உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பழுப்புத் தலைப்பஞ்சுருட்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பழுப்புத் தலைப்பஞ்சுருட்டான்
மேற்கு பாலி தேசிய பூங்கா, இந்தோனேசியா
மேற்கு பாலி தேசிய பூங்கா, இந்தோனேசியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
மீ. லெசுகெனால்டி
இருசொற் பெயரீடு
மீரோப்சு லெசுகெனால்டி
‘’வையோலாட்’’, 1817

செம்பழுப்புத் தலைப்பஞ்சுருட்டான் (Chestnut-headed Bee-eater, Merops leschenaulti) என்பது மரங்களை அண்டி வாழும், பூச்சிகளை உண்ணும் பஞ்சுருட்டான் பறவையாகும். இது இந்திய உபகண்டம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குறிப்பாக இந்தியாவிலிருந்து தென்கிழக்காசியா வரையான பகுதிகளை வாழ்விடமாகக் கொண்டுள்ளது.

இவ்வினங்கள் ஏனைய பஞ்சுருட்டான்கள் போன்று பிரகாசமாக நிறத்தைக் கொண்ட மெலிதான வடிவம் கொண்ட பறவையாகும். பச்சை நிறத்தை அதிகம் கொண்டும் நீல நிறத்தை பின்பகுதியிலும் வாயிற்றின் கீழ்ப்புறத்திலும் கொண்டும் காணப்படும். அதன் முகமும் தொண்டையும் மஞ்சலுடன் கருப்புக் கோடுகளுடனும் தலையுச்சி மற்றும் பிடறி ஆகிய பகுதிகள் உயர் செந்தவிட்டு நிறத்திலும் காணப்படும். மெல்லிய வளைந்த சொண்டு கருப்பு நிறமாகவிருக்கும். இருபால் பறவைகளும் ஒரே தோற்றத்தில் இருப்பினும், இள வயது பறவைகள் மங்கலான நிறத்தைக் கொண்டு காணப்படும்.

இவை 18-20செமீ நீளமுடையவை. இப்பறவைகள் அதிகமாக மலைப்பிரதேசங்களில் மட்டுமே காணப்படுகிறது.[2]

விளக்கம்

[தொகு]

செம்பழுப்புத் தலைப்பஞ்சுருட்டான் பறவையானது கொண்டைக்குருவியை விடச் சற்றுச் சிறியதாக சுமார் 18–20 செ. மீ நீளம் இருக்கும். இதன் அலகு கறுப்பாகவும், விழிப்படலம் ஆழ்ந்த சிவப்பாகவும், கால்கள் நல்ல கறுப்பாகவும் இருக்கும். தலையும் மேல் முதுகும் செம்பழுப்பு நிறத்திலும், எஞ்சிய உடலின் மேற்பகுதிகள் புல் பச்சை நிறத்திலும் இருக்கும். மோவாயும் தொண்டையும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மேல் மார்பில் ஒரு செம்பழுப்பு வளையம் காணப்படும். உடலின் பிற கீழ்ப்பகுதிகள் நீலங் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்.

20-22-5 செ.மீ; 23-33 கிராம். நீண்ட இறக்கைகள் கொண்ட ஆனால் நீண்ட வால்-ஸ்ட்ரீமர்கள் இல்லாத தனித்துவமான, சிறிய தேனீ-தின்னும் இனம். பரிந்துரைக்கப்பட்ட இனம் விரிகுடா-பழுப்பு நிற கிரீடம் மற்றும் மேன்டல், பின் விளிம்பில் அகன்ற கருப்பு பட்டையுடன் பச்சை இறக்கைகள், நீல நிற ரம்ப்; கருப்பு முகமூடி, மஞ்சள் கன்னம், கன்னங்கள் மற்றும் தொண்டை, சிவப்பு நிற கீழ் தொண்டை, மெல்லிய கருப்பு கோர்கெட்; மேல் மார்பகம் மஞ்சள், கீழ் மார்பகம் பச்சை, வயிறு நீல-பச்சை, வால்-அடையாளங்களை நோக்கி நீலம்; கருவிழி சிவப்பு. பாலினங்கள் ஒரே மாதிரியானவை. இளம் வயதினருக்கு நெற்றி, கிரீடம் மற்றும் மேன்டல் பச்சை, விரிகுடா-பழுப்பு அல்ல, மற்றும் கிரீடத்தின் பின்புறம் மற்றும் பக்கங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும், பச்சை நிறத்தில் இருக்கும்; கோர்கெட் கோடு கருப்பு அல்ல, அடர் அல்லது சிவப்பு. அந்தமனென்சிஸ் இனம் பெரியது (சராசரியாக இறக்கை 3 மிமீ, வால் 12 மிமீ மற்றும் அலகு 2.4 மிமீ நீளம்) (1), முகமூடி குறைக்கப்பட்டு சிவப்பு நிறத்துடன் (கருப்பு அல்ல), மார்பகத்தின் பக்கங்களைப் போல; குயின்டிகலர் முகமூடி பெரும்பாலும் கஷ்கொட்டையுடன் இருக்கும், கீழ் பகுதியுடன் இருக்கும். தொண்டை மஞ்சள், வால் நீலம் மற்றும் 7% இறக்கைகள் கொண்டது

நடத்தை

[தொகு]

இவை அயன அயல் மண்டல அடர்ந்த காடுகளில், பெரும்பாலும் தண்ணீருக்கு அருகில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை மலைப்பகுதிகளிலும் 1000 மீட்டர் வரை காணப்படுகின்றன. இரவில் கூட்டமாக இலைகளடர்ந்த மரங்களில் தங்குகின்றன. இவை தேனீக்கள், குளவிகள் போன்ற பூச்சிகளை பறந்தபடி பிடித்து உணவாக கொள்கின்றன.

இனப்பெருக்க காலத்தில் கூட்டமாக மண் திட்டுகளிலும், மணல் திட்டுகளிலும் காட்டாறுகளை ஒட்டி நீளமான சுரங்கத்தைக் குடைந்து அதில் கூடு அமைக்கின்றன. அதில் ஐந்து முதல் ஆறு வரையிலான வெண்மையான முட்டைகளை இடுகின்றன. ஆண் பெண் பறவைகள் இணைந்து முட்டையைப் பார்த்துக் கொள்கின்றன.

உசாத்துணை

[தொகு]
  1. ↑ BirdLife International (2016). "Merops leschenaulti". IUCN Red List of Threatened Species 2016: e.T22683761A92999153. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683761A92999153.en. https://www.iucnredlist.org/species/22683761/92999153. பார்த்த நாள்: 25 September 2021.
  2. ↑ தேடி வந்த பறவை இந்து தமிழ் திசை _ சனி, அக்டோபர் 26 2019

வெளியிணைப்புகள்

[தொகு]

பொதுவகத்தில் Chestnut-headed bee-eater பற்றிய ஊடகங்கள்