சுபாசு சந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபாசு சந்திரா
Dr. Subhash Chandra.jpg
சுபாசு சந்திரா
மாநிலங்களவை உறுப்பினர் (அரியானா) [1]
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஆகஸ்டு 2, 2016 [2]
முன்னவர் சுரேஷ் பிரபு, BJP
தொகுதி அரியானா மாநிலம்
தனிநபர் தகவல்
பிறப்பு 30 நவம்பர் 1950 (1950-11-30) (அகவை 72)
ஹிசார் மாவட்டம், அரியானா, இந்தியா
தேசியம் இந்தியர்
இருப்பிடம் மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணி எஸ்செல் குழும நிறுவனர் & தலைவர்

சுபாசு சந்திரா (Subhash Chandra 30, நவம்பர் 1950) என்பவர் இந்திய ஊடகப் பெரும் தொழிலதிபர் ஆவார். எஸ்செல் என்னும் குழுமத்தின் தலைவர். ஜீ தொலைக் காட்சியைத் தொடங்கி அதன் தலைவராக இருந்தவர்.[3] [4]

பணிகள்[தொகு]

அரியானா மாநிலத்தில் பிறந்த இவர். ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தை 1992 இல் தொடங்கினார். உல்லாசப் பூங்காக்கள், லாட்டரி சீட்டுகள், திரைப்பட அரங்குகள் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டார் 2009 இல் டிஎன்ஏ என்ற செய்தித்தாளையும் தொடங்கினார். 2016 சூன் திங்களில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றார். தன்வரலாறு நூலை சுபாசு சந்திரா எழுதியுள்ளார். இந்நூலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.[5]

விருதுகள்[தொகு]

கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. எம்மி விருது, கனடா இந்திய அறக்கட்டளை வழங்கிய சான்சலனி குளோபல் இந்தியன் விருது ஆகியனவும் இவருக்குக் கிடைத்தன.

மேற்கோள்[தொகு]

  1. "Subhash Chandra wins RS seat as 12 Cong votes were rejected due to 'wrong pen'". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 12 June 2016. 13 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Dr Subhash Chandra takes oath as Rajya Sabha member". dnaindia.com. 4 August 2016. http://www.dnaindia.com/india/report-dr-subhash-chandra-takes-oath-as-rajya-sabha-member-2240933. 
  3. http://www.forbes.com/profile/subhash-chandra/
  4. http://www.esselgroup.com/subhash-chandra.html
  5. http://www.narendramodi.in/pm-modi-at-subhash-chandra-s-book-release-in-new-delhi-400112
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாசு_சந்திரா&oldid=2711996" இருந்து மீள்விக்கப்பட்டது