உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னை முத்துக்குமாரசுவாமி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை முத்துக்குமாரசுவாமி கோவில்
பெயர்
பெயர்:சென்னை முத்துக்குமாரசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
கோயில் தகவல்கள்
மூலவர்:முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

சென்னை முத்துக்குமாரசுவாமி கோவில் (Kandaswami Temple) அல்லது கந்தகோட்டம் (Kandakottam) என்பது சென்னையில் பாரிமுனை அருகிலுள்ளது. இது வள்ளலார் பாடிய தலமாகும். இது 1000 வருடங்களுக்கு மேல் பழமையான கோவில் என்று கூறப்படுகிறது.

வரலாறு.

[தொகு]

திருபோரூர் திருகோயிலின் வரலாற்றினை முதன் முதலாக அக் கோயிலின் குருக்களான சோமாசி குருக்கள் என்பவர் தம் மனைவிக்கு எடுத்துக் கூறினார். அதை உடனிருந்து கேட்டிருந்த சபாபதி குருக்கள் அந்த வரலாற்றினைப் பத்து விருத்தங்களாக எழுதி அவற்றை தமது பேரனான சோமாஸ்கந்த குருக்களிடம் கொடுத்தார். சோமாஸ்கந்த குருக்கள் அவ்வரலாற்றினை நன்கு கற்று தமக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளுக்கு வேதகிரி குருக்கள் என்பவர் முலம் விளக்கம் பெற்றார். சோமாஸ்கந்த குருக்கள் தம்முடைய மாணாக்கரான குளத்தூர் கோயில் கிருஷ்ணப்ப செட்டியாரை அழைத்து அவருக்கு ஆகமங்கள், புராணங்கள், சமயனுல்கள், சாத்திரங்கள் முதலியவற்றை கற்பித்து பின்பு தம் பாட்டனார் தமக்கு தந்த கந்த பெருமான் வரலாற்றைப் பற்றிய பத்து விருத்தப்பாக்கலையும் அவரிடம் தந்தார். அப்பாடல்களில் அமைந்துள்ள வரலாறுகள் எல்லோருக்கும் விளங்கும்படி வரகவி - கோயில் கிருஷ்ணப்ப செட்டியார் 206 விருத்தப்பாக்களில் சென்னை கந்தப்பெருமான் திருகோயிலின் தலபுராணத்தைப் பாடினார்.

கோவில் தெய்வங்கள்

[தொகு]
  • மூலவர்-கந்தசுவாமி
  • உற்சவர்-முத்துக்குமாரர்
  • தாயார்-வள்ளி, தெய்வானை
  • தல விருட்சம்-மகிழம்
  • தீர்த்தம்-சரவணப் பொய்கை
  • ஆகமம்/பூஜை-குமார தந்திரம்

முக்கிய திருவிழாக்கள்

[தொகு]
  • தை மாதம் 18 நாள் பிரதான திருவிழா[1]
  • கந்தசஷ்டி
  • வைகாசி வசந்த உற்சவம்
  • ஆடிக்கிருத்திகை
  • பங்குனி உத்திரம்.

கோவில் நேரம்

[தொகு]
  • காலை 6 மணி முதல் 12 மணி வரை
  • மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

கோவில் அமைவிடம்

[தொகு]

கோவில் அமைவிடம் https://www.google.com/maps/place/Kandhakottam+Temple/@13.0859894,80.2769728,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3a526f55ae087f47:0x92eea08e9b07a5e5!8m2!3d13.0859842!4d80.2791615?hl=en-US கோவில் வலைத்தளம் http://www.kandhakottam.tnhrce.in/ பரணிடப்பட்டது 2017-09-20 at the வந்தவழி இயந்திரம்

  1. http://temple.dinamalar.com/New.php?id=12