உள்ளடக்கத்துக்குச் செல்

சூல் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூல் விதியில் இரண்டு விதிகள் உள்ளன ; அவை மின்னோட்டத்தால் ஏற்படும் வெப்பத்தையும் , வெற்றிடத்தில் உள்ள வெப்ப அளவு , அழுத்தம் , கொள்ளளவு , ஆகியவற்றை சார்ந்த ஆற்றலையும் விளக்குகின்றன .

சூல் முதல் விதியை சூல் விளைவு என்றும் கூறுவர். இது ஒரு மின் கடத்தியில் பாயும் மின்னோட்டம் உருவாக்கும் வெப்பத்தை விளக்கும் இயற்பியல் விதி ஆகும். சூல் விதியின் படி , ஒரு கடத்தியில் உண்டாகும் வெப்ப ஆற்றலை பின்வருமாறு விளக்கலாம் ,

இதில் , Q என்பது t காலத்தில் R மின்தடை கொண்ட ஒரு கடத்தியில் பாயும் I மின்னோட்டத்தினால் ஏற்படும் வெப்பம் ஆகும் . இதன் அலகு சூல் ஆகும் . இதை சில நேரங்களில் சூல்-லென்சு விதி என்றும் அழைப்பார்கள் என்னென்றால் இதை பின்னாளில் கேயின்ரிச்சு லென்சு என்பவர் தனியாக கண்டறிந்தார் .

சூல் இரண்டாம் விதிப்படி ஒரு வளிமத்தில் ஏற்படும் உள்ளாற்றல் அதன் கொள்ளளவையோ , அழுத்தத்தையோ சார்ந்தவை இல்லை; அவை வெப்ப அளவை மட்டுமே சார்ந்ததாகும் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூல்_விதி&oldid=2742798" இலிருந்து மீள்விக்கப்பட்டது