சீரடி விரைவு தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீரடி விரைவு தொடருந்து
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு தொடர்ந்து
முதல் சேவை8 சூலை 2011; 12 ஆண்டுகள் முன்னர் (2011-07-08)
நடத்துனர்(கள்)தென்னிந்திய ரயில்வே
வழி
தொடக்கம்புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் நிலையம்
இடைநிறுத்தங்கள்24
முடிவுசாய்நகர் சீரடி
ஓடும் தூரம்1,391 km (864 mi)
சேவைகளின் காலஅளவுவாரம் ஒரு முறை முறை
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஈரடுக்கு, மூன்றடுக்கு வசதி கொண்ட குளிர்சாதன பெட்டிகள், முன்பதிவு செய்ய கூடிய படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், முன்பதிவு இல்லாத பொது பெட்டிகள்
இருக்கை வசதிவசதி உண்டு
படுக்கை வசதிவசதி உண்டு
உணவு வசதிகள்சமையலறைப் பெட்டி வசதி இல்லை
காணும் வசதிகள்Rake Sharing with 16003 / 16004 Chennai–Nagarsol Express
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புStandard Indian Railway coaches
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்55 km/h (34 mph)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

சாய் நகர் சீரடி அதிவிரைவு தொடருந்து தமிழ்நாட்டின் புரட்சித் தலைவர் டாக்டர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நிலையத்தையும் சாய் நகர் சீரடி நிலையத்தையும் இணைக்கும் வகையில் இயக்கப்படும் தென்னிந்திய ரயில்வே துறையினருக்கு சொந்தமான அதிவிரைவு தொடருந்தாகும். இந்த தொடருந்து 22601, 22602 என்ற எண்களில் எண்களில் இயக்கப்பட்டு வருகிறது.

தொடருந்து சேவைகள்[தொகு]

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் வழியாக இயக்கப்படும் இந்த தொடருந்து புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் சென்ட்ரல் தொடருந்து நிலையம் முதல் சாய் நகர் சீரடி நிலையம் வரை 22601 என்ற எண்ணில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக 22602 என்ற எண்ணில் சீரடி சாய் நகர் முதல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் தொடருந்து சென்ட்ரல் தொடருந்து டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் தொடருந்து நிலையம் வரை இயக்கப்படுகிறது. இதன் மொத்த பயண தூரமான 1,391 km (864 mi)யை 25 மணி 17 நிமிடங்களில் கடக்கிறது. சராசரியாக மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இதன் பொருட்டு மற்ற விரைவு தொடருந்துகளைப் போல விரைவு தொடருந்துகளுக்கான சிறப்பு வரி இதன் பயணத் தொகையுடன் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

பயணப் பெட்டிகளின் வடிவமைப்பு[தொகு]

ஈரடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள் மூன்று, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் ஐந்து, முன்பதிவு வசதி உள்ள படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பதினொன்று, முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகள் மூன்று, அமரும் வசதி கொண்ட சரக்கு பெட்டிகள் இரண்டு கொண்ட இந்த சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையம் - சாய் நகர் சீரடி விரைவு தொடருந்தில் சமையலறைப் பெட்டி வசதி இல்லை.

பயணிகளின் எண்ணிக்கை, திருவிழா காலம் போன்ற காரணங்களால் பெட்டிகளின் எண்ணிக்கை ரயில்வே நிர்வாகத்தை பொருத்து மாற்றப்படலாம்.

வழித்தடமும் நிறுத்தங்களும்[தொகு]

22601, 22602 ஆகிய எண்களில் இயக்கப்படும் இந்த சீரடி விரைவு தொடருந்து புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் தொடருந்து நிலையத்திலிருந்து அரக்கோணம் சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, கிருஷ்ணராஜபுரம், சத்யசாய் பிரசாந்தி நிலையம், தர்மவரம் சந்திப்பு, அனந்தபுரம், குண்டக்கல் சந்திப்பு, வாடி சந்திப்பு, சோலாப்பூர், தாவுண்டு, அகமதுநகர் போன்ற 21 நிறுத்தங்களின் வழியாக கடந்து சாய் நகர் சீரடி நிலையத்தை சென்றடைகிறது.


இழுவை இயந்திரம்[தொகு]

இந்த சீரடி விரைவு தொடருந்து இயக்கப்படும் தண்டவாளப் பாதை முழுவதுமாக மின்மயமாக்கப்படவில்லை. எனவே ஈரோடு சந்திப்பு மூலம் பராமரிக்கப்படும் WDM-3A என்ற டீசல் இழுவை இயந்திரத்தால் இழுக்கப்பட்டு நிறுத்தத்தை அடைகிறது.

வண்டி எண் 22601[தொகு]

'சீரடி விரைவு தொடருந்து வண்டியானது டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையத்தில் இருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10.10 மணிக்கு இயக்கப்பட்டு அரக்கோணம் சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, கிருஷ்ணராஜபுரம், சத்யசாய் பிரசாந்தி நிலையம், தர்மாவரம் சந்திப்பு, அனந்தபூர், குண்டக்கல் சந்திப்பு, வாடி சந்திப்பு, சோலாப்பூர், தாவுண்டு சந்திப்பு, அகமதுநகர் என 21 நிறுத்தங்களை கடக்க மணிக்கு 54 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 25 மணி 20 நிமிடங்களில் பயணித்து நேரங்களில் சாய் நகர் சீரடி நிலையத்தை அடுத்த நாள்(வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 1390 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்து தனது பயணத்தில் சில நிலையங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னிந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[2]

வண்டி எண் 22602[தொகு]

மறுமார்க்கமாக 22602 என்ற எண்ணைக் கொண்ட இந்த தொடருந்து வண்டியானது சாய் நகர் சீரடி நிலையத்திலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 08.25 மணிக்கு இயக்கப்பட்டு 22 நிறுத்தங்களையும் கடக்க மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 25 மணி 20 நிமிடங்களில் சென்னை சென்ட்ரல் நிலையத்தை மறுநாள் (சனிக்கிழமை) காலை 09.45 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 1391 கிலோ மீட்டர் ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வரை இதன் பயணத்தின் போது இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னிந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "TTE dies following cardiac arrest after argument". The Hindu. 13 December 2013. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/tte-dies-following-cardiac-arrest-after-argument/article5452809.ece. பார்த்த நாள்: 30 May 2018. 
  2. https://indiarailinfo.com/train/-train-mgr-chennai-central-sainagar-shirdi-sf-express-22601/15062/35/6721. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. https://indiarailinfo.com/train/-train-sainagar-shirdi-mgr-chennai-central-sf-express-22602/15134/6721/35. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரடி_விரைவு_தொடருந்து&oldid=3579535" இலிருந்து மீள்விக்கப்பட்டது