சுத்தலா அனுமந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுத்தலா அனுமந்து
பிறப்புசுத்தலா, நல்கொண்டா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்]] , இந்தியா
இறப்பு(1982-09-09)செப்டம்பர் 9, 1982
தொழில்எழுத்தாளர்
மொழிதெலுங்கு
வகைவிடுதலை இயக்க வீரர்
கருப்பொருள்விடுதலை, ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம்
இலக்கிய இயக்கம்தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம்
பிள்ளைகள்சுத்தலா அசோக் தேஜா

சுத்தலா அனுமந்து (Suddala Hanmanthu) 1900 களின் நடுப்பகுதியில் பணியாற்றிய ஓர் குறிப்பிடத்தக்க இந்தியக் கவிஞர் ஆவார்.[1] மாபூமி திரைப்படத்தில் இடம் பெற்ற பல்லேடூரி பிள்ளகடா... பசுலகசே மொனகாடா... என்ற பாடல் மூலம் புகழ் பெற்றார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சுத்தலா அனுமந்து, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் மோத்கூர் மண்டலத்தில் உள்ள பலடுகு கிராமத்தில் பிறந்தார். பின்னர், தெலுங்காணாவின், யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள குண்டலா மண்டலத்திலுள்ள சுத்தலா கிராமத்திற்கு குடிபெயர்ந்தார்.

தொழில்[தொகு]

நிலப்பிரபுக்கள் மற்றும் ஐதராபாத் நிசாமின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக பொதுவுடைமைவாதிகள் தலைமையிலான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க தெலுங்கானா மக்களை சுத்தலா அனுமந்துவின் கவிதை தூண்டியது. இவரது சமகாலத்தைச் சேர்ந்த குர்ரம் யாதகிரி ரெட்டி, ஒரு பிரபலமான பொதுவுடைமைத் தலைவர். அவர் நிசாமின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரக போராடி வந்தார்.

இந்தப் போராட்டம் இந்திய வரலாற்றில் தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் என்று அழைக்கப்பட்டது. இவரது கருப்பொருள்கள் வெட்டிச் சாகிரி எனப்படும் கொத்தடிமைத் தொழிலில் இருந்து விடுதலை, ஜனநாயகம், சமத்துவம் மற்றும் பொதுவுடைமை என்பதாகும்.

இவரது தெலுங்கு நாட்டுப்புற பாடல், பல்லேடூரி பில்லகடா, இவரது பிராந்திய மக்களை அணிதிரட்டியது. இது மாபூமி (1980) திரைப்படத்திலும் சேர்க்கப்பட்டது. நாகார்ஜுனா நடித்த ராஜண்ணா திரைப்படம் சுத்தலா அனுமந்துவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சுத்தலா அனுமந்து ஜனகம்மாள் என்பவரை மணந்தார். இவர்களது மகன் சுத்தலா அசோக் தேஜா ஒரு சமகால பாடலாசிரியர் ஆவார்.[3] தேஜா, தனது தெலுங்கு பாடல்களுக்காக புகழ் பெற்றார். மற்றும் 2003 ஆம் ஆண்டில் சிறந்த பாடலுக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்..[4] பிரபல தெலுங்கு நடிகர் உத்தேஜ் இவரது மகளின் மகனாவார் (பேரன்).

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Hindu : Andhra Pradesh / Vijayawada News : Suddala promises more haunting melodies". www.hinduonnet.com. Archived from the original on 2 October 2009. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "The Hindu : Arts / Cinema : A slice of history". www.thehindu.com. Archived from the original on 26 October 2012. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  3. "Suddala promises more haunting melodies - ANDHRA PRADESH". தி இந்து. 2004-09-27. Archived from the original on 2004-10-14. பார்க்கப்பட்ட நாள் 2020-03-29.
  4. "Maa bhoomi songs download | maa bhoomi 1979. - Naa Songs & Ringtones" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்தலா_அனுமந்து&oldid=3847913" இலிருந்து மீள்விக்கப்பட்டது