செயலாக்க ஆணை 13769
Appearance
செயலாக்க ஆணை 13769 | |
---|---|
பென்டகன் அலுவலகத்தில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டோனால்ட் டிரம்ப் ஆணையில் ஒப்பமிடல்; துணை குடியரசுத் தலைவர் மைக் பென்சும் (இடது) பாதுகாப்புத்துறை அமைச்சர் சேம்சு மாட்டிசும் (வலது) உடனிருந்தனர். | |
தொடர்புடைய சட்டம் | |
குடிநுழைவு மற்றும் குடியுரிமைச் சட்டம் 1965 | |
சுருக்கம் | |
|
செயலாக்க ஆணை 13769 எனப்படுவது அமெரிக்க அரசத் தலைவர் டோனால்ட் டிரம்ப் 27 சனவரி 2017 அன்று கையெழுத்திட்ட செயலாக்க ஆணை ஆகும். இந்த ஆணையின்படி இராக், இரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தோர் ஐக்கிய அமெரிக்காவில் நுழைவதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டது. இந்த ஆணை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவை நோக்கி வந்துகொண்டிருந்த ஏதிலிகள் அனைவரும் வானூர்தி நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.[3]
தடையை ஐக்கிய அமெரிக்கா முழுமைக்குமாக தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சியாட்டிலில் உள்ள நீதியரசர் 3 பிப்ரவரி 2017 அன்று உத்தரவு பிறப்பித்தார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Diamond, Jeremy; Almasy, Steve. "Trump's immigration ban sends shockwaves". CNN. பார்க்கப்பட்ட நாள் February 2, 2017.
- ↑ Caldwell, Alicia A. (3 February 2017). "State Says Fewer Than 60,000 Visas Revoked Under Order". ABC News. The Associated Press. http://abcnews.go.com/Politics/wireStory/state-fewer-60000-visas-revoked-order-45252637. பார்த்த நாள்: 2017-02-03.
- ↑ Kulish, Nicholas; Fernandez, Manny (சனவரி 28, 2017). "Refugees Detained at U.S. Airports, Prompting Legal Challenges to Trump's Immigration Order". தி நியூயார்க் டைம்சு. https://www.nytimes.com/2017/01/28/us/refugees-detained-at-us-airports-prompting-legal-challenges-to-trumps-immigration-order.html. பார்த்த நாள்: சனவரி 28, 2017.
- ↑ Trump travel ban: Seattle judge issues nationwide block