உள்ளடக்கத்துக்குச் செல்

சுதா பரத்வாஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுதா பரத்வாஜ் (Sudha Bharadwaj) என்பவர் என்பவர் சத்தீசுகர் மாநிலத்தில் 29 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஒரு தொழிற்சங்கவாதிப் பெண்மணி மற்றும் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான சமூக உரிமை செயற்பாட்டாளர் ஆவார். சத்தீசுகரில் உள்ள மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார். ஜன் ஹித் என்ற வழக்கறிஞர்களின் அமைப்பைத் தோற்றுவித்தவர். மேலும் சங்கர் குஹா நியோகியுடன் இணைந்து சத்தீசுகர் முக்தி மோர்ச்சாவில் இயங்கியவர்.[1]

இளமைக் காலம்

[தொகு]

சுதாவின் பெற்றோர்கள் அமெரிக்காவில் இருந்தபொழுதில் சுதா பிறந்த காரணத்தால், அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்தார்.தமது 11 ஆம் அகவையில் இந்தியாவுக்குத் திரும்பினார். 18 ஆம் அகவையில் அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிட்டார். கான்பூர் ஐ. ஐ. டி. கல்வி நிறுவனத்தில் சேர்ந்து கணிதம் பயின்று பட்டம் பெற்றார்.[2]

செயற்பாடுகள்

[தொகு]

இவர் ஐஐடி மாணவராக இருந்த காலகட்டத்தில் உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் தொழிலாளர்களின் ஆபத்தான பணி நிலைமையை அம்பலப்படுத்தினார். 1986இல் நியாகியுடன் இணைந்து சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவில் பணியாற்றினார்.[1] தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு, ராய்பூரில் உள்ள பண்டிட் ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரியில் 2000 ஆம் ஆண்டு சுதா சட்டத்தில் பட்டம் பெற்றார்.

சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவுடன் இணைந்து செயல்பட்டபோது, இவர் ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக தீவிரமாக போராடி, பிலாய் பகுதியில் சுரங்கங்க மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தினார். மேலும் இவர்  தலித் மற்றும் பழங்குடி மக்கள் உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள், குறிப்பாக நிலத்திற்கான உரிமை, கல்விக்கான உரிமை, நலவாழ்வு, ஊழல்மயமான நிலப்பிரபுக்களுக்கு எதிரான செயல்பாடுகள் போன்றவற்றில் ஈடுபட்டார்.[1] பினாயக் சென்னுக்கு சிறைத் தண்டனை விதித்த நீதித்துறை தீர்ப்பை விமர்சித்து எழுதி, அதைக் கடுமையாக கண்டனம் செய்தார்.[3]

இவர் தில்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் வருகை பேராசிரியர் ஆவார். மற்றும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.[4]

கைது

[தொகு]

மகாராட்டிர மாநிலம், பீமா கோரேகானில் நடந்த கலவர வழக்கு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியது போன்ற குற்றங்களைச்சாட்டி, இவர் உள்ளிட்ட இடதுசாரி ஆதரவாளர்கள் ஐந்து பேர் வீடுகளில் புனே காவல்துறையினர் 2018 ஆகத்து 28 அன்று சோதனை நடத்தினர். பின்னர் இந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.[5] இந்த கைதுகளுக்கு நாடுமுழுவதும் பரவலான எதிர்ப்பு ஏற்பட்டது. உச்ச நீதிமன்றம் இவர்கள் கைது தொடர்பாக அரசிடம் பல கேள்விகளை எழுப்பியதுடன், அவர்களைச் சிறையில் அடைக்ககாமல், வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.[6]

மேற்கோள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Masoodi, Ashwaq (7 November 2015). "This land is your land". LiveMint. http://www.livemint.com/Leisure/VNExP1mV0wdJ7Ha6UoKneK/This-land-is-your-land.html. 
  2. "The Telegraph - Calcutta (Kolkata) | Opinion | Enemies of the State". The Telegraph (India). http://www.telegraphindia.com/1080523/jsp/opinion/story_9308826.jsp. 
  3. "Critiquing The Binayak Sen Judgement". Outlook India. http://www.outlookindia.com/website/story/critiquing-the-binayak-sen-judgement/269790. 
  4. "Lawyers protest arrest of Nagpur advocate Surendra Gadling" (in en-IN). The Hindu. 2018-06-07. https://www.thehindu.com/news/national/other-states/lawyers-protest-arrest-of-nagpur-advocate-surendra-gadling/article24104577.ece. 
  5. "நலிந்த பிரிவினருக்காக தொடர்ந்து போராடி வரும் 5 இடதுசாரி ஆதரவாளர்கள்". செய்திக் கட்டுரை. இந்து தமிழ். 30 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2018.
  6. "எதிர்க்குரல்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்துக்கான ஆபத்து!". தலையங்கம். இந்து தமிழ். 3 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதா_பரத்வாஜ்&oldid=3577263" இலிருந்து மீள்விக்கப்பட்டது