உள்ளடக்கத்துக்குச் செல்

சுன்னாகம் சந்தைப் படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுன்னாகம் சந்தைப் படுகொலைகள்
இலங்கையின் அமைவிடம்
இடம்சுன்னாகம், வடமாகாணம், இலங்கை
நாள்மார்ச் 28, 1984 (+8 கிஇநே)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இலங்கைத் தமிழ் பொதுமக்கள்
இறப்பு(கள்)10
காயமடைந்தோர்100+
தாக்கியோர்இலங்கை ஆயுதப் படைகள்

சுன்னாகம் சந்தைப் படுகொலைகள், 1984 மார்ச் 28 இல் இலங்கையின் வடமாகாணத்தில் சுன்னாகம் நகரில் தமிழ்ப் பொதுமக்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன. இப்படுகொலைகள் இடம்பெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஆயுதப் படைகளினால் 20 தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[1][2]

படுகொலை நிகழ்வு

[தொகு]

சுன்னாகம் சந்தை காங்கேசந்துறை வீதியில் யாழ்நகரில் இருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சந்தை ஆகும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் விளையும் வேளாண்மைப் பொருட்கள் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்வது வழக்கம்.

1984 மார்ச் 28 புதன்கிழமை அன்று தாங்கிகளிலும், வாகனங்களிலும் சந்தைக்கு வந்திறங்கிய இலங்கை ஆயுதப் படையைச் சேர்ந்தவர்கள் சந்தையில் கூடியிருந்தோர் மீது கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கினர். பத்து பொதுமக்கள் இதில் கொல்லப்பட்டனர், 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் பின்னர் இராணுவத்தினர் சந்தைப் பகுதியில் இருந்த அனைத்துக் கடைகளையும் தீயிட்டுக் கொளுத்தினர்.[1][3][4]

இதன் பின்னர் அங்கிருந்து காங்கேசந்துறை வீதி வழியே சென்ற படையினர் மல்லாகம், தெல்லிப்பழைப் பகுதியில் சரமாரியாகத் சுட்டபடி சென்றனர். இதன் போது ஒருவர் கொல்லப்பட்டார். தெல்லிப்பழையைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 26 பேர் காயமடைந்தனர். இரு கிராமங்களிலும் மொத்தமாக 20 பொதுமக்கள் காயமடைந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 NESHOR (2009). Massacres of Tamils(1956-2008). சென்னை: Manitham Publications. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-909737-0-0.
  2. "SRI LANKA: THE UNTOLD STORY Chapter 30: Whirlpool of violence". Asia Times. Archived from the original on 2002-12-03. பார்க்கப்பட்ட நாள் 14 நவம்பர் 2013.
  3. 10 Die in Sri Lanka As Troops Fire at Crowd, New York Times, 29 March 1984
  4. The Chunnakam Massacre, TamilNation.org