சுவாதி சிங் (சட்டமன்ற உறுப்பினர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாதி சிங் (Swati Singh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச அரசின் .பெண் நலன் வெளிநாடு வாழ் இந்தியர், வெள்ளக் கட்டுப்பாடு, விவசாய ஏற்றுமதி, வேளாண் சந்தைப்படுத்தல், வேளாண் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் குடும்ப நலம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் மாநில அமைச்சராக உள்ளார்.

கல்வி[தொகு]

அரசியல் வாழ்க்கை[தொகு]

செப்டம்பர் 2016-ல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியைப் பற்றி சுவாதி சிங் கணவர் தயாசங்கர் சிங் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், தயாசங்கர் சிங் பாரதிய ஜனதா கட்சி மற்றும் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு வெளியேற்றப்பட்டார். இதன் பிறகு தீவிர அரசியலுக்குச் சுவாதி சிங் வந்தார். 12 மார்ச் 2017 அன்று, பாஜக இவரது கணவரின் வெளியேற்றத்தைத் திரும்பப் பெற்றது.[1]

2017ஆம் ஆண்டில், சுவாதி சிங் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக இலக்னோவின் சரோஜனி நகரிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் இவர் 1,08,506 வாக்குகள் பெற்றார்.[2] இவர் முதல்வர் யோகி ஆதித்தியநாத்தின் அமைச்சரவையில் மாநில அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

வெளிநாட்டுவாழ் இந்தியர், வெள்ளக் கட்டுப்பாடு, வேளாண்மை சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி, பெண்கள் நலன், தாய் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டார்.[3]

சுவாதி சிங், அக்டோபர் 2016 முதல் பிப்ரவரி 2018 வரை பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் பிரிவான உத்தரப் பிரதேச பாஜக மகிளா மோர்ச்சாவின் தலைவராகவும் பணியாற்றினார்.[4][5]

நவம்பர் 2019-ல், அன்சல் கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான முதல் தகவல் அறிக்கையினை கைவிடுமாறு இலக்னோவில் காவல்துறை அதிகாரியை இவர் மிரட்டியதாகக் கூறப்படும் ஒலி வடி துண்டு வெளியிடப்பட்ட வழக்கில் இவர் சிக்கினார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "BJP revokes expulsion of newly-elected MLA Swati Singh's husband – Times of India". indiatimes.com.
  2. "Latest news of Uttar Pradesh. Breaking news of Uttar Pradesh in Hindi at Dainik Bhaskar". www.bhaskar.com. Archived from the original on 2015-01-19.
  3. "CM Yogi Adityanath keeps home, revenue: UP portfolio allocation highlights", ஹிந்துஸ்தான் டைம்ஸ், 22 March 2017
  4. "स्वाति सिंह बनी भाजपा महिला मोर्चा की प्रदेश अध्यक्ष" (in Hindi). Patrika. https://www.patrika.com/lucknow-news/swati-singh-is-mahila-morch-pradesh-adyaksh-1416105/. 
  5. "मायावती पर निशाना साधने वाली स्वाति सिंह बनी भाजपा महिला मोर्चा की प्रदेश अध्यक्ष" (in Hindi). Amar Ujala. https://www.amarujala.com/lucknow/swati-singh-becomes-chief-of-bjp-mahila-morcha. 
  6. "UP Minister Swati Singh Asks Cop to Drop FIR Against Builder, Hauled up by Yogi After Audio Clip Goes Viral" (in English). news18. https://www.news18.com/news/india/up-minister-swati-singh-asks-cop-to-drop-fir-against-builder-hauled-up-by-yogi-after-audio-clip-goes-viral-2389177.html.