சுருள்பாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலப்பச்சைப்பாசி மாத்திரைகள்
உலர்ந்த நீலப்பச்சைப்பாசி
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
ஆற்றல்1,213 kJ (290 kcal)
23.9 கி
சீனி3.1 கி
நார்ப்பொருள்3.6 கி
7.72 கி
நிறைவுற்றது2.65 g
ஒற்றைநிறைவுறாதது0.675 g
பல்நிறைவுறாதது2.08 g
புரதம்
57.47 கி
டிரிப்டோபான்0.929 g
திரியோனின்2.97 g
ஐசோலியூசின்3.209 g
லியூசின்4.947 g
லைசின்3.025 g
மெத்தியோனின்1.149 g
சிஸ்டைன்0.662 g
பினைல்அலனின்2.777 g
தைரோசைன்2.584 g
வாலின்3.512 g
ஆர்கினைன்4.147 g
ஹிஸ்டிடின்1.085 g
அலனைன்4.515 g
அஸ்பார்டிக் அமிலம்5.793 g
குளூட்டாமிக் காடி8.386 g
கிளைசின்3.099 g
புரோலின்2.382 g
செரைன்2.998 g
உயிர்ச்சத்துகள்
உயிர்ச்சத்து ஏ
(4%)
29 μg
(3%)
342 μg
0 μg
தயமின் (B1)
(207%)
2.38 mg
ரிபோஃபிளாவின் (B2)
(306%)
3.67 mg
நியாசின் (B3)
(85%)
12.82 mg
(70%)
3.48 mg
உயிர்ச்சத்து பி6
(28%)
0.364 mg
இலைக்காடி (B9)
(24%)
94 μg
உயிர்ச்சத்து பி12
(0%)
0 μg
கோலின்
(13%)
66 mg
உயிர்ச்சத்து சி
(12%)
10.1 mg
உயிர்ச்சத்து டி
(0%)
0 IU
உயிர்ச்சத்து ஈ
(33%)
5 mg
உயிர்ச்சத்து கே
(24%)
25.5 μg
நுண்ணளவு மாழைகள்
மக்னீசியம்
(55%)
195 mg
மாங்கனீசு
(90%)
1.9 mg
பாசுபரசு
(17%)
118 mg
பொட்டாசியம்
(29%)
1363 mg
சோடியம்
(70%)
1048 mg
துத்தநாகம்
(21%)
2 mg
Other constituents
நீர்4.68 கி
Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database

சுருள்பாசி[1] (Spirulina) அல்லது நீலப்பச்சைப்பாக்டீரியா என அழைக்கப்படும் நுண்ணுயிரி சயனோபாக்டீரியா (Cyanobacteria) மனிதர்களாலும், விலங்குகளாலும் உண்ணத்தக்கவையாகும். முதன்மையாக, இரண்டு சயனோபாக்டீரியா இனங்கள் (ஆர்த்ரோஸ்பைரா பிளாட்டென்சிஸ், ஆர்த்ரோஸ்பைரா மேக்சிமா) உணவுக் குறைநிரப்பிகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் நீலப்பச்சைப்பாசி வளர்க்கப்படுகிறது. இவை, உணவுக் குறைநிரப்பிகளாகவும், முழு உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. நீலப்பச்சைப்பாசி மாத்திரைகளாகவும், அவலாகவும், பொடியாகவும் கிடைகின்றது. இவை மீன்வளர்ப்பிலும், மீன் காட்சியகங்கள், கோழிப்பண்ணைகளிலும் தீவனக் குறைநிரப்பியாகப் பயன்படுத்தப்படுகின்றது[2].

இது ஒன்றுக்கும் மேற்பட்ட செல்களால் ஆன நுண்ணிய உடல் அமைப்பு கொண்ட அர்த்ரோஸ்பைரா (Arthrospira) என்ற நீலப்பச்சைப்பாசி வகையைச் சேர்ந்த பாசியைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்தப் பாசி வகையை வெறும் கண்களால் பார்க்க இயலாது. இது ஓரளவு உப்பு மற்றும் காரத் தன்மை உடைய நீரில் வளரக்கூடியது. இதற்கு 1927-ம் ஆண்டு ஒரு செருமனிய அறிவியலாளரால் ஸ்பைருலினா என்று பெயரிடப்பட்டது. ஆனால் இப்பெயருக்கும் ஸ்பைருலினா என்ற பேரினத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. உலகம் முழுவதும் இதில் சுமார் 30,000 வகைகள் உள்ளன. இது பாசி வகையை சேர்ந்த புராதன உயிரினம். ஸ்பைருலினாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மனித உடலில் உள்ள செல்களால் சுலபமாக உறிஞ்சப்படும் நிலையில் உள்ளது.

மற்ற உணவுப் பொருள்களை விட அதிக புரதச்சத்து நிறைந்துள்ளது. இந்த பாசி உடல் ஆரோக்கியத்தை பெருக்கும் மிக முக்கியமான உணவாகத் திகழ்கிறது. அதனால், விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் இந்தப் பாசியையே உணவாக எடுத்துக் கொள்கின்றனர். மீன் உணவில் புரதச்சத்து அதிகம் இருப்பதற்கு அவை பாசிகளை முக்கிய உணவாகக் கொள்ளவதே காரணமாகும். இதை உணவாக பயன்படுத்தலாம்.

ஸ்பைருலினா கேப்சூல்: விண்வெளிக்கு செல்லும் விஞ்ஞானிகள், பல நாட்கள் அங்கு தங்கி ஆய்வு பணியில் ஈடுபடும் போது, சாப்பாட்டிற்கு பதிலாக, "ஸ்பைருலினா கேப்சூல்'கள் தான் உட்கொள்கின்றனர். இந்த "ஸ்பைருலினா' கண்டுபிடிக்கப்பட்டதற்கான காரணம், தென் ஆப்பிரிக்காவில் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது, மடகாஸ்கர் பகுதியில் உள்ளவர்கள், தண்ணீரை மட்டும் குடித்து உயிர் வாழ்ந்தனர். இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், தண்ணீரில் ஸ்பைருலினா என்ற பச்சைய பொருள் இருப்பதை கண்டனர். இதில் புரதம் 65%, கொழுப்பு 5%, கார்போஹைட்ரேட் 20% உள்ளது. மேலும், இதில் காமா-லினோலெனிக் அமிலமும் உள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "[பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா!]". https://www.vikatan.com/oddities/miscellaneous/150440-profitable-farming-business-spirulina. 
  2. Vonshak, A. (ed.). Spirulina platensis (Arthrospira): Physiology, Cell-biology and Biotechnology. London: Taylor & Francis, 1997.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருள்பாசி&oldid=3045183" இருந்து மீள்விக்கப்பட்டது