செனகல் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செனகல் ஆறு
(பிரெஞ்சு: Fleuve Sénégal)
River
Senegal River Saint Louis.jpg
செனகலில் உள்ள செயின்ட்-லூயிசுக்கு வெளியே செனகல் ஆற்று முகத்திவாரக் கரையில் மீனவர்கள் நிற்கும் காட்சி
நாடுகள்  செனிகல்,  மூரித்தானியா

,  மாலி

நீளம் 1,086 கிமீ (675 மைல்)
வடிநிலம் 3,37,000 கிமீ² (1,30,116 ச.மைல்)
Discharge
 - சராசரி
செனகல் ஆற்று வடிநிலத்தைக் காட்டும் நிலப்படம்.
செனகல் ஆற்று வடிநிலத்தைக் காட்டும் நிலப்படம்.

செனகல் ஆறு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள 1,086 கிமீ (675 மைல்) நீளமான ஆறு ஆகும். பல நாடுகளை மருவிச் செல்லும் இது செனகலுக்கும், மௌரித்தானியாவுக்கும் இடையிலான எல்லையாகவும் உள்ளது.

புவியியல்[தொகு]

செனகல் ஆற்றின் தலைப்பகுதி கினியாவில் உற்பத்தியாகும் செமேஃபே, பாஃபிங் ஆகிய இரண்டு ஆறுகள். இவை மாலியில் உள்ள பாஃபூலாபேயில் ஒன்றாக இணையுமுன்னர் கினியா - மாலி எல்லையின் ஒரு பகுதியாகவும் அமைகின்றன. இங்கிருந்து செனகல் ஆறு மேற்கு நோக்கியும் பின்னர் வடக்கு நோக்கியும் சென்று கலூகோவுக்கு அண்மையில் உள்ள தலாரி மலையிடுக்கு ஊடாகச் செல்கிறது. பின்னர் கோயினா நீர்வீழ்ச்சி ஊடாகச் சென்று கயெஸ் வரை அமைதியாகச் செல்கிறது. அங்கு கொலிம்பினே ஆறு செனகலுடன் இணைகிறது. மாலி-மௌரித்தானியா எல்லையில் இது கராக்கோரோ ஆற்றுடன் இணைந்து அந்த எல்லை வழியே சில மைல்கள் தூரம் ஓடி பாக்கெல் என்னும் இடத்தை அடைகிறது. அங்கே பாலெமே ஆறு செனகல் ஆற்றுடன் இணைகிறது. அங்கிருந்து செனகல்-மௌரித்தானியா எல்லை வழியாக ஓடி அத்திலாந்திக் கடலில் கலக்கிறது.

செனகல் ஆறு 270,000 கிமீ2 பரப்பளவுடன் கூடிய வடிநிலத்தைக் கொண்டுள்ளதுடன், சராசரி நீரோட்டம் 680 மீ3/செக் ஆகவும், வருடாந்த நீர் வெளியேற்றம் 21.5 கிமீ3 ஆகவும் உள்ளது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செனகல்_ஆறு&oldid=2158801" இருந்து மீள்விக்கப்பட்டது