சுமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமதி
பிறப்பு19 ஆகத்து 1964 (1964-08-19) (அகவை 59)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்பேபி சுமதி , சுமி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1966–1989
உறவினர்கள்மாஸ்டர் பிரபாகர் (சகோதரர்)

சுமதி (Sumathi) 1964 ஆகஸ்ட் 19 அன்று பிறந்த தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த நடிகை ஆவார், அவர் இரண்டு வயதில் தனது தொழிலை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1][2]

சொந்த வாழ்க்கை[தொகு]

1966 ஆம் ஆண்டில், சுமதி அவரது கனவுகளைத் தொடர பிரபாகர் மற்றும் தனது அத்தையுடன் சென்னைக்குச் சென்றார். பரத் கோபியுடன் மலையாளத் திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்க இயக்குனர் ஒரு இளம் குழந்தையைத் தேடும் போது சுமதி திரைப்படத் துறையில் நுழைந்தார்.

தொழில்[தொகு]

1960 களின் பிற்பகுதியில் பரத் கோபியின் மகள் பாத்திரத்தில் நடித்து, குழந்தைத் திரைப்பட நடிகை பேபி சுமதியாக தமிழ் திரைப்படங்களில் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பல குழந்தைகள் திரைப்படங்களில் அவர் தோன்றினார். அவர் இரட்டை வேடங்களில் நடித்தார் மற்றும் சில திரைப்படங்களில் ஒரு சிறுவனாக நடித்தார். சீக்கிரத்திலேயே தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்து, அங்கு பல படங்களில் நடித்தார்.

பேபி சுமதி வளர்ந்தபோது, அவர் விளம்பரங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு பல தயாரிப்புகளை விளம்பரப் படுத்தினார். அவர் ஒரு குழந்தையாக நந்தி விருது மற்றும் பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். அவரது மூன்றாவது அண்ணன் மாஸ்டர் பிரபாகர் மற்றும் இரண்டாவது இளைய சகோதரர் குமார் ஆகியோருடன் பல படங்களில் நடித்தார். அவரது சகோதரர்கள் சினிமா துறையில் நுழைந்தவுடன், அவருடைய குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் அதே வரிசையில் செல்ல ஆர்வமாக இருந்தனர். சுமதியின் உறவினர் ஒரு பிரபல நடிகை ஆவார், இவர் பல தமிழ் படங்களில் வெற்றி பெற்றார். சுமதியின் மற்ற உறவினர்கள் ஒளிப்பதிவு மற்றும் உதவி இயக்குநர்களாக இருந்தனர். இவர் கடந்த காலத்தில் பல மொழிகளில் பல நடிகைகளுக்கு பின்னணிக் குரல் அளித்துள்ளார்.

அவர் ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், செய பாதுரி பச்சன், மனோரமா, நாகேஷ், ரசினிகாந்த், ஜெ. ஜெயலலிதா, அம்பிகா, மற்றும் பாக்யராஜ் போன்ற பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.1979இல் பாக்யராஜ் இயக்குநராக அறிமுகமாகிய சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற தமிழ்த் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். 1989இல் அவர் உச்சக்கட்டத்தில் நடித்து வந்தபோது திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்றார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமதி&oldid=3792519" இலிருந்து மீள்விக்கப்பட்டது