செட்டிகள்ளி வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செட்டிகள்ளி வனவிலங்கு சரணாலயம் (Shettihalli Wildlife Sanctuary) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும். இது 23 நவம்பர் 1974-ல் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.[1]

பலவகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்ட செட்டிகள்ளி வனவிலங்கு சரணாலயம் கர்நாடகாவின் சீமக்கா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இந்த சரணாலயத்தில் வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகுகள், சாவுக் குருவி மற்றும் வெள்ளை-வயிற்றுக் கரிச்சான் போன்ற விலங்குகளின் இருப்பிடமாக உள்ளது. புலிகள், நாகப்பாம்புகள், தேன் கரடி, சிறுத்தை, யானை, லாங்கர்கள் மற்றும் மலைப்பாம்புகள் போன்ற சில விலங்குகள் அடர்ந்த காடுகளில் வாழ்கின்றன.[2][3]

அமைவிடம்[தொகு]

செட்டிகள்ளி வனவிலங்கு சரணாலயம் 395.6 சதுர கி.மீ. பரப்பளவில் காணப்படுகிறது. இது மைய மண்டலம், இடையக மண்டலம் மற்றும் சுற்றுலா மண்டலம் என மூன்று பகுதிகள் அல்லது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] இது தீர்த்தஅள்ளியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள வானூர்தி நிலையம் மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள தொடருந்து நிலையம் சிமோகா தொடருந்து நிலையம் ஆகும். புகழ்பெற்ற ஜோக் அருவி இந்த சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Shettihalli Wildlife Sanctuary, Shimoga". Karnataka.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-07-29. பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.
  2. 2.0 2.1 "Shettihalli Wildlife Sanctuary, Shimoga". www.nativeplanet.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.
  3. "Shettihalli Wildlife Sanctuary". WildTrails | The One-Stop Destination for all your Wildlife Holidays (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-09-23. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.