சுனிதா பூயான்
சுனிதா பூயான் | |
---|---|
பிறப்பு | மே 23, 1970 சில்லாங், மேகாலயா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | வயலின் கலைஞர் |
சுனிதா பூயான் (Sunita Bhuyan) என்பவர் ஓர் இந்திய வயலின் கலைஞர் ஆவார். இவர் தனது 8 வயதில் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். இசை எப்போதும் இவரது வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. இவரது தாயார் மினோட்டி கவுண்ட்,[1] இந்துசுதானி மரபு வயலின் கலைஞராக இருந்தார். பூயான் ஆரம்பத்தில் இவரது தாயாரால் பயிற்றுவிக்கப்பட்டார். பின்னர் பண்டிதர் வி. ஜி. ஜாக்கிடமிருந்து கற்றுக்கொண்டார்.[2] இவரது இசைத்தொகுப்பு "பிஹு சரங்கள்" டைம்ஸ் இசை[3] மூலம் வெளியிடப்பட்ட நாட்டுப்புற முதல் வயலின் இசைத் தொகுப்பு ஆகும்.[4]
பூயானின் அண்மைக்கால பங்களிப்பாக, பொதுநலவாய பண்பாட்டுத் தொடர் ஐக்கிய இராச்சியம், வித் ஸ்டிரிங்ஸ் அட்டாச்டு, எடின்பரோ, பியாண்ட் பௌண்டரீசு இலண்டன், யெஸ் பேங்க் மற்றும் சிஎன்பிசியின் ”சேவ் தி ரைனோ” இசை, மற்றும் பெனிசுலா ஸ்டுடியோவுடன் உலக இசை மகளிர் நால்வர் குழு ஆகியன குறிப்பிடத்தக்கன.[5]
பெற்ற விருதுகள்
[தொகு]- பிரியதர்சினி சிறப்பு விருது,
- பெண்களுக்கான பன்னாட்டு விருது,
- ரெக்சு கர்மவீர் உலக விருது,
- திருத்தந்தை பிரான்சிசு அவர்களிடமிருந்து வத்திக்கான் நகர விருது. இவரது இசை சிகிச்சையுடன் வறிய குழந்தைகள், புற்றுநோய் நோயாளிகள் மற்றும் இயலாமை உள்ளவர்களுக்கான சேவைக்காக.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "50 years of music: Minoti Khaund". Assam Times (in ஆங்கிலம்). 2008-01-14. பார்க்கப்பட்ட நாள் 2020-08-15.
- ↑ Ravi, S (Sep 2016). "The melody of empathy". The Hindu.
- ↑ Vijayakar, Rajiv (2012-05-04). "Music To My Ears". India -- West 37 (24): C23–C23.
- ↑ 4.0 4.1 "Sunita Bhuyan – India | WEF" (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-04-28. பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.
- ↑ https://www.wef.org.in/sunita-bhuyan/