சீதா காசிமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதா காசிமி
இயற்பெயர்سيتا قاسمى
பிறப்பு6 ஏப்ரல் 1983 (1983-04-06) (அகவை 40)
காபுல், ஆப்கானித்தான்
இசை வடிவங்கள்பாப், ஆப்கானிய நாட்டுப்புற இசை
தொழில்(கள்)பாடகர், பாடலாசிரியர், இஅசையமைப்பாளர்
இசைத்துறையில்2008–தற்போது வரை
இணைந்த செயற்பாடுகள்வாலி எத்சாசி, சபிக் முரீத்

சீதா காசிமி (Seeta Qasemi; பிறப்பு 6 ஏப்ரல் 1983), ஆப்கானித்தானியப் பாடகரும், பாடலாசிரியரும் ஆவார்.[1] இவர் 2008இல் தொலைக்காட்சியில் ஒரு தொண்டு நிகழ்ச்சியின் மூலம் ஆப்கானிய இசைத் துறையில் அறிமுகமானார்.[2]. இவர் பஷ்தூ மற்றும் தாரி இரண்டிலும் பாடுகிறார். தற்போது ஜெர்மனியில் வசிக்கிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சீதா காசிமி சிறு வயதிலிருந்தே ஒரு பிரபலமான கால்பந்து வீரராக இருக்க விரும்பினார். ஆப்கானித்தானில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக, சீதா மிக இளம் வயதிலேயே தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இவருடைய குடும்பம் பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தது. அங்கு இவர் தனது 25 வயதில் மிகவும் வயதான ஒருவரை திருமணம் செய்வதற்கு முன்பு சிறிது காலம் தங்கியிருந்தார்.[3] இவர் அவரது முதல் மனைவி இல்லை என்று தெரிந்த பிறகு இவர் திருமணத்தில் மிகவும் துன்பங்களை எதிர்கொண்டார். பின்னர் இத் திருமணட்த்திலிருந்து விடுபட்டு விவாகரத்து பெற்றார். இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ஜெர்மனியில் வசிக்கிறார்கள்.

தொழில்[தொகு]

சீதாவின் வாழ்க்கை, ஜாவித் ஷெரீப் மற்றும் பிற இசைத் துறையின் புகழ்பெற்ற பாடகர்களுடன் சிறிய விழாக்களில் நிகழ்த்துவதன் மூலம் தொடங்கியது.[1] இந்த விழாக்களில் ஒன்றில் இவர் அப்போது ஒளிப்பதிவாளராக இருந்த வாலி எத்சாசியை சந்தித்தார். அவர் தன்னுடன் இணைந்து பணியாற்ற சீதாவிடம் கேட்டுக் கொண்டார். அவருடன் இணைந்து "பியா து" , "தில்பரே மெஹ்ராபனம்" போன்ற பாடல்களை சீதா இசையமைத்து, எழுதி, பாடினார். இதற்குப் பிறகு இவர் தனது தனிப்பாடலான "பா தஸ்வீரம்" மூலம் தனியாக நிகழ்ச்சிகளைத் தொடங்கினார். இந்த பாடல் மூலம் சீதா காசிமி ஒரு ஆப்கானிய பாடகியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். வாலியின் பாடல்களுக்கு பின்னால் இவர் குரல் கொடுத்தார் என்பது பலருக்கு தெரியாது.

இவரது முதல் வணிக வெற்றி "துக்தரே குச்சி" என்ற பாடலுடன் வந்தது. இது ஒரு ஆப்கான் நாடோடிப் பெண்ணுக்கும் ஒரு பையனுக்கும் இடையிலான காதல் கதையை அடிப்படையாகக் கொண்டது. இவர் தனது அடுத்த பாடலான "மஸ்தம் மஸ்த்" என்ற பாடலை வெளியிட்டார். இதன் மூலம் இவர் ஆப்கானிததானுக்கு வெளியே உள்ள ஆப்கானியர்களிடையேயும் தன்னை ஒரு இசை கலைஞராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மேலும் சபிக் முரீத் என்ற பாடகருடன் இணைந்து பாடி ஆப்கானித்தானுக்குள்ளும் பிரபலமடைந்தார். டா சாரா மீனா லாரெம் என்பது சீதாவின் முதல் பஷ்தூ பாடலாகும். மேலும், இவரது சிறந்த உச்சரிப்பு மற்றும் நிகழ்படம், ஆகியவற்றிற்காக பாராட்டப்பட்டது . இந்த பாடல் ஆப்கானித்தானுக்குள் படமாக்கப்பட்டது. ஆப்கானித்தான் கிராமவாயும் மேற்கிலிருந்து ஆப்கானித்தான் சிறுமி கிராமத்திற்கு வருகை தரும் காதல் கதையை சித்தரிக்கிறது. சபிக் முரீத்துடன் "லம்பா டி ஷோமா" என்ற மற்றொரு பாடலும் வெளியானது. இருப்பினும், இந்த பாடலுக்காக எந்த நிகழ்படமும் உருவாக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தபோது தொடர்ச்சியான இசை நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களை வழங்கினார்.

சமீபத்திய வெளியீடுகள்[தொகு]

இவரது அடுத்த வெற்றி கசாரா பாடலான 'வதந்தர்'. சர்வதேச பெண் தினத்தன்று சீதா இதனை வெளியிட்டார். இந்த பாடல் ஆப்கானித்தான் சமூகத்தில் ஒரு பெண்ணின் பங்கு பற்றிய முக்கியமான பிரச்சினையை பிரதிபலித்தது. இவரது அடுத்த மற்றும் சமீபத்திய வெற்றி "கரனே" வரை பல பாடல்களுடன் இதைத் தொடர்ந்தார். ஒரு பஷ்தூ மொழி பாடல், எளிமையான ஒரு ஆப்கானிஸ்தான் பெண்ணின் வாழ்க்கையை காட்டுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதா_காசிமி&oldid=3278865" இருந்து மீள்விக்கப்பட்டது