சுழற்சி அளவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயந்திரம் ஒவ்வொரு நிமிடத்திற்கும் மேற்கொள்ளும் சுழற்சிகளின் எண்ணைக் (ஒவ்வொரு நிமிட சுழற்சிகள்) காட்டும் சுழற்சி அளவி, மற்றும் 6000 முதல் 7000 வரையான ஒவ்வொரு நிமிட சுழற்சியைக் தனிப்படுத்திக் காட்டும் சிகப்புக் கோடு.

சுழற்சி அளவி, வேகமானி (Tachometer, சுற்றெண்ணி , சுழற்சிவீதமானி , அல்லது ஒவ்வொரு நிமிடத்திற்கும் மேற்கொள்ளும் சுழற்சியைக் கணக்கிடும் மானி ) போன்ற அனைத்துச் சொற்களும் ஒரு இயக்கி அல்லது அது போன்ற கருவியின் சுழலும் இரும்புத்தண்டு அல்லது தட்டு மேற்கொள்ளும் சுழற்சியின் வேகத்தை குறிப்பதாகும். இக்கருவி பொதுவாக கருவியின் அளவு திருத்திய தொடரியம் அழைப்பியில், இயந்திரம் ஒவ்வொரு நிமிடத்திற்கும் மேற்கொண்ட சுழற்சிகளின் அளவை (RPM) எடுத்துக்காட்டும், ஆனால் இன்றைய நாட்களில் எண்முறைக் காட்சி (டிஜிட்டல் டிஸ்ப்ளே) கொண்ட அழைப்பிகளும் மிகையாக பயன்பாட்டில் உள்ளன. இந்தப்பதமானது கிரேக்க மொழிச் சொல்லான Ταχος , tachos , "வேகம்", மற்றும் மெட்ரோன் (metron) , "அளப்பது" என்ற இரு சொற்களையும் இணைத்து, மேலே கூறப்பட்டுள்ள பொருளைச் சுட்டுகிறது.

வரலாறு[தொகு]

முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட பொறியியல் சுழற்சி அளவிகள் மையவிலக்கு விசை. அடிப்படையாகக் கொண்டு அளவிடும் முறையை பின்பற்றியதாகும், எடுத்துக்காட்டாக மைய விலக்கு ஆள்வான் போன்ற கருவிகளின் செயல்பாட்டை ஒத்ததாகும். இந்தக்கருவியைக் கண்டுபிடித்தவர் ஜெர்மன் நாட்டு பொறியாளரான டீட்ரிக் உஹ்ல்ஹோர்ன் (Dietrich Uhlhorn) என்று நம்பப்படுகிறது; அவர் 1817 ஆம் ஆண்டில் அதனை இயந்திரங்களின் வேகத்தைக் கண்டறிய பயன்படுத்தினார். 1840-ம் ஆண்டிலிருந்து, இக்கருவி தொடர் வண்டிகள் இயக்கப்படும் வேகத்தைக் கண்டுபிடிக்கப் பயன்படுகிறது.

வேகமானியின் பயன்பாடு[தொகு]

செஸ்ன 172 வின் G1000 சுழற்சி அளவி (1,060 ஒவ்வுறு நிமிட சுழற்சிகள்) மற்றும் இயந்திர மணி நேரங்கள் (1736.7 மணிகள்)

தானியங்கிகள், வானூர்திகள், மற்றும் இதர வண்டிகளில் பொருத்தப்பட்ட சுழற்சி அளவிகள் அல்லது சுழற்சி பரிமாற்றகங்கள் அந்த வண்டிகளை உந்திச்செல்லும் கருவிகளின் மாற்றிதண்டு சுழலும் அளவை அளவிடுகிறது, மேலும் பாதுகாப்புடன் கூடிய சுழற்சி வேகத்தை குறிப்பிடும் குறியீடுகள் கொண்டவையாகும். இதன் மூலமாக வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த தேவைப்படும் ஊசிவாய் மற்றும் பற்சக்கர இழுவை போன்றவற்றின் அமைவுகளை வண்டியை ஓட்டுவதற்கான சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க இயலும். நீண்ட நேரத்திற்கு அதிக வேகத்தில் பயணிக்கும் பொழுது, மசகிடுதல் பற்றாக்குறை, மிகையான வெப்பம் அடைதல், (குளிர் சாதனக்கருவியின் சக்திக்கு மீறிய அளவில் செயல்பாடு), இயந்திரங்களின் துணை பாகங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேகத்தையும் மீறிய பயன்பாடு (எடுத்துக்காட்டாக சுருக்கி மேல் தள்ளும் கருவியுடன் கூடிய பின்வாங்கும் ஓரதர்கள் (வால்வுகள்) ஈடு கொடுக்க முடியாமல் திணறும் நிலை உருவாகுதல்) போன்ற காரணங்களினால், இயந்திரங்களின் பாகங்களில் பழுது ஏற்படும் அல்லது ஒரேயடியாக சேதப்பட்டுவிடும். இது போன்ற தவறுகள் மனித ஆற்றலால் இயக்கப்படும் பொழுது நிகழலாம் ஆனால் தானியங்கி கருவிகள் பொருத்திய வண்டிகளில் ஏற்படாது. அலைமருவி சுழற்சி அளவிகளில், பாதுகாப்பை மீறிய வேகஅளவுகளைத் தனிப்பட்ட முறையில் சிவப்பு வண்ணக் குறியீட்டுடன் பொதுவாகக் காணலாம், இதன் காரணமாக ஒரு கருவியை "சிவப்பு வண்ண உட்பூச்சு" அடிப்பது என்ற பதம் வழக்கத்தில் உள்ளது, — மேலும் கருவியை மிதமான வேகத்தில் பாதுகாப்புடன் இயக்கலாம். இக்காலத்து நவீன உந்துகளில் இந்த சிவப்பு நிறப்பகுதி, தேவையற்றதாகும், சுழற்சி எல்லைப்படுத்தி போன்ற மின்னணுவியல் கருவிகள் வேகத்தைக் கட்டுப்படுத்தி கருவி சேதப்படாமல் வைத்திருக்க உதவி புரிகிறது. டீசல் கருவிகளில் பரம்பரையாக பொறியியல் உட்பாய்ச்சி முறைகளில் ஒரு ஒருங்கிணைந்த ஆள்கருவிகள் பொருத்தப்பட்டது, அது கருவியின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதால், அதன் காரணமாக இது போன்ற கருவிகளைப் பொருத்திய உந்துகளில் சிவப்புப் பகுதி காணப்படமாட்டா.

கலப்பை இழுவைகள் மற்றும் சரக்குந்துகளில், சுழற்சி அளவிகள் வேறு பல குறியீட்டுகளைக் கொண்டிருக்கும், மேலும் சாதாரணமாக ஒரு பச்சை வண்ணத்திலான வளைவு காணப்படும், இந்தப்பகுதியில் வண்டி இயங்கினால், கருவி மிகவும் அதிகமான முறுக்கு விசையில் செல்லும், மேலும் இது போன்ற வண்டிகளை ஓட்டுனர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆற்றலை எடுத்து அணைக்கும் (அ) அகற்றும் (PTO) முறைமைகளை உள்ளடக்கிய கலப்பை இழுவைகளில் காணப்படும் சுழற்சி அளவிகளில் ஆற்றலை எடுத்து அணைக்கும் (PTO) முறைமைகளுடன் கூடிய கருவிகளை சுழல வைக்க தேவைப்படும் சுழற்சி வேகத்தின் அளவு தரப்படுத்தப்பட்டு காட்சியில் வைக்கவேண்டும். பல நாடுகளில், கலப்பை இழுவைகளை சாலைகளில் பயன்படுத்த, அதற்கான வேகமானிகளை பொருத்தி இருக்கவேண்டும். மேலும் ஒரு இரண்டாவது தட்டைப்பொருத்துவதற்கு பதிலாக, வாகனத்தின் சுழற்சி அளவியில் இரண்டாவது ஒப்பளவாக அளவியில் வேகத்தின் அளவு பொறிக்கப்படும். இந்த அளவி ஒரு குறிப்பிட்ட பல்சக்கரத்தில் மட்டுமே துல்லியமாக இருந்தாலும், சாலைப் பயன்பாட்டிற்கு பல கலப்பை இழுவைகளில் ஒரு பல்சக்கரமே தேவைப்படுவதால், இதுவே போதுமானதாகும். சாலைப்பயன்பாட்டுக்காக பல 'சாலைப் பல்சக்கரங்கள்' கொண்ட கலப்பை இழுவைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேக ஒப்பளவுகள் காணப்படும். வானூர்திகளின் சுழற்சி அளவிகளில் கருவியின் வடிவமைப்பு வேகத்தின் வீச்சைத் தெளிவாக அதற்கான வளைவுத் தொகுதியில் பச்சை வண்ணத்தில் காணலாம்.

பழைய வாகனங்களில், சுழற்சி அளவிகளின் செயல்பாட்டுக்காக எரிபற்றற்சுருளில் குறைந்த அழுத்தம் (எல்டி) கொண்ட பக்கத்தில் இருக்கும் மாறுதிசை மின்னோட்டம், அலையோட்டத்தை பயன்படுத்தும், மேலும் இதர வாகனங்களில் (அவற்றில் அனைத்து டீசல் இயந்திரங்களும் அடங்கும், அவற்றில் எரிபற்றற்சுருள் பொருத்தப்படவில்லை) இயந்திரத்தின் வேகமானது சுழற்சி அளவிகள் மாறுதிசை மின்னாக்கி வெளிப்படுத்தும் அலைவெண்ணை சார்ந்ததாகும். இதில் மாறுதிசை மின்னாக்கியில் ஒரு தனிப்பட்ட சுற்றின் மூலம் திருத்தப்பெற்ற சைன் வடிவ அலை சதுர வடிவ அலையாக மாற்றும், மேலும் அதன் மூலம் கிடைக்கும் மின்னழுத்த வேறுபாடு இயந்திரத்தின் வேகத்திற்கு நேர் விகித சமமாக இருக்கும். இயந்திரத்தில் இருந்து நேராக சுழற்சி அளவியை செயலாக்கும் கருவியுடன் பொருந்திய சுழலும் கம்பிகளும் பயனில் உள்ளன, (பொதுவாக அதன் நெம்புருள் தண்டுடன் இணைத்தது) பொதுவாக அவை எளிதான தீசல் இயந்திரத்துடன் பொருத்தப்படும் மேலும் மின்சாரத்தின் பயன்பாடு இல்லாமல் இருக்கும். ஈஎம்எஸ் முறைமை கொண்ட நவீன வண்டிகளில், சுழற்சி அளவிக்கான சைகை ஒரு ஈசியு கருவியில் இருந்து பெறப்படும், அதற்காக மாற்றிதண்டு அல்லது நெம்புருள் தண்டு வேக உணரிகள் பொருத்தப்படும்.

நேர அளவு மானி[தொகு]

வானூர்திகள், படகுகள் அல்லது கலப்பை இழுவைகள் நிறுத்த நிலையில் இருக்கையில் வேகமானிகள் துல்லியமாக வண்டிகளின் பயன்பாட்டை அறிவிக்க இயலாது, அதனால் சுழற்சி அளவிகளில் அடிக்கடி இந்த வண்டி அல்லது இயந்திரம் இதுவரை இயங்கிய நேரத்தைக் குறிக்கும் அளவு காட்சியில் வைக்கப் படுகிறது. சேவைகள் புரிந்த இடைவேளைகள் மணிக்கணக்கில் வழங்கப்படுகின்றன. பொதுவாக இந்த நேர அளவு மானிகள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே துல்லியமாக காணப்படும், எடுத்துக்காட்டாக, 'ஒவ்வொரு நிமிடத்திற்கும் 2000 சுழற்சிகள் என்று அளவு திருத்தம் கொண்ட நேர அளவு மானிகள்' ஒவ்வொரு மணி நேர இயக்கத்திற்குப் பிறகு அதன் முள் ஒருமணி நேரத்திற்கு கூடுதலாக ஓடியதைக் குறிக்கும். ஆனால் கருவி இந்த வேகத்திற்கு குறைவாக இயங்கினால், நேர மானியின் எண் குறியீடு மெதுவாகவே நகரும் அல்லது குறைவான மணிகளைக் காட்டும், மேலும் இயந்திரம் விரைவாக இயங்கினால், மணிகளின் கணக்கு பொருத்தமில்லாமல் விரைவாக உயரும். இருந்தாலும் இந்தக்குறைபாடு, இந்த சேவைகள் வழங்கும் தன்மை இடைவேளைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை, மேலும் குறைந்த வேகத்தில் இயங்கும் இயந்திரங்களின் நேர மானி குறைவாகவே முன்நோக்கி நகர்ந்தாலும், இயந்திரங்கள் அதனால் குறைந்த அளவில் பொறியியல் பாரத்திற்கு இடையாகும், மேலும் அடிக்கடி பழுது பார்க்க வேண்டிய கட்டாயம் குறைந்து, ஆதனால் விரைவாக இயங்கும் வண்டிகள் சீக்கிரம் சேதமடைந்து அடிக்கடி மராமத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

போக்குவரத்துப் பொறியியல்[தொகு]

போக்குவரத்து வேகம் மற்றும் கனஅளவு (பெருக்கெடு) போன்ற தரவுகளை கணிப்பதற்கு சுழற்சி அளவிகளை பயன்படுத்தலாம். ஒரு வாகனத்தில் இதற்கான உணரிகளைப் பொருத்தி மேலும் அதன் மூலம் "சுழற்சி ஓட்டங்கள்" மூலமாக போக்குவரத்துத் தரவுகள் பதிவு செய்யப்படுகின்றன. இவ்விதமான தரவுகள் வட்டமடித்தலை உணர்கருவி வழங்கும் தரவுகளுக்கு பதிலீடு ஆகவும் அல்லது அவற்றை நிறைவு செய்பவையாகவும் காணலாம். புள்ளிவிவர அடிப்படையில் குறிப்படும் படியான விளைவுகளைப் பெறுவதற்கு பல அதிக முறைகள் ஓட்டங்கள் எடுத்திருக்க வேண்டும், மற்றும் குறிப்பிட்ட நாள் மற்றும் பணி விவரங்கள் எடுக்கப்பட்ட நேரம், வாரத்தில் குறிப்பிட்ட நாள் மற்றும் பருவ காலங்களால் ஏற்படக்கூடிய ஒரு தலை முடிவுகள் தவிர்கப்பட வேண்டும். இருந்தாலும், இடைவெளி குறைந்த அளவில் வட்டமடித்தலை உணர்கருவிகளின் குறைந்த அடர்த்தியுடன் கூடிய செயல்பாடுகள் தரவுகளின் பிழையின்மையைப் பாதிப்பதாலும், இதற்கான செலவுகள் மிகையாக இருப்பதாலும், மற்றும் வட்டமடித்தல் உணர்கருவிகளின் பயன்பாட்டை ஒப்பிடுகையில் குறைந்த நம்பகத்தன்மை கொண்டதாலும் (ஒரு குறிப்பிட்ட வேளையில் 30% விழுக்காடு மற்றும் அதற்கும் மேலான அளவில் குறைபாடுகள்) போன்ற காரணங்களால், சுழற்சி அளவு முறை ஓட்டங்களே பொதுவாக வழக்கத்தில் உள்ளன.

தொடர்வண்டிகளும் தண்டவாளத்தில் செல்லும் லேசான வாகனங்களும்[தொகு]

தண்டவாளங்களில் செல்லும் வண்டிகளில் வேகத்தை உணரும் கருவிகள் பயன்படுகின்றன, அவை பரவலாக "சக்கர தூண்டுதல் மின்னாக்கி" என அறியப்படுபவை (WIG), வேகப் பரிசோதனைக் கருவிகள், சுழற்சி அளவிகள் போன்றவை விரிவாகப் பயன்படுகின்றன. பொதுவாகக் காணப்படும் கருவிகளில் ஒளி-தனிப்படுத்தி துளையிட்ட தட்டு உணரிகள் கொண்டது (opto-isolator)[1] மற்றும் ஹால் விளைவு உணரிகள் கொண்டது.

ஹால் விளைவு உணரிகளில் பொதுவாக சக்கரம், பல்சக்கரப்பெட்டி அல்லது ஒரு இயக்கியுடன் ஓர் சுழலும் இலக்கு இணைத்திருக்கும். இந்த இலக்கானது காந்தமாகவோ, அல்லது பல்சக்கரமாகவோ இருக்கலாம். சக்கரத்தின் மேல் காணப்படும் பற்கள் தலைமை உணரியின் உள்ளே பொருந்திய காந்தத்தின் பாய அடர்த்தியை வேறுபடுத்திக்கொண்டு இருக்கும். இதை சோதிக்கும் கருவியானது அதன் தலைமை இலக்கு சக்கரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட துல்லியமான தூரத்தில் உள்ளவாறு அமைக்கப்படும் மேலும் அதன் முகத்தின் வழியாக செல்லும் காந்தங்கள் அல்லது பற்களின் அளவைத் துப்பறிந்து கொண்டே இருக்கும். இந்த முறைமையில் காணப்படும் பிரச்சினையானது இலக்கு சக்கரம் மற்றும் உணரிகளுக்கு இடையே நிலவும் காற்றிடையில் வண்டியின் அடிப்பாகத்திலிருந்து இரும்புத்தூள்களின் தூசு படர்ந்து கொண்டே இருப்பதால், சில நேரங்களில் கருவி மாசடைந்து பணி செய்ய முடியாமல் போகலாம்.

இவ்வகையில், ஒளி- தனிப்படுத்தி உணரிகள் முழுமையாக ஒரு பெட்டிக்குள் அடைத்து வெளியில் காணப்படும் சூழ்நிலைகளில் இருந்து விடுபட்டிருக்கும். வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பாகங்களானது ஒரு முத்திரை பதித்த செருக்கி பொருத்தி மற்றும் ஒரு ஓட்டும் முட்கரண்டி, இவற்றை உள்வசமுள்ள ஒரு துளையிட்ட தட்டுடன், ஒரு தாங்கி மற்றும் முத்திரையின் உதவியுடன் இணைக்கப்படும். இரு தனிப்பட்ட சுற்று அட்டைகளின் நடுவே பொதுவாகத் துளையிட்ட தட்டு பொருத்தி மற்றும் அவற்றில் ஒரு ஒளி மின்டையோடு மற்றும் ஒளி திரிதடையம், அலைபெருக்கி மற்றும் வடிகட்டும் சுற்று போன்றவையுடன் சேர்ந்து ஒரு சதுர அலை துடிப்பு தொடர் வெளியீட்டுடன் கிடைக்கும் மற்றும் இந்த வெளியீடு வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற மின்னழுத்த அளவு, மற்றும் ஒரு சுற்றுக்குத் தேவைப்படும் துடிப்பிற்கு ஏற்றவாறு அமைக்கப்படும். இந்த வகை உணரிகள் பொதுவாக இரண்டு முதல் எட்டு தனிப்பட்ட வழித்தடங்கள் வழியாக வெளியேற்றலாம் மற்றும் அதன் மாதிரிகளை அந்த வண்டிகளிலேயே இருக்கும் இதர முறைமைகளால் சோதிக்கலாம், எடுத்துக்காட்டாக தானியங்கி தொடர்வண்டி கட்டுப்பாடு முறைமைகள் மற்றும் முற்செலுத்தம் / நிறுத்தி ஆளிகள் போன்றவை.

இந்த ஒளி சார்ந்த கருவியானது, தட்டின் விட்டப்பகுதியில் அமைந்திருக்கும், ஒன்றோடு ஒன்று வேறுபட்ட சைகைகளை நிலைமைப்பெயர்வுடன் வழங்குவதால், வாகனத்தில் பொருத்திய கணினி சக்கரம் எந்த திசையில் சுற்றவேண்டும் என்பதை முடிவு செய்கிறது. நிறுத்தி இருக்கும் இடத்தில் இருந்து புறப்படும் பொழுது வாகனம் பின்பக்கம் உருளுவதைத்தடுப்பதற்கான இந்த நடவடிக்கை சுவிட்சர்லாந்து நாட்டின் சட்டபூர்வமான நடைமுறையாகும். கண்டிப்பாக சொல்லப்போனால், இது போன்ற நடவடிக்கைகள் சுழற்சி அளவிகளின் செயல்பாடுகளில் இல்லாதது ஆகும் ஏனென்றால் அவை தட்டின் சுழற்சி வேகத்தை நேரடியாக வழங்குவதில்லை. கொடுக்கப்பட்ட நேரத்தில் எத்தனை துடிப்புகள் நிகழ்ந்தன என்பதன் அடிப்படையில் அவை வெளியே தெரிவிக்கப்படுகின்றன. வாகனம் நிறுத்த நிலையில் உள்ளது என்பதை உடனுக்குடன் உறுதிபடுத்த இயலாது, அதற்காகச் சில நேரம் காத்திருந்து மேலும் துடிப்புகள் உணரவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இதன் காரணமாகத்தான் சில நேரங்களில் தொடர்வண்டி நிற்பதற்கும், மற்றும் பெட்டியில் உள்ள கதவுகள் திறப்பதற்கும், பயணிகளால் உணரப்படுகின்ற, கால தாமதத்திற்கு காரணம். துளையிட்ட தட்டுகள் கொண்ட கருவிகள் பொதுவாக உணரிகள் வகைப்படும் ஓட்ட அளவி போன்றவை, தொடர்வண்டிகளின் பாதுகாப்பு முறைகள் என்ற வகையில் தொடர்வண்டிகளில் பயன்படுகின்றன, குறிப்பாக ஐரோப்பிய தொடர்வண்டிக் கட்டுப்பாடு முறை இவற்றில் கவனம் செலுத்துகிறது.

சக்கரங்களின் சுழற்சி அடிப்படையாகக் கொண்ட சுழற்சி அளவி மற்றும் ஓடோமானி முறைமைகளில் காணப்படும் சிறிய குறை என்னவென்றால், சக்கரங்கள் மற்றும் தண்டவாளங்கள் மிகவும் வழு வழுப்பாக இருப்பது மேலும் அவற்றுக்கு இடையே நிலவும் உராய்வு விகிதம் மிகவும் குறைவாக இருப்பது, அதனால் சக்கரங்கள் வழுக்கினாலோ அல்லது சரிந்தாலோ, மிகையான அளவில் பிழை விகிதம் ஏற்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதை ஈடு செய்வதற்காக, உயர்நிலை வேகமானிகள் டாப்ளர் கதிரலைக் கும்பா கருவிகளை தனிப்பட்ட விதத்தில் தொடர்வண்டிகளின் அடியில் பொருத்துகின்றனர் மேலும் அதன் மூலமாக தொடர் வண்டியின் வேகத்தை தனியாக கணிப்பதற்குப் பயன்படுத்துகின்றனர்.

வேகத்தை உணருவதோடு மட்டும் அல்லாமல், இக்கருவிகள் பயணம் செய்த தொலைவை சக்கரத்தின் சுற்றளவு எண்ணுடனும், மற்றும் எத்தனை முறை சக்கரம் சுழன்றது என்பதை சுட்டும் எண்ணுடனும் பெருக்கி கணிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.

மேலும் அவை தானியங்கி முறையில் சக்கரத்தின் விட்டத்தையும் அளவு திருத்தம் செய்துகொள்ளும், அதற்காக ஒரு தலைமை சக்கரத்தின் துல்லியமாக அளந்த அளவியுடன் ஒவ்வொரு அச்சு சக்கரத்தின் சுழற்சி வேகத்துடன் ஒப்பிட்டு கணிக்கிறது. அனைத்துச் சக்கரங்களும் ஒரே விசையில் கடப்பதால், ஒவ்வொரு சக்கரத்தின் வட்டமும் மற்றும் அந்த சக்கரம் எத்தனை முறை சுழன்றது என்பதை குறிக்கும் எண்ணும், தலைமைச் சக்கரத்துடன் நேரிடை விகித சமம் கொண்டுள்ளது. இந்த அளவு திருத்தமானது வண்டி ஒரே வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது செய்யப்பட்டு, மேலும் சக்கர சுழற்சியில் வழுக்கம் அல்லது சரிவினால் ஏற்படக்கூடிய பிழைகளை தவிர்க்க வேண்டும். தானியங்கி முறையில் இவ்வகையான அளவு திருத்தங்கள் மேற்கொள்ளும் பொழுது, மேலும் துல்லியமான இழு சக்தி மற்றும் தடுப்புச் சக்திக்கான சைகைகள் உண்டாகின்றன, மேலும் சக்கரங்கள் வழுக்குவதைக் கண்டறிவதையும் மேம்படுத்தலாம்.

அலைமருவி அல்லது ஒப்புமை ஒலிப்பதிவு[தொகு]

அலைமருவி (அ) ஒப்புமை ஒலிப்பதிவு செய்யும் பொழுது, ஒலிநாடா அதன் ஒலிப்பதிவுத்தலைமைக் கருவியின் வழியாக ஓடும் ஒரு சுழற்சி அளவி மூலம் அதன் வேகத்தை அளக்கலாம். மிகையான ஒலி நாடாப் பதிப்பிகளில் பயன்படும் சுழற்சி அளவி (இங்கே "tach" என்ற ஆங்கிலப்பதம் சுழற்சி அளவியின் சுருக்கப்பதமாகும்) துடை, பதிவுசெய் மற்றும் இயக்குதலுக்கான தலைமை அடுக்கு கொண்ட தனிப்பட்ட அமைப்பாகும், அதன் அருகே ஒரு ஒப்புநோக்கத்தக்க விசைத் தண்டு நிறுவப்பட்டுள்ளது, மற்றும் இழுவிசை உடனோடிகளுடன் நாடாவின் வேகத்தை கணக்கிடலாம்.

பல ஒலிப்பதிவுக் கருவிகளில் சுழற்சி அளவியின் விசைத்தண்டு ஒரு அச்சாணி மூலமாக ஒரு சுழலும் காந்தத்துடன் இணைக்கப்படும், இந்தக் காந்தம் ஒரு மாறிக்கொண்டே இருக்கும் காந்த மண்டலத்தை அருகே அமைந்துள்ள ஹால் விளைவு திரிதடையத்தில் தூண்டுகிறது. இதர முறைமைகள் விசைத்தண்டினை ஒரு ஒளியுணர்வேக அளவியுடன் இணைக்கும், அதனுடைய மாறுபடும் வெளிச்சம் மற்றும் இருட்டு சைகைகள் ஒரு ஒளி இருவாய் கருவியில் தொடர்ச்சியாகப் பதிவாகும்.

ஒலிநாடா பதிவுக்கருவிகளை இயக்க பயன்படும் மின்னணுவியல் சுழற்சி அளவி அளிக்கும் தொடர் சைகைகளின் அடிப்படையில் ஒலிநாடாவின் வேகத்தை கருவிக்குத் தேவையான வேகத்தில் ஓடச்செய்யும். உள்நோக்கி வரும் சைகையானது ஒரு குறியீட்டு சைகையுடன் ஒப்பிடப்படும் (பிரதானமாக இருக்குமிடத்திலிருந்து வரும் தடத்தின் படிகக் கற்கள் அல்லது திசைமாறு மின்ஓட்டம் வழியாக) இரு இடங்களிலிருந்து வரும் சைகைகளின் அலைவரிசைகள் ஒப்பிட்டு ஒலிநாடாவின் வேகம் நிர்ணயிக்கப்படும். சுழற்சி அளவி அளிக்கும் சைகை மற்றும் குறிப்புதவி சைகைகள் இரண்டும் ஒத்துப்போனால் மட்டுமே, ஒலிநாடாவின் செயல்பாடு "ஒரு வேகத்தில்" செயல்படுவதாகக்கூற இயலும். (படப்பிடிப்புகளில் இன்று வரை, இயக்குனர் இதனை "சுருள் ஓசை" என்பார்! மேலும் ஒலி வல்லுனர் இதனை "ஒலி வேகம் !" என்று பதிலளிப்பார். அதாவது இந்நிகழ்ச்சி ஒரு காலத்தில் பதிவு செய்யும் கருவிகளின் வேகத்தை ஒழுங்குபடுத்த சிலகண நேரங்கள் எடுத்ததை நினைவு படுத்துவதாக அமைந்ததாகும்.)

ஒலிநாடாவின் வேகத்தை மிகவும் துல்லியமாக ஒழுங்குபடுத்த வேண்டியது இன்றியமையாததாகும், ஏனென்றால் மனிதனின் செவியானது சுருதி வேறுபாடுகளை மற்றும் பேதங்களை மிகவும் எளிதாக உணரக்கூடியதாகும், அதிலும் குறிப்பாக திடீர் என்று நிகழ்பவை, மேலும் அதனால் ஒலி நாடாவின் வேகத்தை ஒழுங்கு படுத்த, ஓர் தன்னைத்தானே ஒழுங்கு படுத்தும் முறைமை இல்லாவிட்டால், ஒலி நாடாவின் வேகமானது சில விழுக்காடுகள் அங்கும் இங்கும் வேறுபட்டு சுருதி மாறிவிடும் அபாயம் உள்ளது. இதன் விளைவை வாவ்-அண்ட்-ஃபிளட்டர் என அழைப்பர், இது பதிவு செய்யும் கருவி மற்றும் தொலைதொடர்பு கருவிகளில் காணப்படும் முறைகேடுகள் காரணமாக ஏற்படும் எதிர் விளைவுகளை குறிப்பதாகும், மேலும் நவீன ஒழுங்கு முறைக்குட்பட்ட சுழற்சி அளவிகள் மற்றும் ஒலிநாடா தட்டுக்கு இடையே தொழில் நுட்ப முன்னேற்றம் காரணமாக மிகவும் குறைந்த அதாவது 0.07% வாவ் அண்ட் ஃபிளட்டர் காரணிகள் கொண்டதாகும்.

மிகு முற்றிசைவு ஒலி திரும்பிப்பாடும் கருவிகளில், சுழற்சி அளவிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் சினிமாக் கேமராவால் ஒத்திசைவுடன் இயங்க இயலாமல் போகும். இது போன்ற பயன்பாடுகளுக்கு, பைலட்டோன் என்ற சிறப்புக்கூறி போன்ற தனிப்பட்ட பதிவு செய்யும் கருவிகளை பயன்படுத்த வேண்டும்.

சுழற்சி அளவி சைகைகள் பல ஒலிநாடாவில் ஒளிப்பதிவு செய்யும் கருவிகளை ஒன்றாகச் சேர்ந்து ஒத்திசைவு செய்வதற்கு இயன்றாலும், அப்படிச் செய்வதற்கு அதனுடன் ஒரு சுழற்சி அளவி சைகையும் கிடைத்து, அது ஒரு திசையை தெரிவு செய்யும் சைகை, அப்படிச் செய்தால் மட்டுமே தலைமையாக இருக்கும் கருவி அதை சார்ந்து இருக்கும் சீடர்களாக பணிபுரியும் கருவிகளுக்கு இயங்க வேண்டிய திசையை சரியாகச் சுட்டிக்காட்டும்.

குறிப்புதவிகள்[தொகு]

  1. ஹஸ்லேர்ரயில் வேக உணரிகள்

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழற்சி_அளவி&oldid=3523507" இலிருந்து மீள்விக்கப்பட்டது