சீரியம் பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீரியம் பாசுபைடு
இனங்காட்டிகள்
25275-75-6 Y
ChemSpider 82506
EC number 246-783-4
InChI
  • InChI=1S/Ce.P
    Key: SMKQIOCKGHFKQZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 91372
SMILES
  • [P].[Ce]
பண்புகள்
CeP
வாய்ப்பாட்டு எடை 171.09 g·mol−1
தோற்றம் சாம்பல் நிறப் படிகங்கள்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சீரியம் பாசுபைடு (Cerium phosphide) என்பது CeP என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீரியம் தனிமத்தின் அறியப்பட்ட பாசுபைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். ஐதரசன் வாயுவின் முன்னிலையில் சீரியம்(IV) ஆக்சைடுடன் பாசுபீனை சேர்த்து 1300 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி வினைபுரியச் செய்தால் சீரியம் பாசுபைடு உருவாகும்.[2] அல்லது சோடியம் பாசுபைடையும் சீரியம்(III) குளோரைடு சேர்மத்தையும் சேர்த்து 700~800 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி வினைபுரியச் செய்தாலும் சீரியம் பாசுபைடு உருவாகும்.[1] 900 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் காற்றில் ஒற்றைச்சரிவச்சு கட்டமைப்பிலான சீரியம் பாசுபேட்டாக (CePO4) ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது. சீரியம் பாசுபைடு குவார்ட்சு உருக்குக் கலனில் அயோடினுடன் வினைபுரிந்து CeSiP3 சேர்மம் உருவாகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Rowley, Adrian T.; Parkin, Ivan P. (1993). "Convenient synthesis of lanthanide and mixed lanthanide phosphides by solid-state routes involving sodium phosphide". Journal of Materials Chemistry (Royal Society of Chemistry (RSC)) 3 (7): 689. doi:10.1039/jm9930300689. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-9428. 
  2. Vasil'eva, I. G.; Mironov, K. E.; Mironov, Yu. I. Properties of cerium monophosphide(in உருசிய மொழி). Redkozemel. Metal. Ikh Soedin., Mater. Vses. Simp., 1970: 160-165. வார்ப்புரு:Coden.
  3. Mironov, K. E.; Abdullin, R. V. Formation and chemical transfer of cerium silicon phosphide (CeSiP3)(in உருசிய மொழி). Zhurnal Neorganicheskoi Khimii, 1980. 25 (8): 2062-2066.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரியம்_பாசுபைடு&oldid=3890545" இலிருந்து மீள்விக்கப்பட்டது