பவர் ரேஞ்சர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பவர் ரேஞ்சர்ஸ் (Power Rangers) என்பது சாகசத்தனம் நிறைந்த சூப்பர்ஹீரோ நெடுந்தொடராகும். இது ஜப்பானிய தொடரான சூப்பர் சென்டாய்யை தழுவி எடுக்கபடுகிறது. இது அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் திரையிடப்பட்டு, பின்னர் பல்வேறு மொழிகளில் டப்பிங் முறையில் வெளியானது. இது பல பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் ஒரு தனிக் கதையுடன், தொடராக வெளிவந்துள்ளன. தமிழ் மொழி இந்திய பிராந்தியத்தில் இந்த தொடர் மார்ச் 2009 இல் சுட்டி டிவி மற்றும் டிஸ்னி எக்ஸ்டி இல் ஒளிபரப்பப்பட்டது.

ஒளிபரப்பு[தொகு]

இந்தியாவில் ஜெட்டிக்ஸ் என்ற தொலைக்காட்சியில் வெளியானது. தமிழிலும் டப்பிங் முறையில் வெளியானது.[1]

விவரம்[தொகு]

பவர் ரேஞ்சர்ஸ் தொடர்களில் பொதுவான ஒரு கதைக் களம் இருக்கும். நாயகர்களான ரேஞ்சர்கள் தீயவர்களை அழிப்பதே கதை. இவர்களுக்கு வண்ண உடைகள் இருக்கும். தங்களுக்கு தரப்பட்ட உருமாற்றியை(Morpher) பயன்படுத்தி வண்ண உடையணிந்த ரேஞ்சர்களாக மாறுவர். இவர்களுக்கு ஆயுதங்களும் சக்திகளும் இருக்கும். தீயவர்களை கூட்டாகவும், தனித் தனியாக அழிப்பர். ஒவ்வொரு தொடருக்கு ஏற்ப தனிக் கதை இருக்கும்.

திரைப்படங்கள்[தொகு]

  • மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ் திரைப்படம்
  • டர்போ பவர் ரேஞ்சர்ஸ் திரைப்படம்

தொடர்கள்[தொகு]

மைட்டி மார்ஃபினில் தொடங்கி இன் ஸ்பேஸ் வரை வெளிவந்த ஆறு பருவங்களும் முந்தைய பருவத்தின் நேரடி தொடர்ச்சியாகவே இருந்தன. அதன் பிறகு வந்த பருவங்கள் அனைத்தும் தனித்துவமான கதையம்சத்தைக் கொண்டு இருந்தன.

பவர் ரேஞ்சர்ஸ் தொடர்களின் பட்டியல்,[2]

இதையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவர்_ரேஞ்சர்ஸ்&oldid=2527432" இருந்து மீள்விக்கப்பட்டது