செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டம்

ஆள்கூறுகள்: 00°55′1″N 29°20′4″W / 0.91694°N 29.33444°W / 0.91694; -29.33444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டம்
உள்ளூர் பெயர்: ஆர்கிபெலாகோ டி சாவோ பெத்ரோ எ சாவோ பவுலோ
செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டத்தில் பிரேசிலிய படைத்துறையின் அறிவியல் நிலையமும் கலங்கரை விளக்கமும்
புவியியல்
அமைவிடம்அத்திலாந்திக்குப் பெருங்கடல்
ஆள்கூறுகள்00°55′1″N 29°20′4″W / 0.91694°N 29.33444°W / 0.91694; -29.33444
தீவுக்கூட்டம்ஆர்கிபெலாகோ டி சாவோ பெத்ரோ எ சாவோ பவுலோ
மொத்தத் தீவுகள்15[1]
முக்கிய தீவுகள்பெல்மோன்ட், சாலஞ்சர், நோர்டெஸ்டெ, காப்ரல், சௌத்
பரப்பளவு15,000 m2 (160,000 sq ft)[1]
உயர்ந்த ஏற்றம்17 m (56 ft)[1]
நிர்வாகம்
பிரேசில்
மண்டலம்வடகிழக்கு
மாநிலம்பெர்னம்புகோ
மக்கள்
மக்கள்தொகை4[2]
மேலதிக தகவல்கள்
அலுவல்முறை வலைத்தளம்
ஆர்கிபெலாகோ டி சாவோ பெத்ரோ எ சாவோ பவுலோவின் நிலப்படம்

செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டம் (Saint Peter and Saint Paul Archipelago, போர்த்துக்கேய மொழி: ஆர்கிபெலாகோ டி சாவோ பெத்ரோ எ சாவோ பவுலோ) அத்திலாந்திக்குப் பெருங்கடலில் நிலநடுக்கோட்டிற்கு அண்மையில் அமைந்துள்ள 15 சிறு தீவுத்திட்டுகளும் பாறைகளும் ஆகும்.[3] குறைந்த காற்றுள்ள, உள்ளிட சுறாவளிகள் ஏற்படும் வெப்ப மண்டலங்களிடை கூடுகை மண்டலத்தில் அமைந்துள்ளது. இது பிரேசிலிய மாநிலம் பெர்னம்புகோவின் சிறப்பு நகராட்சியாக விளங்குகிறது. பெர்னான்டோ டி நோரன்கா தீவுக்கூட்டத்திலிருந்து வடகிழக்கே 625 km (388 mi) தொலைவிலும் நதால் நகரத்திலிருந்து 990 km (620 mi) தொலைவிலும் ஆபிரிக்காவின் மேற்கு கடலோரத்திலிருந்து 1,824 km (1,133 mi) தொலைவிலும் அமைந்துள்ளது.

1986இல், இத்தீவுக்கூட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.[4] 1998 முதல் பிரேசிலிய கடற்படை இங்கு நிரந்தரமான அறிவியல் ஆய்வகத்தை நிர்வகித்து வருகிறது.[2] இந்தத் தீவுகளில் முக்கியமானத் தொழிலாக சூரை மீன் பிடித்தல் இருந்து வருகிறது.

மேற்சான்றுகள்[தொகு]