சீசர் சாவேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீசர் சாவேசு
சாவேசுin 1972
பிறப்புசீசரியோ இஸ்ட்ரடா சாவேசு
(1927-03-31)மார்ச்சு 31, 1927
யூமா, அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புஏப்ரல் 23, 1993(1993-04-23) (அகவை 66)
சான் லூய்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா
பணி
வாழ்க்கைத்
துணை
ஹெலன் பெபிலா சாவேசு
பிள்ளைகள்8
விருதுகள்சுதந்திரத்திற்கான குடியரசுப் பதக்கம் (1994)[1][2]

சீசர் சாவேசு (ஆங்கில மொழி: César Estrada Chávez, எசுப்பானிய ஒலிப்பு: [ˈsesaɾ esˈtɾaða ˈtʃaβes]; மார்ச் 31, 1927 – ஏப்ரல் 23, 1993) என்பவர் அமெரிக்கத் தொழிலாளர் தலைவர், குமுக ஒருங்கிணைப்பாளர், தொழிலதிபர், லத்தின் அமெரிக்க குடியுரிமைச் செயற்பாட்டாளராவார். டோலொரிஸ் ஹுரேடாவுடன் இணைந்து தேசியப் பண்ணைப் பணியாளர்கள் கூட்டமைப்பை(NFWA) நிறுவினார், பின்னர் அதை வேளாண் பணியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவுடன்((AWOC) இணைத்து ஐக்கியப் பண்ணைப் பணியாளர்கள் தொழிற்சங்கமாக மாறியது. கொள்கையடிப்படையில் இவர் கத்தோலிக்க திருச்சபையின் சமூகக் கொள்கையுடன் இடதுசாரி அரசியல் கொள்கையைக் கலந்து கடைப்பிடித்தார்.


இவர் 1927 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரிசோனா மாகாணத்து யூமா நகரில் மெக்சிகோ அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்தார். ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் சேர்வதற்கு முன்னர் பணியாளராக இருந்துள்ளார். பின்னர் கலிபோர்னியாவில் திருமணம் முடித்து, சமூகச் சேவை அமைப்பில்(சி.எஸ்.ஓ) சேர்ந்து கொண்டு வாக்காளர் பதிவுப் பணியாளார்களுக்கு உதவினார். 1959 இல் லாஸ் ஏஞ்சல்ஸை இடமாகக் கொண்டு அந்த சமூகச் சேவை அமைப்பின் தேசிய இயக்குநரானார். 1962 ஆம் ஆண்டு சி.எஸ்.ஓ. அமைப்பிலிருந்து விலகி தேசியப் பண்ணைப் பணியாளர்கள் கூட்டமைப்பினை(என்.எஃப்.டபிள்யூ.ஏ) டோலொரிஸ் ஹுரேடாவுடன் இணைந்து நிறுவினார். இதன் மூலம் காப்பீட்டுத் திட்டம், கூட்டுறவு கடன் மற்றும் பண்ணைப் பணியாளார்களுக்கான எல் மல்க்ரிடோ என்ற இதழ் போன்றவற்றை முன்னெடுத்தார். 1965-1970 காலகட்டங்களில் பண்ணைப்பணியாளர்களுக்காக வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்து டெலெனோ திராட்சைப் பணிமுடக்கம் போன்று வெற்றியும் அடைந்தார். போராட்டங்களுக்கிடையே தேசியப் பண்ணைப் பணியாளர்கள் கூட்டமைப்பினை வேளாண் பணியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவுடன்((AWOC) இணைத்து ஐக்கியப் பண்ணைப் பணியாளர்கள் தொழிற்சங்கமாக 1967 இல் உருவாக்கினார். இந்திய விடுதலை இயக்கத்தின் தலைவரான மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் மீதுள்ள ஈர்ப்பால் அகிம்சைவழியிலான யுக்திகளும், ஒத்துழையாமை முறைகளும் கடைப்பிடித்து பண்ணை முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுத்தார். தேவாலயங்களில் பொதுக் கூட்டம் நடத்துவதும், கத்தோலிக்கத் தேவாலயங்களில் பொது உண்ணாவிரதம் நடத்துவதும் என்று ரோமன் கத்தோலிக்க அடையாள முறைமையைத் தனது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். இடதுசாரிய அமைப்புகளிடமும் தொழிலாளர்களிடமும் மிகுந்த வரவேற்பினைப் பெற்றார். மேலும் எஃப்.பி.ஐயின் கண்காணிப்பிலும் இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "JPL Small-Body Database Browser: 6982 Cesarchavez (1993 UA3)". Jet Propulsion Laboratory. https://ssd.jpl.nasa.gov/sbdb.cgi?sstr=2006982. 
  2. "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. https://www.minorplanetcenter.net/iau/ECS/MPCArchive/MPCArchive_TBL.html. 

உசாத்துணை[தொகு]

Bruns, Roger (2005). Cesar Chavez: A Biography. Westport, CT: Greenwood. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780313334528. https://archive.org/details/isbn_9780313334528. 
Ospino, Hosffman (2013). "Religious Education and the Communal Shaping of a Christian Social Consciousness: The Testimony of César Chávez". Religious Education 108 (4): 403–417. doi:10.1080/00344087.2013.805033. 
Lichtenstein, Nelson (2013). "Introduction: Symposium on Cesar Chavez and the United Farm Workers". International Labor and Working-Class History (83): 143–145. doi:10.1017/S014754791300001X. 
O'Brien, Kevin J. (2012). ""La Causa" and Environmental Justice: César Chávez as a Resource for Christian Ecological Ethics". Journal of the Society of Christian Ethics 32 (1): 151–168. doi:10.1353/sce.2012.0008. 
Pawel, Miriam (2014). The Crusades of Cesar Chavez: A Biography. New York: Bloomsbury Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-60819-710-1. https://archive.org/details/crusadesofcesarc0000pawe. 
Piar, Carlos R. (1996). "César Chávez and La Causa: Toward a Hispanic Christian Social Ethic". The Annual of the Society of Christian Ethics 16: 103–120. doi:10.5840/asce1996167. 
Soto, Lilia (2017). "La Mesa Popular: When César Chávez and Dolores Huerta Came to Napa". Kalfou 4 (1): 67–. doi:10.15367/kf.v4i1.144. 
Street, Richard Steven (1996). "The FBI's Secret File on César Chávez". Southern California Quarterly 78 (4): 347–384. doi:10.2307/41171831. 
Watson, James G. (2005). "Peter Matthiessen's Sal Si Puedes: In America with Cesar Chavez". Genre 38 (1–2): 95–114. doi:10.1215/00166928-38-1-2-95. 
Wells, Ronald A. (2009). "Cesar Chavez's Protestant Allies: The California Migrant Ministry and the Farm Workers". The Journal of Presbyterian History 87 (1): 5–16. https://archive.org/details/sim_journal-of-presbyterian-history_spring-summer-2009_87_1/page/5. 
Zerzan, John (1972). "Cesar Chavez and the Farm Workers: The New American Revolution - What Went Wrong?". Politics & Society 3 (1): 117–128. doi:10.1177/003232927200300107. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசர்_சாவேசு&oldid=3582003" இருந்து மீள்விக்கப்பட்டது