சீதா ஆறு
Appearance
சீதா ஆறு (Seetha River) சீத்தா ஆறு என அழைக்கப்படும் ஆறானது இந்தியாவில் கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டத்தில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறாகும்.[1]
ஆற்றோட்டம்
[தொகு]இந்த ஆறு நரசிம்ம பர்வதத்திற்கு அருகில் உருவாகி அகும்பே காடுகள் வழியாகச் சென்று ஹெப்ரி, பார்கூர் வழியே பாய்ந்து அரபிக் கடலில் சேருவதற்கு முன்பு சுவர்ணா ஆற்றில் இணைகிறது. பருவமழை காலத்தில் ஆற்றில் நீர் வரத்து அதிக அளவில் இருக்கும்.[2] இந்த ஆறும் இதன் சிறிய துணை நதிகளும் குட்லு நீர்வீழ்ச்சி, [3] பர்கானா நீர்வீழ்ச்சி, ஜோம்லு தீர்த்த நீர்வீழ்ச்சி போன்ற பல நீர்வீழ்ச்சிகளை உருவாக்கியுள்ளன. அரசு நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் ஜூன் முதல் அக்டோபர் வரை சாகச ஆர்வலர்களால் இந்த ஆற்றில் படகு போட்டிகள் நடத்தப்படுகின்றன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Man drowns in Sita river". The Hindu, Newspaper. 9 February 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/man-drowns-in-sita-river/article5669706.ece. பார்த்த நாள்: 2 September 2015.
- ↑ "Landslides, rivers in spate as rains lash Dakshina Kannada, Udupi districts agai". Deccan Herald. 18 July 2015. http://www.deccanherald.com/content/490079/landslides-rivers-spate-rains-lash.html. பார்த்த நாள்: 2 September 2015.
- ↑ "Kudlu falls: Difficult to reach but it is worth it". Deccan Herald. 27 November 2010. http://www.deccanherald.com/content/116275/kudlu-falls-difficult-reach-worth.html. பார்த்த நாள்: 2 September 2015.
- ↑ "Boost for adventure sports near Hebri". The Hindu, Newspaper. 28 September 2005.