சி. ராமச்சந்திர மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. ராமச்சந்திர மேனன்
பிறப்பு(1929-01-26)26 சனவரி 1929
சாலப்புரம், கோழிக்கோடு
கேரளம், இந்தியா
இறப்பு9 மே 2017(2017-05-09) (அகவை 88)
சாலப்புரம், கோழிக்கோடு, கேரளா,
இந்தியா
பணிஒளிப்பதிவாளர்
பெற்றோர்பி. கே. எம். ராஜா, செங்கலத்து ஜானகியம்மா
வாழ்க்கைத்
துணை
மாலதி
பிள்ளைகள்2
விருதுகள்1971 - சிறந்த ஒளிப்பதிவாளர் - உம்மாச்சு திரைப்படம்

சி. ராமச்சந்திர மேனன் (C. Ramachandra Menon) ஓர் தென்னிந்திய ஒளிப்பதிவாளராக , மலையாளம் மற்றும் தமிழில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர்.[1] உம்மாச்சு என்ற பெயரில் வெளிவந்த புதினத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் வெளிவந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக இருந்தார். மேலும் ஈடா மற்றும் நீங்கலெண்ணே கம்யூனிஸ்ட்டாக்கி ஆகியவற்றில் அவர் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர். மலையாளத்தில் சிறீகுமாரன் தம்பி, பு. பாஸ்கரன் மற்றும் குஞ்சாக்கோ ஆகியோருடன் இவர் அடிக்கடி பணியாற்றியுள்ளார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் 1929 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் திருவண்ணூர் கோவிலகத்தைச் சேர்ந்த பிகேஎம் ராஜா மற்றும் செங்கலத்து ஜானகியம்மா ஆகியோரின் மகனாவார். இவர், ஆங்கிலோ-இந்திய ஒளிப்பதிவாளரான மார்கசு பர்ட்லி; மஸ்தான்; மற்றும் மல்லி இரானி ஆகியோருடன் சென்னை வாஹினி ஸ்டுடியோவில் பணிபுரிந்தார். 1956ல் சிங்கப்பூர் சென்று அங்கு சிங்கப்பூர் தொலைக்காட்சியில் மலாய் திரைப்படங்களை தயாரிப்பதில் சுமார் ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். 1970ல் நாடு திரும்பிய இவர் உதயா ஸ்டுடியோவில் சிலகாலம் பணிபுரிந்தார். [2] இவர், மாலதி என்பவரை மணந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். இவர் 9 மே 2017 அன்று இறந்தார் [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cameraman Ramachandra Menon passes away The New Indian Express
  2. 2.0 2.1 "Noted cinematographer C Ramachandra Menon passes away - Times of India". Times of India. 2017-05-09. பார்க்கப்பட்ட நாள் 2019-10-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ராமச்சந்திர_மேனன்&oldid=3849878" இலிருந்து மீள்விக்கப்பட்டது