சென்காகு தீவு விவகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1978ஆம் ஆண்டு சப்பானின் சுற்றுலாத்துறையால் எடுக்கப்பட்ட சென்காகு தீவுகளில் ஒன்றான யோட்சுரி-ஜிமாவின் வான்வழி ஒளிப்படம்

சென்காகு தீவுகள் விவகாரம் (Senkaku Islands dispute) என்பது சப்பானியர்கள் சென்காகு என்றும், சீனர்கள் டயாயு என்றும் [1] தாய்வான் மக்கள் டியாயுதய் என்றும்[2] அழைக்கும் கிழக்கு சீன கடலில் உள்ள ஆளில்லாத் தீவுக்குழுமமான சென்காகு தீவுகளின் உரிமை குறித்தான பிணக்கு ஆகும். சப்பானின் ஆட்சியில் இருக்கும் இந்தத் தீவுக் குழுமத்தை சீன மக்கள் குடியரசும் (PRC) [3] சீனக் குடியரசும் (ROC)[4] உரிமை கொண்டாடி வருகின்றன. இத்தீவுகளை ஐக்கிய அமெரிக்கா 1945 முதல் 1972 வரை ஆக்கிரமித்திருந்தது.[5] இத்தீவுகளை அமெரிக்கா சப்பானிடம் ஒப்படைக்கும்போதே இரு சீன நாடுகளும் இத்தீவுகள் மீதான தங்கள் உரிமையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் முறையிட்டிருந்தன.[6] இத்தீவுகளில் உள்ள எண்ணெய், கனிம மற்றும் மீன்பிடி வளங்களுக்கு ஆளுமை உள்ள நாட்டிற்கு முழு அதிகாரம் கிடைக்கும் .[7] இத்தீவுகளின் உரிமை எந்த நாட்டிற்குரியது என்பதைக் குறித்து அமெரிக்கா அலுவல்முறையான அறிவிப்பை வெளியிடாதபோதும்[8] அமெரிக்காவிற்கும் சப்பானிற்கும் இடையே ஒப்பிட்ட இராணுவ உடன்பாட்டின்படி இத்தீவுகளை காக்க சப்பான் எடுக்கும் எந்த இராணுவ நடவடிக்கைக்கும் அமெரிக்கா துணை நிற்க வேண்டிய கட்டாயம் உள்ளது.[9]

செப்டம்பர் 2012இல் சப்பான் சர்ச்சைக்குரிய இத்தீவுக் குழுமத்தில் மூன்று தீவுகளை தேசியமயமாக்கியுள்ளது. இதனை அடுத்து சீனாவில் சப்பானுக்கெதிராக பெருமளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது .[10] சீனா,சப்பான் நாடுகளுக்கு இடையில் ஆண்டுக்கு $ 34,500 கோடி அளவுக்கு வணிகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீனாவில் உள்ள சப்பானின் தயாரிப்பு நிறுவனங்களின் ஆலைகள் மீது மக்கள் திடீர் தாக்குதல் நடத்திச் சூறையாடினர். சப்பானிய நிறுவனம் தயாரிக்கும் தானுந்துகள் பல இடங்களில் அடித்து நொறுக்கப்பட்டன. [11]

மேற்கோள்கள்[தொகு]

 1. Ogura, Junko (2010-10-14). "Japanese party urges Google to drop Chinese name for disputed islands". CNN World. CNN (US). http://articles.cnn.com/2010-10-14/world/japan.google.disputed.islands_1_diaoyu-islands-chinese-fishing-captain-senkaku-islands?_s=PM:WORLD. 
 2. Kristof, Nicholas (Sept. 10, 2010). "Look Out for the Diaoyu Islands". New York Times. பார்த்த நாள் Aug. 15, 2012.
 3. Netherlands Institute for the Law of the Sea (NILOS). (2000). International Organizations and the Law of the Sea, pp. 107-108. at கூகுள் புத்தகங்கள்
 4. Lee, Seokwoo et al. (2002). Territorial disputes among Japan, Taiwan and China concerning the Senkaku Islands, pp. 11-12. at கூகுள் புத்தகங்கள்
 5. By JOHN W. FINNEYSpecial to The New York Times (1971-11-11). "SENATE ENDORSES OKINAWA TREATY - Votes 84 to 6 for Island's Return to Japan - Rioters There Kill a Policeman Senate, in 84 to 6 Vote, Approves the Treaty Returning Okinawa to Japan - Front Page - NYTimes.com". Select.nytimes.com. பார்த்த நாள் 2012-08-20.
 6. http://www.ioc.u-tokyo.ac.jp/~worldjpn/documents/texts/JPCH/19720520.O1C.html
 7. "Japanese nationals land on disputed Senkaku islands". Zeenews.india.com. பார்த்த நாள் 2012-08-20.
 8. Philip J. Crowley, Remarks to the Press United States Department of State, 23 September 2010
 9. "U.S. says Senkaku Islands fall within scope of Japan-U.S. security treaty". Kyodo News. மூல முகவரியிலிருந்து 2012-07-15 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-08-20.
 10. "Anti-Japan protesters rally in Beijing". Agence France-Presse. Archived from the original on 2012-09-16. http://web.archive.org/web/20120916235209/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hlNEQu71YWu6gU5grASp4oCCtPMg?docId=CNG.94f2aee15fe6c666bf80f346b88c4ec4.71. 
 11. "சீனாவில் மக்கள் போராட்டம் ஜப்பான் நிறுவனங்கள் சூறை". தினகரன் (செப்டம்பர் 18, 2012). பார்த்த நாள் செப்டம்பர் 18, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]