சுதா ராய்
சுதா ராய் (sudha Roy) (1914-1987) ஓர் இந்தியப் பொதுவுடைமைத் தொழிற்சங்கவாதியும் அரசியல்வாதியுமாவார். வங்காளத் தொழிலாளர் கட்சியான இந்தியாவின் போல்சுவிக்குக் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த இவர் பின்னர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். [1] வங்காள இடதுசாரிகளின் மிக முக்கியமான பெண் தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.[2]
இளமைப் பருவம்
[தொகு]1914 ஆம் ஆண்டு பரித்பூரில் ஒரு கயசுதா நில உரிமையாளர் குடும்பத்தில் பிறந்தார். [3] மாணவப் பருவத்தில் தனது சகோதரர் சிசிர் ராய் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு 1930-ஆம் ஆண்டு தொழிலாளர் இயக்கத்தில் சுதா ராய் சேர்ந்தார்.[3][4][5][6] 1933 ஆம் ஆண்டில் வங்காளத் தொழிலாளர் கட்சி நிறுவப்பட்டபோது, தனது சகோதரருடன் சேர்ந்து, கட்சியின் முக்கிய தலைவரானார்.[7]
தொழிலாளர் அமைப்பாளர்
[தொகு]1932 மற்றும் 1958- ஆம் ஆண்டுகளுக்கிடையில் இவர் தெற்கு கொல்கத்தாவில் கமலா பெண்கள் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார்.[3][8][9] அந்த நேரத்தில் சுதா நன்கு அறியப்பட்ட ஒரு தொழிலாளர் தலைவராக இருந்தார்.[8] கப்பல்துறை தொழிலாளர்களால் மரியாதைக்குரிய சகோதரி என்ற பொருள் தரும் பகின்ஜி" என்று அழைக்கப்பட்டார். தொழிற்சங்கப் பணிகளுக்காக தினமும் பிற்பகலில் கிடர்பூர் கப்பல்துறைக்கு சுதா வந்து செல்வார்.[4][8][9]
பெண்கள் இயக்கம்
[தொகு]அகில இந்திய மகளிர் மாநாட்டில் தீவிரமாக இருந்த ராய் 1943-ஆம் ஆண்டு பெண்கள் இயக்கத்தில் சேர்ந்தார்.[3][1] ராய் 1954 மற்றும் 1982-ஆம் ஆண்டுகளுக்கிடையில் இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பின் துணைத் தலைவராக பணியாற்றினார். [3][10][11]
அரசியல் வாழ்க்கை
[தொகு]1951 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தலில் (1951-1952) வங்காள தொழிலாளர் கட்சியின் ஒரே வேட்பாளராக சுதா ராய் போட்டியிட்டார்.[12] பராக்பூரில் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட இவர் 25,792 வாக்குகளைப் பெற்றார். இது தொகுதியின் மொத்த வாக்குகளில் 16.2% வாக்குகளாகும்.[12] 1954 ஆம் ஆண்டு ராய் சிறையில் அடைக்கப்பட்டார்.[3] 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.[13] 9.75% வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார்.[13]
ஐக்கிய தொழிற்சங்க காங்கிரசில்
[தொகு]1958 ஆம் ஆண்டில் சுதா ராயின் தொழிற்சங்கமான டாக் மசுதூர் சங்கம் பிளவுக்கு ஆளானது. பிசுவநாத் துபேக்கு எதிராக சிசிர் ராய், சுதா ராய், புத்நாத்தே ஆகியோர் களமிறங்கினர்.[14] ராயின் குழு பெரும்பான்மை பிரிவை உருவாக்கியிருந்தாலும், பிளவுபட்ட தொழிற்சங்கத்தை கணிசமாக பலவீனப்படுத்தியது.[14] சிசிர் ராய் 1960-ஆன்டு இறந்தார். சுதா ராய் அவருக்குப் பிறகு ஐக்கிய தொழிற்சங்க காங்கிரசின் பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.[15][16][17][18]
இந்திய பொதுவுடமைக் கட்சியில்
[தொகு]1965 ஆம் ஆண்டு நடைபெற்ற பிபிஐ கட்சி மாநாட்டில் சுதா ராய் பிபிஐ மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளை இணைக்க அழைப்பு விடுத்தார்.[5] மாநாடு இணைப்பை நிராகரித்தது. சுதா ராயும் அவரது ஆதரவாளர்களும் பிபிஐ-யை விட்டு இந்திய பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தனர்.[5] இந்திய பொதுவுடைமைக் கட்சிக்கு மாறிய பிறகு, சுதா அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசில் சேர்ந்தார். [19] 1969 மற்றும் 1973-ஆம் ஆண்டுகளுக்கிடையில் மாநில சமூக நல வாரியத்திற்கு சுதா ராய் தலைமை தாங்கினார்.[3][20] மகிலா சமசுகிருத சம்மேளனம் எனப்படும் பெண்கள் கலாச்சார மாநாட்டை நிறுவினார். [3]
சுதா ராய் 1987-ஆம் ஆண்டு இறந்தார்.[21]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Maṇikuntalā Sena (1 April 2001). In search of freedom: an unfinished journey. Stree. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85604-25-1.
- ↑ Sampa Guha (1996). Political Participation of Women in a Changing Society. Inter-India Publications. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-210-0344-5.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 Sunil Kumar Sen (1985). The working women and popular movements in Bengal: from the Gandhi era to the present day. K.P. Bagchi. p. 96.
- ↑ 4.0 4.1 Samita Sen (6 May 1999). Women and Labour in Late Colonial India: The Bengal Jute Industry. Cambridge University Press. pp. 229–230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-45363-9.
- ↑ 5.0 5.1 5.2 S. N. Sadasivan (1977). Party and democracy in India. Tata McGraw-Hill. pp. 90–92.
- ↑ Amitabha Mukherjee (1 January 1996). Women in Indian Life and Society. Punthi Pustak and Institute of Historical Studies. p. 240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85094-97-7.
- ↑ Socialist Perspective. Vol. 17. Council for Political Studies. 1989. p. 276.
- ↑ 8.0 8.1 8.2 Leela Gulati; Jasodhara Bagchi (7 April 2005). A Space of Her Own: Personal Narratives of Twelve Women. SAGE Publications. p. 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-321-0341-7.
- ↑ 9.0 9.1 Labour File: A Bimonthly Journal of Labour and Economic Affairs. Vol. 5. Information and Feature Trust. 2007. p. 116.
- ↑ Link: Indian Newsmagazine. Vol. 16. 1974. p. 34.
- ↑ National Federation of Indian Women. Congress (1981). Tenth Congress, National Federation of Indian Women, Trivandrum, December 27–30, 1980. The Federation. p. 102.
- ↑ 12.0 12.1 Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS, 1951 TO THE FIRST LOK SABHA VOLUME I (NATIONAL AND STATE ABSTRACTS & DETAILED RESULTS)
- ↑ 13.0 13.1 Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1957 TO THE LEGISLATIVE ASSEMBLY OF WEST BENGAL பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 14.0 14.1 Michael v. d Bogaert (1970). Trade Unionism in Indian Ports: A Case Study at Calcutta and Bombay. Shri Ram Centre for Industrial Relations. p. 26.
- ↑ Harold A. Crouch (1966). Trade Unions and Politics in India. Manaktalas. p. 233.
- ↑ United Trades Union Congress (1964). Report. UTUC. p. 7.
- ↑ The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. 1967. p. 528.
- ↑ The Call. Vol. 16. S. Bhattacharya. 1964. p. 87.
- ↑ Paul Francis Magnelia (1967). The International Union of Students. Peninsula Lithograph Company. p. 185.
- ↑ National Council of Women in India Bulletin. National Council of Women in India. 1971. p. 45.
- ↑ Trade Union Record. Vol. 45. All-India Trade Union Congress. 1987. p. 116.