தவழி இயந்திரம் - retrieved 05-06-2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரியா,_புருனே&oldid=3792787" இலிருந்து மீள்விக்கப்பட்டது