என்றி ஃபயோல்
ஹென்றி ஃபயோல் (Henri Fayol, 1841 - 1925) ஒரு பிரெஞ்சு முகாமைத்துவத் தத்துவாசிரியர். உலோகக் கம்பனி ஒன்றின் பொறியியலாளராகக் கடமையாற்றியவராவார். மரபுவழிப் பாடசாலையினைத் தொடக்கி வைத்தவர்களுள் இவரும் ஒருவராகக் காணப்படுகின்றார்.இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரது கொள்கைகள் மிகுந்த தாக்கமுடையவனாக இருந்தன. 1917 இல் Administration industrielle et générale என்ற நூலை வெளியிட்டார். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1949 இல் General and Industrial Management என்ற தலைப்பில் வெளிவந்தது.
ஹென்றி ஃபயோலின் முகாமைத்துவ தத்துவங்கள்
[தொகு]நிறுவனம்மொன்றின் முகாமைத்துவம் சரிவர இயங்க சில தத்துவங்கள் கடைப்பிடிக்கப்படவேண்டும் என ஹென்றி ஃபயோல் கோடிட்டுக்காட்டுகின்றார். அவையாவன:
- தொழிற்தேர்ச்சி (Specialization of labor) - ஊழியர் ஒருவர் தொழிலில் தேர்ச்சியடைவதனையும்,முன்னேற்றமடைவதையும் முகாமை ஊக்குவிக்கவேண்டும்.
- அதிகாரம் (Authority) - அதிகாரமும் பொறுப்பும் சரிவர வகைப்படுத்தப்படுத்தபடல் வேண்டும்.
- நன்னடத்தை (Discipline)
- கட்டளையிடலில் ஒற்றுமை (Unity of command) - ஊழியர் ஒருவருக்கான கட்டளை/அறிவுறுத்தல்கள் பலரால் பிறப்பிக்கப்படக்கூடாது,தனி ஒருவரால் பிறப்பிக்கப்படவேண்டும்.
- நெறிப்படுத்தலில் ஒற்றுமை (Unity of direction) - ஒர் குறிப்பிட்ட நோக்கினை அடைவதற்காக நிறுவனத்தின் சகல பகுதிகளும் வழிநடத்தப்படவேண்டும்.
- பொதுநலன் பேணல் (Subordination of Individual Interests)
- சன்மானம் வழங்குதல் (Remuneration)
- மையப்படுத்தல் (Centralization)
- படிச்சங்கிலி (Chain of Superiors)
- முறைமை ஒழுங்கு (Order)
- நடுநிலை (Equity)
- ஆளணியின் உறுதித்தன்மை (Personnel Tenure)
- முன்முனைதல் (Initiative)
- ஒற்றுமையே பலம் (Esprit de corps)
பயோல், அனைத்து முகாமைத்துவ நிறுவனங்களிலும் பயன்படுத்தும் வண்ணம் தனது முகாமைத்துவம் பற்றிய கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
பயோலின் கருத்தின்படி நிருவாகத் தத்துவங்கள் உலகளாவிய தன்மை கொண்டவை அவை அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தேவைக்கேற்ப பிரயோகிக்கக் கூடியவை. இதில் திட்டமிடல், ஒழுங்கமைத்தல், கட்டுப்படுத்துதல், கட்டளை பிறப்பித்தல் போன்ற விடயங்கள், அனைத்து முகாமைத்துவத்திற்கும் பொதுவான விடயங்களாகும்.
இவரது முகாமைத்துவக் கருத்துக்களைப் பின்வருமாறு நாம் நோக்கலாம்
[தொகு]நிறுவனமொன்றின் நடவடிக்கைப் பிரிப்பு (Division of Industrial Activities) - தொழில் நிறுவனம் ஒன்றின் நடவடிக்கைகளை ஆறு வகைகளாகப் பிரித்து விளக்கமளிக்கின்றார். தொழினுட்பம், வாணிபம், நிதிநிலைமை, பாதுகாப்பு, கணக்குவைப்பு, முகாமைத்துவம் என்பனவே அவையாகும்.
வினைத்திறனுள்ள முகாமையாளர் தரம் (Qualities of An Effective Manager) - ஆற்றல் மிக்க முகாமையாளர் ஒருவருக்கு ஆரோக்கியம், ஒழுக்கம், பொதுக்கல்வி, தனித்துவமிக்க அறிவு, அனுபவம் ஆகிய பண்புகளும் அதனுடன் இணைந்த பயிற்சிகளும் அவசியமாவை என பயோல் குறிப்பிடுகின்றார்
முகாமைத்துவச் செயற்பாடுகள் (Functions of Management) - திட்டமிடல், ஒழுங்கமைத்தல், அதிகாரம் செய்தல்,ஒருங்கிணைத்தல், கட்டுப்படுத்தல் என முகாமைத்துவத்தின் கூறுகளை ஐந்து பிரிவுகளில் பயோல் விளக்குகின்றார்.
முகாமைத்துவ மூலதத்துவம் (Principals of Management) – பயோல் அனைத்துவித நிறுவனங்களிலும், முகாமையாளர்களாலும் பின்பற்றக் கூடிய 14 முகாமைத்துவத் தத்துவங்களைக் குறிப்பிடுகின்றார். தொழில் பகுப்பு, அதிகாரபலம், ஒழுக்கநெறி, ஒழுங்கமைந்த கட்டளை, ஒருங்கிணைந்த வழிநடத்தல், கீழ்ப்பணியாளர் அக்கறை, ஊதியம், பன்முகப்படுத்தல், அதிகார ஒழுங்கு, ஒழுங்கு, சமதன்மை, நிலையான பதவிக்காலம், தொடக்கம், ஒற்றுமையே பலம் பேன்ற அவருடைய தத்துவங்கள் தொழிலுக்கு மட்டுமல்லாமல் அரசியல், மதம், இராணுவம் மற்றும் பிற அமைப்புக்களுக்கும் கூட பொருந்தும் என அவர் கருதுகின்றார்.