சிவப்புத்தாரா
Appearance
சிவப்புத்தாரா | |
---|---|
![]() | |
சிவப்புத்தாரா இணை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | தடோரினினே
|
பேரினம்: | தடோர்னா
|
இனம்: | த. பெரூஜினீயா
|
இருசொற் பெயரீடு | |
தடோர்னா பெரூஜினீயா (பாலாசு, 1764) | |
![]() | |
சிவப்புதாரா பரம்பல் இனப்பெருக்க காலம் உறைவிடம் இனப்பெருக்கமில்லா காலம் | |
வேறு பெயர்கள் | |
கேசார்கா பெரூஜினீயா |

சிவப்புத்தாரா (Ruddy shelduck) [2] அல்லது கருட தாரா அல்லது செங்கிளுவை[3] (Ruddy shelduck - Tadorna ferruginea) என்பது அனடீடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதன் சராசரி நீளம் 58-70 செ.மீ (23-28 அங்குலம்), இறக்கை நீட்டம் 110-135 செ.மீ (43-53 அங்குலம்). இது செம்மஞ்சள்-பழுப்பு நிற உடலையும், சிறிது மங்கலான நிறத்தில் தலைப் பகுதியையும் கொண்டது, கறுப்பு நிறத்தில் வால், மற்றும் பறக்கும் சிறகுப் பகுதிகளையும் கொண்டது. இது ஒரு இடப்பெயர்வுக்கு உள்ளாகும் பறவையாதலால், குளிர் காலத்தில் இந்திய துணைக்கண்டத்திலும், இனப்பெருக்க காலத்தில் தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் நடு ஆசியாவிலும் வாழும். வட ஆப்பிரிக்காவிலும் இவற்றின் சிறிதளவு சனத்தொகை இருக்கிறது. அத்துடன் பெரிய சத்தத்தை ஏற்படுத்தும் பறவைகளாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tadorna ferruginea". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. Retrieved 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ தென் இந்திய பறவைகள் - ரிச்சர்ட் கிரிமிட், டிம் இன்சுகிப் (தமிழில்: கோபிநாதன் மகேஷ்வரன்) - பக். 52(4)
- ↑ தமிழில் பறவைப் பெயர்கள் - டாக்டர் க. ரத்னம் - பக். 21(41)