செயற்றிட்ட முகாமைத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Merge-arrow.svg
இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) செயற்றிட்ட மேலாண்மை என்ற கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)

செயற்றிட்ட முகாமைத்துவம் அல்லது செயற்றிட்ட மேலாண்மை (ஆங்கிலம்:Project management) என்பது வளங்களைத் திட்டமிட்டு ஒழுங்கமைத்து முகாமை செய்து செயற்திட்ட இலக்குகளையும் குறிக்கோள்களையும் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான ஒரு ஒழுக்க விதி முறையாக கருதப்படுகிறது. இது ஒரு பயனுடையதான அல்லது மாற்றத்தை ஏற்படுத்துக் கூடிய அல்லது பெறுமதி ஊட்டப்பட்ட ஒரு தனித்துவமான பொருட்கள் அல்லது சேவையை உருவாக்க மேற்கொள்ளும் ஒரு முடிவுள்ள ஒரு முயற்சியாகும்.[1]

இங்கு செயற்றிட்டமானது செய்முறைகள் செயற்பாடுகளிலிருந்து வேறுபடுத்தி நோக்கப்படுகிறது. காரணம் செய்முறைகள் செயற்பாடுகள் நிரந்தரமான அல்லது ஒரு பகுதி நிரந்தரமான, தொடர்ச்சியாக ஒரே பொருள் அல்லது சேவையை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை ஆகும்.நடைமுறையில் இவ்விரு தொழிற்பாடுகளும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத் திறன்கள், பயன்படுத்தப்படும் முகாமைத்துவத் தத்துவங்கள் என்பவற்றிற்கேற்ப இவ்விரு செயல்முறைகளும் சில சந்தர்ப்பங்களில் வேறுபட்டுக் காணப்படும்.

செயற்றிட்ட முகாமைத்துவத்தின் முதல் நிலை சவால் என்பது, செயற்றிட்ட தடைகளைக் கருத்தில் கொண்டு செயல் திட்ட இலக்குகள் குறிக்கோள்களை அடைவதாகும். செயல்திட்டத்தின் எல்லை, நேரம், நிதி என்பன பொதுவான தடைகளாக கருதப்படும். இரண்டாம் நிலை சவாலாக கருதப்படுவது நிறுவனத்தின் முன்னரே தீர்மானிக்கபட்ட நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு செயற்திட்டத்திற்கு தேவையான உள்ளீடுகளை உச்சப் பயனைப் பெறத்தக்க முறையில் வளங்களை ஒதுக்கீடு செய்வதும் அவற்றை ஒன்றிணைத்து செயற்படுத்துவதுமாகும்.

செயற்றிட்டமென்பது செயற்றிட்டத்தின் நோக்கங்கள் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காக வளங்களையும் அவற்றிற்கு பொருத்தமான பல செயற்பாடுகளையும் முன் கூடியே தீர்மானிக்கும் ஒரு நடவடிக்கையாகும்.

வரலாறு[தொகு]

உரோம படைவீரர்கள் கோட்டையொன்றை நிர்மானித்தல், கி.மு 113
கென்றி கான்ற் (1861–1919), திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டு உத்திகளின் தந்தை.

அணுகுமுறைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Definitive Guide to Project Management. Nokes, Sebastian. 2nd Ed.n. London (Financial Times / Prentice Hall): 2007. ISBN 978-0-273-71097-4