உள்ளடக்கத்துக்குச் செல்

சுனில் குமார் சின்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுனில் குமார் சின்கா (Sunil Kumar Sinha; பிறப்பு 7 சூலை1954) என்பவர் இந்திய நீதிபதியும் சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும் ஆவார்.[1]

இளமை[தொகு]

சின்கா 1954ஆம் ஆண்டில் அம்பிகாப்பூரில் ஒரு வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்தார். அம்பிகாப்பூர் அரசு பல்நோக்கு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். இளங்கலைச் சட்டம் பட்டத்தினை 1980ஆம் ஆண்டில் அம்பிகாப்பூர் அரசு முதுநிலைக் கல்லூரியில் பெற்றார். 1980ஆண்டு செப்டம்பர் 3 அன்று மத்தியப் பிரதேச வழக்கறிஞர் கழகத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.

பணி[தொகு]

சின்கா ஆரம்பத்தில் அம்பிகாப்பூர் மாவட்ட நீதிமன்றத்திலும், பின்னர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் பயிற்சி பெற்றார்.[2] மே 2003-இல், சின்கா சத்தீசுகர் மாநிலத்தின் கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1 திசம்பர் 2004 அன்று, இவர் சத்தீசுகர் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக ஆனார்.[3] 14 சூலை 2014 அன்று சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக சின்கா இடமாற்றம் செய்யப்பட்டார், மேலும் 2015 மார்ச் 30 அன்று சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு உயர்த்தப்பட்டார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shri Justice Sunil Kumar Sinha Appointed as Chief Justice Of The Sikkim High Court | Indian Bureaucracy is an Exclusive News Portal" (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.
  2. "FormerChiefJustice | High Court of Sikkim". hcs.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.
  3. "Justice Sunil Kumar Sinha appointed as Chief Justice of the Sikkim High Court". Jagranjosh.com. 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.
  4. "Hon'ble Justice Sunil kumar sinha sworn-in as Chief Justice of Sikkim High Court". www.kanoonreview.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.
  5. "SLSA, Sikkim". sikkimslsa.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_குமார்_சின்கா&oldid=3994788" இலிருந்து மீள்விக்கப்பட்டது