சீமை ஆல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீமை ஆல்
சீமை ஆலமரமொன்றின் அடிப்பகுதி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துணைப்பேரினம்:
இனம்:
பை. இலாஸ்ட்டிக்கா
இருசொற் பெயரீடு
பைக்கஸ் இலாஸ்ட்டிக்கா
ராக்ஸ்.

சீமை ஆல் (Ficus elastica) அல்லது சீமை ஆல் வடகிழக்கு இந்தியா, இந்தோனீசியாவின் சுமாத்திரா, ஜாவா போன்ற பகுதிகள் ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது. பெரிய மரமான இது, ஃபைக்கஸ் தாவரச் சாதியில், ஆலமர வகையைச் சார்ந்தது. பொதுவாக 30-40 மீட்டர் உயரம் வரையும், மிக அரிதாக 60 மீட்டர் வரையும் கூட வளரக்கூடிய இதன் அடிமரம் 2 மீட்டர் வரை பருக்கக்கூடியது. ஒழுங்கற்ற அடிமரத்தைக் கொண்ட இதில் விழுதுகள் உண்டாகி மரத்தை நிலத்தில் உறுதியாக வைத்திருப்பதுடன், பாரமான இதன் கிளைகளையும் தாங்குகின்றது. 10-35 சமீ நீளமும், 5-15 சமீ அகலமும் கொண்ட நீள்வட்ட வடிவில் அமைந்த இலைகள் மினுக்கம் கொண்டவை. இளம் தாவரத்தின் இலைகளே பெரிதாகக் காணப்படும். சமயத்தில் 45 சமீ நீளம் வரை கூட வளர்வதுண்டு. முதிர்ந்த மரத்தின் இலைகள் ஒப்பீட்டளவில் சிறியவை. பொதுவாக 10 சமீ நீளம் கொண்டவை.

கொயெஹ்லரின் (Koehler) மருத்துவத் தாவரங்கள் பற்றிய நூலிலிருந்து எடுக்கப்பட்ட படம். 1887

ஃபைக்கஸ் சாதியைச் சேர்ந்த ஏனைய தாவரங்களைப் போலவே இதன் பூக்களில் இடம்பெறும் மகரந்தச் சேர்க்கைக்கு ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த குளவிகளே உதவுகின்றன. இது ஒரு வகையான கூட்டுருவாக்கத் தொடர்பின் (co-evolved relationship) அடிப்படையிலேயே நடைபெறுகின்றது. இதனால் மகரந்தச் சேர்க்கைக்கு உதவ வேறு உயிரினங்களைக் கவரவேண்டிய தேவை கிடையாது. எனவே, இந்த மரத்தில், கவர்ச்சியான நிறங்களைக் கொண்ட அல்லது மணம் பொருந்திய பூக்கள் இருப்பதில்லை.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமை_ஆல்&oldid=3764939" இலிருந்து மீள்விக்கப்பட்டது