சுரேசு சந்திர மிசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேசு சந்திர மிசுரா
Suresh Chandra Mishra
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1952–1957
தொகுதிமுங்கேர் மக்களவைத் தொகுதி, பீகார்[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1903
இறப்பு30 மார்ச்சு 1993 (வயது 89–90)
முங்கேர், பீகார்.
அரசியல் கட்சிசமதர்ம கட்சி[2]

சுரேசு சந்திர மிசுரா (Suresh Chandra Mishra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1903 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். பண்டிட் சுரேசு சந்திர மிசுரா என்றும் அழைக்கப்படுகிறார், [3] சுதந்திர ஆர்வலருமான இவர் பீகாரில் உள்ள முங்கேர் தொகுதிக்கு 1952 முதல் 1957 வரை முதல் மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். 1920 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் மிசுரா பங்கேற்றார், இந்த இயக்கம் நாட்டில் பிரித்தானிய ஆட்சியிலிருந்து முழு சுதந்திரம் பெறுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.[4] [5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மிசுரா முதலில் தொழிலில் ஒரு விவசாயியாவார். [6] ஒரு சமூக சேவகராகவும் இயங்கினார். இந்தியில் பல வெளியீடுகளை எழுதியுள்ளார்.

இறப்பு[தொகு]

மிசுரா 30 மார்ச் 1993 அன்று தனது 90 ஆவது வயதில் பீகாரில் உள்ள முங்கேரில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "1951 India General (1st Lok Sabha) Elections Results". www.elections.in.
  2. "Members : Lok Sabha". loksabha.nic.in.
  3. "List Of Political Parties" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2020-02-29.
  4. "Bio". parliamentofindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-03-01.
  5. "Pandit Suresh Chandra Mishra MP biodata Monghyr North-West | ENTRANCEINDIA".
  6. Sharma, Rajendra Narayan (February 5, 1977). "Thirty Years of Indian Journal of Agricultural Economics: Cumulative Index to Volumes I-XXX, 1946-1975". Concept Publishing Company – via Google Books.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேசு_சந்திர_மிசுரா&oldid=3785604" இலிருந்து மீள்விக்கப்பட்டது