செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி
அமைவிடம்
ஈரோடு, தமிழ் நாடு
தகவல்
தொடக்கம்1944
பள்ளி மாவட்டம்ஈரோடு
கல்வி ஆணையம்முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்
தரங்கள்ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை
பால்ஆண்கள் மட்டும்
மாணவர்கள்சுமார் 2,500
கல்வி முறைதமிழ்நாட்டு மாநில கல்வித்திட்டம்

செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு மாநகரில் அமைந்துள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாகும். ஆறாம் வகுப்பு முதல், பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பள்ளி செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.[1]

சிறப்புகள்[தொகு]

இப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படை போன்ற மாணவர்களுக்கான சேவை அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.[2] இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடத்தப் பெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sengunthar School History in their co-institution website". Archived from the original on 2011-10-12. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 17, 2012.
  2. "யெல்லோ பேஜஸ்". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 17, 2012.