சூப்பர் ஹியூமன் சாமுராய் சைபர் ஸ்குவாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செர்வோ

சூப்பர் ஹியூமன் சாமுராய் சைபர் ஸ்குவாட்(Superhuman Samurai Syber Squad) என்பது ஓர் அமெரிக்க தொலைக்காட்சித் தொடராகும். இது செப்டம்பர் 12 1994 முதல் ஜூலை 1995 வரை ABC என்ற அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஏறக்குறைய அதே காலகட்டத்தில் இந்தியாவிலும் தூர்தர்ஷனின் இரண்டாம் அலைவரிசையில் இந்தியாவிலும் ஒளிபரப்பப்பட்டது. இது மிகவும் புகழ்பெற்ற பவர் ரேஞ்சர்ஸ் தொடருடன் நெருங்கிய ஒற்றுமைகள் உடைய தொடராகும்.

இத்தொடர் ஜப்பானின் டென்கோ சோஜின் க்ரிட்மேன் என்ற தொலைக்காட்சித் தொடரின் ஆங்கிலத்தழுவலாகும்

கதைச்சுருக்கம்[தொகு]

கீலோக்கான் என்ற தீய சக்தி கணினியில் வாழ்ந்து வருகிறது. கீலோக்கான் மேல்கம் ஃபிராங்க் என்பவரின் உதவியுடன் மின்னணு அமைப்புகளை சீர்குலைக்க கணினி வைரஸ்களை உருவாக்குகிறான். ஒரு வித விபத்தினால், சாம் காலின்ஸ் என்பவன் கணினியுள் இழுக்கப்பட்டு செர்வோ என்ற மின்னணு உருவத்தில் மாறுகின்றார். இவனும் இவனது நண்பர்களும் அவர்களுடைய சாமுராய் வாகணங்களுடன் மின்னணு உலகில் நுழைந்து எவ்வாறு கீலோக்கானை எதிர்க்கின்றனர் என்பது தான் கதை. செர்வொவும் அவனது நண்பர்களின் வாகணங்களும் இணைந்து சூப்பர் ஹியூமன் சாமுராய் சைபர் ஸ்குவாட் ஆக உருமாறுகின்றனர்.

கதாப்பாத்திரங்கள்[தொகு]

சாமுராய் குழு[தொகு]

சாம் காலின்ஸும் அவனது நண்பர்களும் சாமுராய் குழு என்ற இசைக்குழுவை நடத்தி வருகின்றனர்.

  • சாம் காலின்ஸ் - இவனே இக்கதையின் நாயகன். சாம் காலின்ஸ் தன் கிட்டாரின் உதவியோடு செர்வோவாக உருமாறுகின்றான். "Let's Samuraize, Guys!" என்ற சொற்றொடரை சொல்லி கிட்டாரை வாசித்ததும் அவன் மிண்ணனு உலகத்தில் நுழைந்து விடுகிறான். அவனது கிட்டார் இல்லாத நிலையில் தன்னுடைய கைக்கடிகாரத்தின் மூலம் செர்வோவாக மாறுவான். இத்தொடரில் முடிவில், இவன் கீலோக்கானை அழித்தவுடன் நிரந்தரமாக செர்வோவாக மாறிவிடுகின்றான்.
  • டாங்கர் - இவர் டிரம்ஸ் வாசிப்பதில் வல்லவன். டாங்கர் மின்னனு உலகில் நுழைந்தவுடன் கருப்பு உடையுடனும் தலைக்கவசத்துடனும் காணப்படுகிறான். இவன் மின்னணு உலகத்தில் நுழைய "Let's Kick Some Giga-Butt!" என்ற சொற்றொடரைச்சொன்ன பிறகு டிரம்ஸை வாசிக்க வேண்டும்.
  • சிட்னீ "சிட்"ஃபாரஸ்டர் - சிட்னீ பியானோ வாசிப்பவள். இக்குழுவில் மிகவும் புத்திசாலி இவள் தான். இவள் நன்றாகவும் பாடக்கூடியவர்கள். "Pump Up the Power!" என்ற வாக்கியத்தைக்கூறி மேலே குத்தித்தவுடன் இவள் மின்னணு உலகில் நுழைகிறாள். சிட்னீ மின்னணு உலகில் இளஞ்சிவப்பு உடையுடனும் தங்க நிற தலைக்கவசத்துடனும் காணப்படுகிறாள்
  • ஆம்ப் ஈர் - ஆம்ப் பாஸ் இசைக்கருவி வாசிப்பவன். மின்னணு உலகத்தில் நுழைய மிகவும் நகைச்சுவையான வசனங்களை இத்தொடரில் இவன் கூறுவான். அவற்றுள் சில "Three For a Dollar!", "With a Cherry on Top!", "With a Side of Fries!", "Shake Well Before Using!", "Over the Lips, Past the Gums, Look Out Virus...Here We Comes!", "For Sam, Sydney, Tanker & Ms. Tilden!", "Two For a Dollar!". மின்னணு உலகில் இவன் ஹெலிகாஃப்டர் தலைக்கவசத்துடனும் தோல் சட்டையுடன் காணப்படுவான் * லக்கி லண்டன் - லக்கி அலையேற்றம்(Surfing) செய்பவன். இத்தொடரின் ஆம்ப்க்கு பதிலாக பிற்பகுதியின் இவன் சேர்க்கப்பட்டான். இவன் மின்னணு உலகை நுழைய "Surf's Up!" எனக்கூறுவான்.

வில்லன்கள்[தொகு]

  • மேல்கம் ஃப்ராங்க் - மேல்கம் எப்போதும் தனிமையே இருப்பவன். சாமும் அவனது நண்பர்களும் செல்லும் அதே உயர்நிலைப்பள்ளியில் படிப்பவன். மேல்கம் பிறரை துன்புறுத்து மகிழ்ச்சி அடைபவன். இவனே கீலோக்கானூக்காக பலவிதமான கணினி வைரஸ்களை உருவாக்குகின்றான்.
  • கீலோக்கான் - கிலோக்கான் ஒரு ராணுவ செயற்கை மதி(artificial intelligence) நிரலி ஆவான். இவனே மால்கம் வடிமைக்கும் வைரஸ்களுக்கு உயிர் கொடுக்கின்றான். அந்த வைரஸ்களை உலகத்தின் கணினி அமைப்புகளை அழிக்க ஏவுகின்றான். கீலோக்கான் தன்னையே மின்னணு உலகத்தின் அரசன் நினைத்துக்கொள்கிறேன். மேலும் மின்னணு உலகத்தில் தொடங்கி இவ்வுலகம் முழுவதை தன் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என நினைக்கின்றான்.

பிற கதாப்பாத்திரங்கள்[தொகு]

  • ஜெனீஃபர் "ஜென்" டாயல் - இவள் சாமின் காதலி ஆவாள். மேல்கமும் இவள் மீது காதல் கொண்டுள்ளான்.
  • எலிசபத் "லிஸ்" காலின்ஸ் - சாமின் தங்கை. இவள் தொடரில் காணப்படாத ஒரு கதாப்பாட்திரம். எனினும் இவளின் குரல் மட்டும் அவ்வப்போது இத்தொடரில் தோன்றும்.
  • சா-சா-ரிம்பா ஸ்டார்க்கீ - பள்ளியின் உணவகத்தின் ஊழியர். இவள் கணக்கற்ற கணவர்களையும் அவர்களையும் பலமுறை விவாகரத்து செய்தவாளாக நகைச்சுவையாக சித்தரிக்கப்படுகிறாள்


அங்கங்கள்[தொகு]

இத்தொடரில் 53 அங்கங்கள் ஒளிபரப்பப்பட்டன. இது சனிக்கிழமை அதிகாலையில் ABC தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. எனினும் இது பவர் ரேஞ்சர்ஸ் தொடரைப் போல அவ்வளவாக புகழ்பெறவில்லை. இருந்தாலும் ஜப்பானிய மொழியின் மூல க்ரிட்மேன் தொடரை விட நீண்ட காலத்துக்கு ஒளிபரப்பட்டது. கிரிட்மேன் தொடர் வெறும் 39 அங்கங்கள் வரையே நீடித்தது.