சுண்டாங் கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுண்டங்கோழி
RED SPURFOWL NHOLE.png
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கல்லிபார்மஸ்
குடும்பம்: Phasianidae
துணைக்குடும்பம்: Perdicinae
பேரினம்: Galloperdix
இனம்: G. spadicea
இருசொற் பெயரீடு
Galloperdix spadicea
(Gmelin, 1789)

சுண்டாங் கோழி உருவ அமைப்பு[தொகு]

சுண்டாங் கோழி
சுண்டாங் கோழி

ஆங்கிலப்பெயர் : Red spurfowl

அறிவியல் பெயர் : Galloperdix spadicea

[2]

உடலமைப்பு[தொகு]

36 செ.மீ. - கருஞ்சிவப்புத் தோய்ந்த பழுப்பு நிற உடலில் கருப்பும் சிவப்புமான கீற்றுகளையும் சாம்பல் பழுப்பு நிற நெளிகோடுகளையும் கொண்டது. ஆணின் கால்களில் முள் முனைகள் உண்டு. பெண்ணின் உடல் கருஞ்சிவப்புத் தோய்ந்த மணல் நிறமானது.

காணப்படும் பகுதிகள்[தொகு]

தெற்கு. கிழக்கு மாவட்டங்கள் நீங்கலாகத் தமிழ்நாடு முழுவதும் மலை அடிவாரங்களில் மூங்கில் காடுகள், லாண்டானா புதர்கள் ஆகியறவ்றைச் சார்ந்து காணப்படும்.

உணவு[தொகு]

மேற்கண்ட பகுதிகளில் மறைந்து திரிந்தபடி புல் விதைகள், சிறு கனிகள், புழு பூச்சிகள், கறையான் ஆகியவற்றைத் தேடித் தின்னும். ஆளரவம் கேட்டவுடன் கால்களின் மேல் நம்பிக்கை வைத்துத் தப்பி ஓட முயலுமேயன்றி இறக்கைகளை நம்பிப் பறந்து செல்ல முயற்சிப்பதில்லை. ஒரே வட்டாரத்தைத் தனக்கு உரியதாக்கிக் கொண்டு அங்கேயே சுற்றிக் சுற்றி வரும்.

இனப்பெருக்கம்[தொகு]

கொக் கொக் கொக் கொக்கோ கத்தும், ஜனவரி முதல் ஜீன் முடிய மூங்கில் புதர்களிடையெ தரையில் சிறு குழியில் 3 முதல் 5 முட்டைகள் இடும்.

மேற்கோள்கள்[தொகு]

[3] [4]

  1. "Galloperdix spadicea". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. "Galloperdix spadicea". wikipedia. பார்த்த நாள் 21 செப்டம்பர் 2017.
  3. ஆதி வள்ளியப்பன். நாராய் நாராய். அறிவியல் வெளியீடு. https://books.google.co.in/books/about/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.html?id=TOyTXwAACAAJ&redir_esc=y. 
  4. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:33
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுண்டாங்_கோழி&oldid=2899593" இருந்து மீள்விக்கப்பட்டது