சுசில் குமார் ரிங்கு
சுசில் குமார் ரிங்கு Sushil Kumar Rinku | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 மே 2023 | |
முன்னையவர் | சண்டோக் சிங் சௌத்ரி |
தொகுதி | சலந்தர் |
பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2017–2022 | |
பின்னவர் | சீட்டல் அங்குரல் |
தொகுதி | சலந்தர் மேற்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 சூன் 1975 ஜலந்தர், பஞ்சாப் (இந்தியா) |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சுனிதா ரிங்கு |
வாழிடம் | சலந்தர் |
முன்னாள் கல்லூரி | தாவ் கல்லூரி, சலந்தர் |
தொழில் | அரசியல்வாதி |
சுசில் குமார் ரிங்கு (Sushil Kumar Rinku) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1975 ஆம் ஆண்டு சூன் மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] பஞ்சாப் மாநில அரசியலில் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். சலந்தர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] முன்னதாக இவர் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். 2017 ஆம் ஆண்டில் சலந்தர் மேற்குப் பகுதியிலிருந்து பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
சுசில் குமார் 12 ஆவது வகுப்பு வரை படித்தார். வேட்புமனு தாக்கல் செய்தபடி இவருடைய சொத்து மதிப்பு 1.62 கோடியாகும்.[4]
சுசில் குமார் ரிங்கு சலந்தர் மேற்கு தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றார் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் மகிந்தர் பால் பகத்தை 17,334 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5][6] 2023 ஆம் ஆண்டில் இவர் சலந்தர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 58,691 வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Members". www.punjabassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
- ↑ "Jalandhar Lok Sabha Bypoll 2023 Result: AAP's Sushil Kumar Rinku defeats Congress's Kamarjeet Kaur Chaudhary with huge margin". IP Singh. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 May 2023. பார்க்கப்பட்ட நாள் 13 May 2023.
- ↑ "Sushil Kumar(Indian National Congress(INC)):Constituency- JALANDHAR WEST (SC)(JALANDHAR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
- ↑ "Sushil Kumar Rinku(Indian National Congress(INC)):Constituency- JALANDHAR WEST (SC)(JALANDHAR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2023-11-17.
- ↑ "JALANDHAR WEST Election Result 2017, Winner, JALANDHAR WEST MLA, Punjab". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
- ↑ "2017 Jalandhar West - Punjab Assembly Election Winner, LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.