சுலகிட்டி நரசம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுலகிட்டி நரசம்மா
Sulagitti Narasamma.jpg
சுலகிட்டி நரசம்மா
பிறப்பு1920
பவகடா வட்டம், தும்கூர், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா (தற்போது கருநாடகம், இந்தியா)
இறப்பு25 திசம்பர் 2018(2018-12-25) (அகவை 98)
பெங்களூரு, கருநாடகம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிமருத்துவச்சி
வாழ்க்கைத்
துணை
அஞ்சின்யப்பன்
விருதுகள்பத்மசிறீ விருது (2018),
இந்தியாவின் சிறந்த குடிமகள் விருது (2013),
கௌரவ டாக்டர் விருது (2014)
இந்திய குடியரசுத் தலைவரான இராம்நாத் கோவிந்த், மார்ச் 20, 2018 அன்று சுலகிட்டி நரசம்மாவிற்கு பத்மசிறீ விருது அளிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

சுலகிட்டி நரசம்மா(Sulagitti Narasamma) (1920 - டிசம்பர் 25 2018) கர்நாடகாவின், தும்கூர் மாவட்டத்தில், பவகடா தாலுக்காவின், கிருஷ்ணபுரா பகுதியில் உள்ள ஓர் இந்திய மருத்துவச்சி ஆவார். எந்த ஒரு மருத்துவ வசதிகளும் இல்லாத பகுதிகளில் 70 ஆண்டுகளுக்கு மேலாக, 15,000 க்கும் அதிகமான பாரம்பரியப் முறையில் இலவசமாக பிரசவம் பார்த்தார். அதற்காக கருநாடக மாநிலத்தின் பல விருதுகளையும், இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான பத்மசிறீ விருதினையும் பெற்றார்.

பணிகள்[தொகு]

சுலகிட்டி நரசம்மா ஒரு நாடோடி வம்சத்தவர். தன்னுடைய 12 ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டதால், கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தார். நரசம்மாவுக்கு 20 வயது இருக்கும்போது தன்னுடைய பாட்டியிடமிருந்து வீட்டில் பிரசவம்பார்க்கும் முறையைக் கற்றுக் கொண்டார். பின்னர் நரசம்மா வேறு சிலரின் துணையுடன் பல பெண்களுக்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். காலப்போக்கில், பிரசவம் பார்ப்பதில் கைதேர்ந்தவராக மாறியவர், இதுவரை 15,000 பேருக்கு வீட்டில் பிரசவம் பார்த்துள்ளார்.[1]

பெயர் காரணம்[தொகு]

கிராமத்து மருத்துவச்சியை கர்நாடகத்தில் சுலகிட்டி என்று அழைப்பார்கள். அதனால் நரசம்மா பெயருக்கு முன்னால் சுலகிட்டி என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது. வயிற்றில் இருக்கும் குழந்தையின் தன்மை, தாய், குழந்தை என்ன உணவு உண்ணலாம், நோய் எதிர்ப்பு மருந்து ஆகியவற்றைப் பாரம்பரிய மருத்துவ முறைப்படி ஆலோசனைகளை நரசம்மா வழங்குவார்.[2]

விருதுகள்[தொகு]

  • 2012 கர்நாடகா மாநில அரசின் தேவராஜ் அர்ஸ் விருது
  • 2013 கிட்டூர் ராணி சென்னம்மா விருது
  • 2013 கர்நாடகா ராஜியோட்சவ விருது
  • 2013 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த குடிமகள் விருது.
  • 2014 தும்கூர் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம்
  • 2018 ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது.

இறப்பு[தொகு]

பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொடர்பான நோயால் கடந்த 5 நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நரசம்மா சிகிச்சை பலன் அளிக்காமல் 25 டிசம்பர் 2018 அன்று காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. [[1]](25 Dec 2018). "15,000 பிரசவம் பார்த்த நரசம்மா பாட்டி காலமானார்". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 25 Dec 2018.
  2. (25 Dec 2018). "ஏழைப் பெண்களுக்கு இலவசமாக 15 ஆயிரம் பிரசவங்கள் செய்த நரசம்மா காலமானார்:". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 25 Dec 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலகிட்டி_நரசம்மா&oldid=2619808" இருந்து மீள்விக்கப்பட்டது