உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாத் ஆறு

ஆள்கூறுகள்: 34°07′N 71°43′E / 34.117°N 71.717°E / 34.117; 71.717
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாத் ஆறு
سوات
ஆறு பாயும் வழி (interactive map)
அமைவு
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
மாவட்டம்சுவாத்
சிறப்புக்கூறுகள்
மூலம்இந்து குஃசு மலைத்தொடர்
Source confluenceஉசோ மற்றும் கப்ரால் ஆறுகள்
 ⁃ அமைவுகலாம்
முகத்துவாரம்காபூல் ஆறு
 ⁃ அமைவு
சர்சத்தா
நீளம்240 km (150 mi)
வடிநில அளவு13,000 km2 (5,000 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுமுண்டா
 ⁃ சராசரி280 cubic m/s
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுஉசு கவார், பசிக்ராம் கவார்
 ⁃ வலதுதரல் கவார்,கப்ரால் கவார்

சுவாத் ஆறு (Swat River) பாக்கித்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் பாயும் ஓர் வற்றாத ஆறாகும். இந்து குஃசு மலைகளின் உயர் பனிப்பாறை பள்ளத்தாக்குகளிலிருந்து உருவாகும் இது பரந்த சுவாத் பள்ளத்தாக்கை செழிப்பாக்குவதற்கு முன்பு அழகிய கலாம் பள்ளத்தாக்கில் பாய்கிறது. இது வடக்கு பாக்கித்தானில் ஒரு முக்கியமான சுற்றுலா தலமாகவும், முன்னாள் கோட்டையாகவும் உள்ளது. புராதன காந்தாரப் பகுதி, ஏராளமான புராதன பௌத்த தளங்கள் இப்பகுதியில் சிதறிக்கிடக்கின்றன.

பெயர்

[தொகு]

சமசுகிருதத்தில் "தெளிவான நீல நீர்" என்று பொருள்படலாம். [1] மற்றொரு கோட்பாடு சுவாத் என்ற சொல் சமசுகிருத வார்த்தையான சுவேதா என்ற சொல்லிருந்து உருவாகியிருக்கலாம். இச்சொல் ஆற்றின் தெளிவான நீரை விவரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. [2] பண்டைய கிரேக்கர்களால், இந்த ஆறு சோஸ்டஸ் என்று அழைக்கப்பட்டது.[3] [4] [5] [2] சீன யாத்ரீகர் பாசியான் இதனை சு-ஹோ-டு என்று குறிப்பிடுகிறார். [6]

ஆதாரம்

[தொகு]

சுவாத்திற்கான நீர் ஆதாரம் இந்து குஃசு மலைகளில் ஆர்ம்பாகிறது. இங்கிருந்து ஆண்டு முழுவதும் பனிக்கட்டி நீராக மாறி பாய்கிறது. ஆறு கோகிஸ்தானின் உயரமான பள்ளத்தாக்குகளில் இருந்து, உசோ மற்றும் கப்ரால் ஆறுகள் (உத்ரர் நதி என்றும் அழைக்கப்படுகிறது) கலாமில் சங்கமிக்கும் இடத்தில் தொடங்குகிறது. அங்கிருந்து,ஆறு கலாம் பள்ளத்தாக்கின் குறுகிய பள்ளத்தாக்குகள் வழியாக மத்யான் நகரம் வரை பாய்கிறது. அங்கிருந்து சக்தாரா வரை கீழ் சுவாத் பள்ளத்தாக்கின் சமவெளிப் பகுதிகள் வழியாக 160 கிமீ தூரம் மெதுவாக ஓடுகிறது. பள்ளத்தாக்கின் தீவிர தெற்கு முனையில், ஆறு ஒரு குறுகிய பள்ளத்தாக்கில் நுழைந்து, பெசாவர் பள்ளத்தாக்கிற்குள் நுழைவதற்கு முன், கலங்கியில், பஞ்ச்கோரா ஆற்றில் இணைகிறது. இது இறுதியாக சார்சடாவிற்கு அருகிலுள்ள காபூல் ஆற்றில் முடிவடைகிறது.

வெளியேற்றம்

[தொகு]

முண்டா என்ற இடத்தில் வினாடிக்கு சராசியாக 280 கன மீட்டர் நீர் வெளியேறுகிறது. [7]

பொருளாதாரத் தாக்கம்

[தொகு]

பள்ளத்தாக்கின் பொருளாதாரத்தில் சுவாத் ஆறு முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாத் மற்றும் மலகண்ட் பள்ளத்தாக்கின் கீழ் பகுதிகள் 1903 [8] ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அமந்தரா தொடர் கால்வாய்களால் பாசனம் பெறுகின்றன.

கால்வாய் 1914 இல் முடிக்கப்பட்ட பெண்டன் சுரங்கப்பாதை வழியாக மலகண்ட் கணவாய்க்கு அடியில் பாய்கிறது. தர்காயின் கீழே, 1921 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கால்வாய்கள், [9] பெசாவர் பள்ளத்தாக்கில் உள்ள சார்சத்தா, சுவாபி மற்றும் மர்தான் மாவட்டங்களில் பல சிறிய கால்வாய்களுக்கு நீர் ஆதாரத்தை வழங்குகிறது.

புகைப்படங்கள்

[தொகு]

இதனையும் பார்க்கவும்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. Susan Whitfield (2018). Silk, Slaves, and Stupas: Material Culture of the Silk Road. University of California Press. p. 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-95766-4.
  2. 2.0 2.1 Sultan-i-Rome (2008). Swat State (1915–1969) from Genesis to Merger: An Analysis of Political, Administrative, Socio-political, and Economic Development. Oxford University Press. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-547113-7.
  3. Edward Herbert Bunbury. A history of ancient geography among the Greeks and Romans. J. Murray.
  4. Arrian. Alexander the Great: The Anabasis and the Indica. OUP Oxford. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-958724-7.
  5. Saxena. Geographical Survey of the Purāṇas: The Purāṇas, a Geographical Survey. Nag Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7081-333-0.
  6. Rienjang. The Geography of Gandhāran Art: Proceedings of the Second International Workshop of the Gandhāra Connections Project, University of Oxford, 22nd-23rd March, 2018. Archaeopress. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78969-187-0.
  7. "Feasibility study on the development of Munda Dam multipurpose project in Islamic Republic of Pakist an : final report ; Vol. 3. -Supporting report" (PDF). Japan International Cooperation Agency : Nippon Koei Co., Ltd. : Nippon Giken Inc.
  8. "History". www.wapda.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 2021-04-22.
  9. Report, Bureau (2010-08-28). "Munda Headworks restored in record time". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-22.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சுவாத் ஆறு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாத்_ஆறு&oldid=3774223" இலிருந்து மீள்விக்கப்பட்டது