உள்ளடக்கத்துக்குச் செல்

செங்காய் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்காய் ஏரி
அமைவிடம்செங்காய் நகரம், யாங்செங் கவுண்டி, யுன்னான்
வடிநிலப் பரப்பு228.9 km2 (88.4 sq mi)
வடிநில நாடுகள்சீனா
அதிகபட்ச நீளம்19.35 km (12 mi)
அதிகபட்ச அகலம்5.3 km (3 mi)
மேற்பரப்பளவு77.22 km2 (0 sq mi)
சராசரி ஆழம்25.7 m (84 அடி)
அதிகபட்ச ஆழம்35.1 m (115 அடி)
நீர்க் கனவளவு1.987 பில்லியன் கன சதுர மீட்டர்கள் (70.2×10^9 cu ft)
கடல்மட்டத்திலிருந்து உயரம்1,503 m (4,931 அடி)

செங்காய் ஏரி ( Chinese ) என்பது சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஒரு இடைநிலை ஊட்ட பீடபூமி ஏரியாகும். ஏரியின் மொத்தப் பரப்பளவு சுமார் 77.22 சதுர கிலோ மீட்டர்கள் (29.81 சதுர மைல்கள்) ஆகும். இந்த ஏரியின் சராசரி ஆழம் 25.7 மீட்டர்கள் (84 அடி), 1,503 மீட்டர்கள் (4,931 அடி) ஏற்றமும் கொண்டதாகும் . இந்த ஏரியின் நீர் சேமிப்பு திறன் சுமார் 19.87×10 8 மீ 3 ஆகும். சுருள்பாசி இயற்கையாகக் காணப்படும் உலகில் உள்ள மூன்று ஏரிகளில் செங்காய் ஏரியும் ஒன்றாகும். 

சூழலியல்[தொகு]

செங்காய் ஏரி குறிப்பிடத்தக்க மதுவம் பல்லுயிர் கொண்டதாக அறியப்படுகிறது; ஒரு ஆய்வு 8 வகைகளில் 22 இனங்களில் 64 மதுவ வகைகளை சேகரித்து அடையாளம் கண்டுள்ளது. [1] இந்த ஏரி ஒரு மூடிய சுற்றுச்சூழல் அமைப்பாகும், மேலும் இது இடைநிலை ஊட்ட, அதாவது இது உயிரியல் உற்பத்தியின் இடைநிலை அளவை ஆதரிக்கும் தன்மை கொண்டதாகும். [2] ஏரியில் நீர்வாழ் தாவரங்கள் குறைந்துள்ளன, ஒருவேளை மாசுபாடு, வாழ்விட அழிவு, ஊட்டஞ்செறிதல் (யூட்ரோஃபிகேஷன்) ஆகியவற்றின் விளைவுகளால் ஏற்பட்டிருக்கக் கூடும். [3]

மாசுபாடு[தொகு]

சீசியம்-137, ஒரு கதிரியக்க வீழ்பொருள் ஓரிடத்தான் இந்த ஏரியில் உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. Zhou, Xinli; Li, Zhiying; Yang, Liyuan; Dong, Minghua; Li, Shaolan (2011-04-01). "[Identification of yeasts isolated from Chenghai Lake, a plateau lake in Yunnan province"]. Wei sheng wu xue bao = Acta microbiologica Sinica 51 (4): 547–553. பன்னாட்டுத் தர தொடர் எண்:0001-6209. பப்மெட்:21796991. https://europepmc.org/article/med/21796991. 
  2. Xu, Yan; He, Shu; Peng, Jianfeng; Huang, Fei; Huo, Xumeng; Tu, Haiwen; Cai, Yanpeng; Huang, Xuena et al. (2022-08-01). "Mobile generalist species dominate the food web succession in a closed ecological system, Chenghai Lake, China". Global Ecology and Conservation 36: e02122. doi:10.1016/j.gecco.2022.e02122. பன்னாட்டுத் தர தொடர் எண்:2351-9894. https://www.sciencedirect.com/science/article/pii/S235198942200124X. 
  3. YunXian, Dong; ZhiWei, Tan; JunSong, Wang (2011). "Current status and evolution trend of aquatic vegetation in Chenghai Lake". Plant Diversity and Resources (Beijing) 33 (4): 451-457. பன்னாட்டுத் தர தொடர் எண்:2095-0845. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்காய்_ஏரி&oldid=3814447" இலிருந்து மீள்விக்கப்பட்டது