சுவாமி ஆனந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுவாமி ஆனந்த் (Swami Anand) (1887 - 25 ஜனவரி 1976) ஒரு துறவி, காந்திய ஆர்வலர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த குஜராத்தி எழுத்தாளர் . நவஜீவன் மற்றும் யங் இந்தியா போன்ற காந்தியின் வெளியீடுகளின் மேலாளராகவும், காந்தி தனது சுயசரிதையான சத்திய சேரதனையை எழுதவும் ஊக்கப்படுத்தியதற்காக அவர் நினைவுகூரப்படுகிறார். [1] அவர் நினைவுக் குறிப்புகள், சுயசரிதைகள், தத்துவம், பயணக் குறிப்புகள் மற்றும் சில படைப்புகளை மொழிபெயர்த்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சுவாமி ஆனந்த் வாத்வான் அருகே சியானி கிராமத்தில் 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் பிறந்தார். இவர் ஒளதிச்ய பிராமண குடும்பத்தில் ராமச்சந்திர தேவ் (திவேதி) மற்றும் பார்வதி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை ஒரு ஆசிரியர். இவருடன் ஏழு பேர் உடன் பிறந்தோர் ஆவர்.[2] அவர் மும்பையில் வளர்ந்தார். மும்பையில் கல்வி பயின்றார். தனது பத்து வயதில், திருமணத்தை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் அவருக்கு கடவுளைக் காட்டுவதாக ஒரு துறவி அளித்த வாக்குறுதியின் காரணமாக, அவர் பல்வேறு துறவிகளுடன் மூன்று ஆண்டுகள் அலைந்து திரிந்தார். அவர் தனது பதின்பருவத்திலேயே துறவு வாழ்க்கை வாழப்போவதாக சபதம் செய்தார். சுவாமி ஆனந்தானந்த் என்ற பெயரைப் பெற்றார், இராமகிருசுண இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு துறவியானார். அவர் தன் கல்விக்காக தங்கியிருந்த அத்வைத ஆசிரமத்திலும் வசித்து வந்தார். [3] [4]

1905 ஆம் ஆண்டில் வங்காள புரட்சியாளர்களுடனான அவரது தொடர்பு மூலம் ஆனந்த் இந்திய சுதந்திர இயக்கத்தில் நுழைந்தார். பின்னர், 1907ஆம் ஆண்டில் பால கங்காதர திலகரால் நிறுவப்பட்ட மராத்தி செய்தித்தாளான கேசரியில் பணியாற்றினார். [5] [6] கிராமப்புறங்களில் சுதந்திர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். அதே காலகட்டத்தில் மராத்தி நாளேடான ராஷ்டிரமத்தின் குஜராத்தி பதிப்பையும் அவர் தொகுத்துள்ளார். அந்த நாளேடு மூடப்பட்டபோது, அவர் 1909 ஆம் ஆண்டில் இமயமலையில் பயணம் செய்தார். 1912 ஆம் ஆண்டில், அன்னி பெசன்ட் அம்மையார் அவர்களால் அல்மோடாவில் நிறுவப்பட்ட ஹில் பாய்ஸ் பள்ளியில் கற்பித்தலில் ஈடுபட்டார். [7]

காந்தியின் கூட்டாளர்[தொகு]

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய மறுநாளே காந்தி 1915 ஜனவரி 10 அன்று பம்பாயில் ஆனந்தை சந்தித்தார். [8] காந்தி தனது வார இதழான நவஜீவனை அகமதாபாத்தில் இருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கினார். அதன் தொடக்க வெளியீடு செப்டம்பர் 1919 இல் வெளிவந்தது, விரைவில் பணிச்சுமை அதிகரித்தது. இந்தச் சூழ்நிலையில்தான் ஆனந்தை பதிப்பகத்தின் மேலாளராகப் பணிபுரிய காந்தி அழைத்தார். சுவாமி ஆனந்த் 1919 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அதன் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டார். அவர் ஒரு நல்ல தொகுப்பாசிரியர் மற்றும் மேலாளர் என்பதை நிரூபித்தார். யங் இந்தியா தொடங்கப்பட்டபோது, அவர் பதிப்பகத்தை பெரிய வளாகத்திற்கு மாற்றினார். முகமது அலி ஜவஹர் நன்கொடையளித்த அச்சிடும் கருவிகளுடன், அதன் வெளியீடு தொடங்கியது. 1922 ஆம் ஆண்டில் மார்ச் 18 அன்று, யங் இந்தியாவில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரைக்காக அந்தக் கட்டுரையின் பதிப்பாளர் என்ற முறையில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். [9] [10]

காந்தியின் சுயசரிதை 1925 - 1928 முதல் நவ்ஜீவனில் தொடராக வெளிவந்தது. இது சுவாமி ஆனந்தின் வற்புறுத்தலின் பேரில் காந்தியால் எழுதப்பட்டது. இந்த அத்தியாயங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு யங் இந்தியாவிலும் பகுதி பகுதியாக வெளிவந்தது. [11] [12] பின்னர், 1926 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் உள்ள சத்தியாகிரக ஆசிரமத்தில் காந்தி அளித்த பேச்சுக்களின் அடிப்படையில் காந்தியின் பார்வையில் பகவத் கீதை வெளியிடப்பட்டது.[13] இந்த படைப்பையும் எழுத காந்தியை ஊக்குவிப்பதில் சுவாமி ஆனந்த் ஒரு பங்கைக் கொண்டிருந்தார்.

1928 ஆம் ஆண்டு பர்தோலி சத்தியாக்கிரகத்தின் போது வல்லபாய் படேலின் செயலாளராக இருந்தார். 1930 ஆம் ஆண்டில், பம்பாயில் உள்ள வைல் பார்லேயில் உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றதற்காக மீண்டும் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 1933 இல் விடுவிக்கப்பட்டபோது, பழங்குடியினரின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Autobiography". 12 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
 2. Chandrakant Sheth (1999). Swami Anand: Monograph. New Delhi: Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8126003790. https://books.google.com/books/about/Swami_Anand.html?id=YWWZ0GjoWIEC&redir_esc=y. 
 3. Lal, Mohan (1992). The Encyclopaedia of Indian Literature (Volume Five (Sasay To Zorgot), Volume 5. New Delhi: Sahitya Akademi. பக். 4253, 4254. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126012213. https://books.google.com/?id=KnPoYxrRfc0C&pg=PA4253. 
 4. Venkatraman, T. (2007). Discovery of Spiritual India. Jersey City: lulu.com. பக். 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781435704725. https://books.google.com/?id=Xd_rc7vWaEQC&pg=PA139&lpg=PA139&dq=%22Swami+Anand%22+gandhi#v=onepage&q=%22Swami%20Anand%22%20gandhi&f=false. 
 5. Brahmabhatt, Prasad. અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ (ગાંધીયુગ અને અનુગાંધી યુગ). Parshwa Publication. 
 6. "Gandhiji's Associates in India". 25 அக்டோபர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 October 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 7. Sheth, Chandrakant. Swami Anand: Monograph. Sahitya Akademi. https://books.google.com/books/about/Swami_Anand.html?id=YWWZ0GjoWIEC&redir_esc=y. 
 8. "Chronological Sketch of Gandhi in Bombay". 13 ஆகஸ்ட் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 October 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 9. Gandhi – Ganga. http://www.mkgandhi.org/ebks/gganga.pdf. 
 10. Swami Anand: Monograph. https://books.google.com/books/about/Swami_Anand.html?id=YWWZ0GjoWIEC&redir_esc=y. 
 11. "THE STORY OF MY EXPERIMENTS WITH TRUTH by Mohandas K. Gandhi". 12 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Autobiography". 12 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
 13. The Bhagavad Gita According to Gandhi. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_ஆனந்த்&oldid=3245647" இருந்து மீள்விக்கப்பட்டது