சுனாலி ரத்தோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனாலி ரத்தோடு
சுனாலி ரத்தோடு 2009-இல்
பின்னணித் தகவல்கள்
இசை வடிவங்கள்பின்னணி பாடகர், கசல்
இணையதளம்www.roopsunali.com

சுனாலி ரத்தோடு (Sunali Rathod) இந்தியப் பின்னணி பாடகர் ஆவார். இவர் ஒரு பயிற்சி பெற்ற பாரம்பரிய பாடகியும் கூட.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சுனாலி ரத்தோடு சனவரி 17ஆம் தேதி சோனாலி சேத் குசராத்தி குடும்பத்தில் மும்பையில் பிறந்தார். இவர் மும்பை தூய சவேரியாயர் கல்லூரியில் கல்லூரி படிப்பினை முடித்தார். இவர் இசை பயின்ற போது பஜனை பாடகர் அனுப் ஜலோட்டாவினை குடும்பத்தின் சம்மதத்திற்கு எதிராக மணந்தார். ஆனால் பின்னர் இவரை விவாகரத்து செய்து ரூப் குமார் ரத்தோட்ரை, (கைம்முரசு இணைக் கலைஞர்), பின்னணி பாடகர், இசை இயக்குநர் மற்றும் இசையமைப்பாளரை மணந்தார்.[1][2] இவர்களுக்கு சுர்சிறீ என்கிற ரீவா எனும் ற மகள் உள்ளார்.

தொழில்[தொகு]

குசராத்தி இசையமைப்பாளர் சிறீ புருசோத்தம் உபாத்யாயின் வழிகாட்டுதலின் கீழ் இவர் தனது 10 வயதில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தத் தொடங்கினார்.[3] இந்த கட்டத்தில் இவர் பண்டித இருதயநாத் மங்கேசுகருடன் அறிமுகமானார். மங்கேசுகரை இவர் தனது வழிகாட்டியாகக் கொண்டார்.[4] கிரானா இசைப் பள்ளியில் உஸ்தாத் பய்யாஸ், நியாசு அகமது கான், உசுதாத் மசுகூர் மற்றும் முபாரக் அலி கான் ஆகியோரின் கீழ் இந்தியப் பாரம்பரிய இசை பாரம்பரிய இசையின் நுணுக்கங்களையும் இவர் கற்றுக்கொண்டார்.[5] இவர் இந்தி, குசராத்தி, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பாடுகிறார்.

தனது 18 வயதில், சுனாலி எச். எம். வியுடன் குசராத்தி பாடலின் முதல் பதிவை வெளியிட்டார்.[6] 1987-இல், இவர் தனது முதல் கசல் இசைத்தொகுப்பான 'அகாஸ்'ஐ வெளியிட்டார்.[7] துபாயில் பன்னாட்டு அமீரகம் மூலம் 1987-இல் சிறந்த கஜல் பாடகிக்கான விருதையும் வென்றார். கஜல், பஜன், கேயல், தப்பா மற்றும் மெல்லிசைப் போன்ற பல்வேறு வகையான இசைகளில் பாடும் திறன் பெற்றுள்ளார்.[8]

15 ஆகத்து 2005 அன்று, சுனாலி ரத்தோடும் ரூப் குமார் ரத்தோடும் சாராபாய் & சாராபாய் என்ற தொடர் ஸ்டார் ஒன் அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டது.[9] இவர் தனது கணவர் ரூப் குமார் ரத்தோடுடன் இணைந்து மிசன் உசுதாத் என்ற இந்திய இசை மெய்க்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று[10] பிப்ரவரி 2008 அன்று "உசுதாத் இணை' பட்டத்தை வென்றார். கேமா சர்தேசாய், குஹூ குப்தா, சுனிதா ராவ், சிபானி காஷ்யப் மற்றும் பல கலைஞர்களுடன் இணைந்து 2011-இல் அனைத்துலக மகளிர் நாளினைக் கொண்டாடும் வகையில் அவள் வெற்றியாளர் எனும் நிகழ்ச்சியினை அமைத்தார்.[11]

சுனாலி சமீபத்தில் ரூப் குமார் ரத்தோடு உடன் இணைந்து கல்மா என்ற சூஃபி தொகுப்பை வெளியிட்டார்.[12]

தொலைக்காட்சியில்[தொகு]

சுனாலி ரத்தோடு மற்றும் ரூப் குமார் ரத்தோடு ஆகியோர் மிசன் உசுதாத் என்ற இந்திய இசை மெய்க்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதன் மூலம் இவர்கள் "உசுதாத் இணை" எனப் பட்டம் பெற்றனர். சாராபாய் & சாராபாய் என்ற இந்திய நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடரிலும் இவர்கள் விருந்தினராகத் தோன்றினர்.[9]

விருதுகள்[தொகு]

சுனாலி ரத்தோடு தனது முதல் இசைத் தொகுப்பான 'ஆகாஸ்'க்காக 1986-இல் சிறந்த கஜல் பாடகிக்கான விருதினைப் பெற்றார்.[13]

மேற்கோள்கள்[தொகு]

  1. Roopkumar Rathod and Sunali Rathod
  2. Third time lucky
  3. "Artist Blog".
  4. "Roopkumar and Sunali".
  5. "Musical Learning". 22 November 2010.
  6. "First Record".
  7. "Sunali Rathod".
  8. "Genres of music". தி இந்து. 2002-07-01. Archived from the original on 2003-10-19.
  9. 9.0 9.1 "Sur and Soul" (PDF).
  10. . 
  11. "Youtube Video on Women's Day". YouTube.
  12. "Sufi Album- Kalmaa". Archived from the original on 18 November 2011.
  13. "Best Ghazal Singer".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனாலி_ரத்தோடு&oldid=3920323" இலிருந்து மீள்விக்கப்பட்டது