சூனி தாராபோரேவாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூனி தாராபோரேவாலா
2010 இல் சூனி தாராபோரேவாலா
பிறப்பு1957 (அகவை 66–67)
மும்பை
தேசியம்இந்தியா
பணிதிரைக்கதை எழுத்தாளர், புகைப்படக் கலைஞர் ,திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1988–தற்போது வரை

சூனி தாராபோரேவாலா (Sooni Taraporevala பிறப்பு 1957) ஓர் இந்தியத் திரைக்கதை எழுத்தாளர், புகைப்படக் கலைஞர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார், இவர் மிசிசிப்பி மசாலா, த நேம்சேக் மற்றும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சலாம் பாம்பே ஆகியவற்றின் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்! (1988), இவை அனைத்தையும் இயக்கியவர் மீரா நாயர் .[1] நெற்ஃபிளிக்சுவில் யே பலேட் எனும் திரைப்படத்தை எழுதி இயக்கினார்.

2007 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், லிட்டில் ஜிசோ எனும் கதைப் படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கினார்.[2] இந்தப் படம் அவர் சார்ந்த பார்சி சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றியது. 2010 இல் லிட்டில் ஜிசோ குடும்ப மதிப்புகள் பற்றிய சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது.[3]

2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது [4] அவர் அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் உறுப்பினராக உள்ளார். இவரது புகைப்படங்கள் தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி (என்ஜிஎம்ஏ) மற்றும் நியூயார்க்கில் உள்ள பெருநகரக் கலை அருங்காட்சியகம் ஆகியவற்றின் நிரந்தர சேகரிப்பில் உள்ளன.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

தாராபோரேவாலா 1957 இல் மும்பையில் ஒரு பார்சி குடும்பத்தில் பிறந்தார். மும்பை குயின் மேரி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டதாரியாக சேர முழு உதவித்தொகை பெற்றார். இவர் ஆங்கிலம் மற்றும் அமெரிக்க இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஆல்ஃபிரட் குஸ்ஸெட்டி கற்பித்த திரைப்படத் தயாரிப்பு உட்பட பல திரைப்படப் படிப்புகளைப் பயின்றார்.[5] இவர் மீரா நாயரை இளங்கலைப் பட்டதாரியாக இருந்தபோது சந்தித்தார். இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சினிமா ஆய்வுத் துறையில் சேர்ந்தார், மேலும் 1981 இல் திரைப்படக் கோட்பாடு மற்றும் விமர்சனத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, சார்பிலா புகைப்படக் கலைஞராகப் பணியாற்ற இந்தியா திரும்பினார்.[6][7][8] இவர் 1988 இல் லாஸ் ஏஞ்சல்சுக்குத் திரும்பினார் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றினார், யுனிவர்சல், எச்பிஓ மற்றும் டிஸ்னி உள்ளிட்ட பல்வேறு படமனைகளுக்கு நியமிக்கப்பட்ட திரைக்கதைகளை எழுதினார். அவர் 1992 இல் இந்தியாவுக்குத் திரும்பினார்.

சான்றுகள்[தொகு]

  1. Viets, Alexandra (12 October 1994). "From Hollywood Back to Bombay". The New York Times. https://www.nytimes.com/1994/10/12/style/12iht-soon.html. 
  2. "The Serious Laugh Junkie". Tehelka. 7 March 2009. Archived from the original on 30 June 2010. பார்க்கப்பட்ட நாள் 19 நவம்பர் 2021. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. The Hindu. https://www.thehindu.com/features/cinema/President-confers-56th-National-Film-Awards/article16577085.ece. 
  4. Das, Soma (16 October 2015). "'Life's all about taking risks' : Filmmaker-author Sooni Taraporevala". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/art-and-culture/life-is-all-about-taking-risks-says-filmmaker-author-sooni-taraporevala/story-nSvKqc7EJbSVvt699bEqvO.html. 
  5. Tree A. Palmedo (30 October 2012). "Portrait of an Artist: Sooni Taraporevala". The Harvard Crimson. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013.
  6. "Biography". Archived from the original on 2018-08-20. பார்க்கப்பட்ட நாள் 2021-11-19. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. "I was called a rudderless ship". Tehelka. 16 October 2004. Archived from the original on 11 September 2012. பார்க்கப்பட்ட நாள் 19 நவம்பர் 2021. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  8. Sooni was everywhere, doing everything! Rediff.com, 6 April 2001.

வெளி இணைப்புகள்[தொகு]

:

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூனி_தாராபோரேவாலா&oldid=3792573" இலிருந்து மீள்விக்கப்பட்டது