இருதயநாத் மங்கேசுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருதயநாத் மங்கேசுகர்
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்பாலா
பிறப்பு26 அக்டோபர் 1937 (1937-10-26) (அகவை 86)
சாங்கலி, மகாராட்டிரம், இந்தியா
இசை வடிவங்கள்பாப்
நாட்டுப்புறம்
இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடகர், இசை இயக்குனர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம், கைம்முரசு இணை
இசைத்துறையில்1955–2009

இருதயநாத் மங்கேசுகர் (Hridaynath Mangeshkar) (பிறப்பு: அக்டோபர் 26, 1937) இவர் ஓர் இந்திய இசை இயக்குனராவார். பிரபல இசைக்கலைஞர் தீனநாத் மங்கேசுகரின் ஒரே மகனும், இந்திய இசை மேதைகளான லதா மங்கேஷ்கர் , ஆஷா போஸ்லே ஆகியோரின் தம்பியுமாவார். [1] இவர் இசை மற்றும் திரைப்படத்துறையில் பாலாசாகேப் என்று பிரபலமாக அறியப்படுகிறார். [2]

சுயசரிதை[தொகு]

இவரது தாயார் கோமந்தக் மராத்தா சமாஜத்தைச் சேர்ந்தவர். லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, மீனா கதிகர் மற்றும் உஷா மங்கேஷ்கர் ஆகிய நான்கு சகோதரிகளுக்கு இவர் இளைய சகோதரராவர். மராத்தி நகைச்சுவை நடிகர் தமுன்னா மல்வாங்கரின் மகள் பாரதி மால்வங்கர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஆதிநாத், வைஜ்நாத் என்ற இரண்டு மகன்களும், இராதா என்ற ஒரு மகளும் உள்ளனர் . 2009 ஆம் ஆண்டில், நாவ் மாஸா ஷாமி என்ற தனது முதல் இசைத் தொகுப்பை வெளியிட்டார். இராதா தனது தந்தையிடம் பயிற்சி பெற்றார். மேலும், தந்தையுடன் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். [3]

தொழில்[தொகு]

இவர், தனது இசை வாழ்க்கையை 1955இல் வெளியான ஆகாஷ் கங்கா என்ற மராத்தித் திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். அதிலிருந்து, சன்சார், சானி, ஹா கெல் சவல்யாஞ்சா, ஜானகி, ஜெய்த் ரீ ஜெய்த், அம்பார்த்தா, நிவ்துங் போன்ற பல்வேறு மராத்தி படங்களுக்கும், ஒரு சில பாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்; அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கப் படங்களாக சுபா, லெக்கின் ... மற்றும் மாயா மெம்சாப் ஆகியவற்றைக் கூறலாம். [4]

இவர் பணி மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. மராத்தி மற்றும் இந்தி மொழிகளில் பாடல்களை இயற்றியுள்ளார். இவரது பாடல்கள் பெரும்பாலும் சிக்கலான மீட்டர்களைக் கொண்டுள்ளன. விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சாகரா பிரன் தலமலாலா என்ற கவிதைக்கு இவரது இசை குறிப்பிடத்தக்கது. மராத்தி இலக்கியத்தில் மிகவும் பிரபலமான கவிஞர்களில் ஒருவரான ஞானேஷ்வரின் இசையமைப்புகளைக் கொண்ட இவரது 1982 இசைத் தொகுப்பான் ஞானேஸ்வர் மௌலி, மராத்தியில் நவீன பக்தி இசைக்கு வழியமைத்தது.

தூர்தந்தி என்ற தூர்தர்ஷன் இசை நாடகத்திற்கும் இவர் இசையமைத்தார். இவர், நாட்டுப்புறப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.

விருதுகள்[தொகு]

இந்தியக் குடியரசுத் தலைவரின் மதிப்புமிக்க தேசிய திரைப்பட விருது, மகாராட்டிரா மாநிலத்தின் லதா மங்கேஷ்கர் விருது, சிறந்த பாடகர் மற்றும் இசை இயக்குனர் / இசையமைப்பாளருக்கான ஏழு மகாராட்டிரா மாநில விருதுகள் போன்ற பல விருதுகளை இவர் தனது வாழ்க்கையில் பெற்றுள்ளார்.

பீம்சென் ஜோஷி, பண்டிட் ஜஸ்ராஜ் ஆகியோரின் கைகளால் இவருக்கு பண்டிட் பட்டம் வழங்கப்பட்டது. இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருதினை 2009 ஆண்டில் வழங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]