உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீகாந்த் கிடம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீகாந்த் கிடம்பி
2013இல் கே. சிறீகாந்த்
நேர்முக விவரம்
பிறப்பு பெயர்ஸ்ரீகாந்த் நம்மாழ்வார் கிடம்பி
நாடு இந்தியா
பிறப்பு7 பெப்ரவரி 1993 (1993-02-07) (அகவை 31)
குண்டூர், ஆந்திரப் பிரதேசம்
வசிக்கும் இடம்ஐதராபாத்து, இந்தியா
உயரம்1.78 m (5 அடி 10 அங்) (5 அடி 10 அங்)
கரம்வலது
பயிற்சியாளர்புல்லேலா கோபிசந்த்
ஆடவர் ஒற்றையர்
விளையாட்டு சாதனை198 (129–71) (ஒற்றையர்)
பெரும தரவரிசையிடம்1 (12 ஏப்ரல் 2018)
தற்போதைய தரவரிசை10 (21 திசம்பர் 2021)
இ. உ. கூ. சுயவிவரம்

சிறீகாந்த் கிடம்பி (Srikanth Kidambi) இந்திய இறகுப்பந்தாட்ட விளையாட்டு வீரராவார். தற்போது இந்திய ஆண்கள் விளையாட்டாளர்களில் பன்னாட்டுத் தரவரிசையில் மிக உயரிய நிலையில் உள்ளவரும் ஆவார்; இவரது உலகத் தர வரிசை எண் திசம்பர் 21, 2021 நிலவரப்படி 10 ஆக உள்ளது[2]. 2014ஆம் ஆண்டு சீனா திறவெளி சூப்பர் சீரிசு பிரீமியரில் இறுதியாட்டத்தில் லின் டானை 21–19, 21–17 என்ற கணக்கில் தோற்கடித்து கோப்பையை வென்றார்; சூப்பர் சீரிசு பிரீமியரின் ஆடவர் கோப்பையைத் தட்டிச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.[3]ஐதராபாத்திலுள்ள கோபிசந்த் இறகுப் பந்தாட்ட அகாதமியில் பயிற்சி பெறுகின்றார். இவருக்கு பெங்களூரின் கோஇசுபோர்ட்சு அறக்கட்டளை புரவல் நல்குகின்றது.[4] தவிரவும் இவருக்கு லி-நிங் விளையாட்டுப் பொருட்கள் நிறுவனமும் புரவல் நல்குகிறது.[5]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஸ்ரீகாந்த் நம்மாழ்வார் கிடாம்பி ரவுலபேலம், ஆந்திரப் பிரதேசத்தில் 7 பிப்ரவரி 1993ல் பிறந்தார். அவரது தந்தை KVS கிருஷ்ணா ஒரு நிலக்கிழார் மற்றும் அவரது அம்மா ராதா ஒரு இல்லத்தரசி.[6] ஸ்ரீகாந்த் மூத்த சகோதரர் நந்தகோபாலும் ஒரு பேட்மிண்டன் வீரர்.[7]

வெற்றிகள்[தொகு]

2011[தொகு]

2011 காமன்வெல்த் இளைஞர் விளையாட்டில் , கிடாம்பி கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி மற்றும் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றார் .[8] மேலும் புனேயில் நடைபெற்ற அனைத்து இந்திய இளையர் சர்வதேச பூப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதன்மைப் பட்டம் வென்றார்

2012[தொகு]

ஆம் ஆண்டில் மாலத்தீவுகள் சர்வதேச சாலஞ்சர் போட்டியின், ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை அன்றைய இளையோர் உலக வாகையர் ஜுல்பட்லி ஜுல்கிப்லியை, வென்று கிடாம்பி கைப்பற்றினார்[9]

2013[தொகு]

தாய்லாந்து ஓப்பன் கிராண்ட் பிரிக்ஸ் தங்கப்பதக்கப் போட்டியில் கிடாம்பி, உலகின் எட்டாம் நிலை வீரரும் உள்ளூர் ஆட்டக்காரருமான பூன்சக் போன்சானாவுக்கு எதிராக ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.[10] அதே ஆண்டில், டில்லி அனைத்திந்திய தொடர் தேசிய வாகையர் போட்டியில் ஒலிம்பிக் வாகையர் பாரபல்லி காஷ்யப்பைத் தோற்கடித்து முதல் தேசிய பட்டத்தை வென்றுள்ளார்.[11]

2014[தொகு]

ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற இந்தியா ஓப்பன் கிராண்ட் பிரிக்ஸ் தங்கப்பதக்க போட்டியில் [12] வில் கிடாம்பி இரண்டாம் இடத்தைப் பிடித்தார், மேலும் 2014 மலேசிய ஓபன் போட்டியில் கால் இறுதி வரை முன்னேறினார்</ref> and was a quarter finalist in 2014 Malaysian Open.[12]. 2014 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் கலப்பு-இரட்டையர் நிகழ்வின் அரை இறுதிப் போட்டி வரை முன்னேறினார்[13]. அதே போட்டியில் ஆண்கள் ஒற்றையர் போட்டியின் கால் இறுதியில் வெற்றியடைந்தார்[14]. 2014நவம்பர் மாதம், அவர் சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பிரீமியர் இறுதிப் போட்டியில் 5 முறை உலக சாம்பியனும், 2 முறை ஒலிம்பிக் சாம்பியனுமான லின் டான் ஐ (21-19-17-17) எனும் நேர் செட்களில் வென்றார். சூப்பர் சீரிஸ் பிரிமியர் ஆண்கள் பட்டத்தை வென்ற முதல் இந்தியியரானார். [1] அந்த வெற்றிகளுடன் அவர் உலக சூப்பர் தொடரில் இறுதிப் போட்டிக்காக தகுதி பெற்றார். பெறுமைமிகு பி.டபிள்யு.எஃப் சூப்பர் சீரீஸ் மாஸ்டர்ஸ் போட்டி அரை இறுதியில் சீனாவின் சென்லாங்கிடம் தோற்க நேர்ந்தது.[15]

2015[தொகு]

ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து ஓபன் போட்டியில் விக்டர் ஆக்செல்சனை வென்று அப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். அதே ஆண்டில் இந்தியன் ஓப்பன் சூப்பர் தொடரில் விக்டர் ஆக்செல்சனை 21-15,12-21,21-14 என்ற கணக்கில் வென்றார்[16]

2016[தொகு]

ஜனவரி மாதம் மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் அரைஇறுதியை நெறுங்கினார், அங்கு மலேசியாவின் இஸ்கான்டர் சுல்கர்ன் ஜனூடினை தோற்கடித்தார். சையது மோடி சர்வதேச இறகுப்பந்து வாகையர் கிராண்ட் பிரிக்ஸ் இறுதி ஆட்டத்தில் ஹூவாங் யுக்சியாங்ஐ 21-13, 14-21, 21-14 செட்களில் தோற்கடித்து தங்கப் பட்டத்தை வென்றர். 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் ஆண்கள் அணி மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டு தங்க பதக்கங்களை வென்றார், ஒற்றையர் பிரிவில் பிரணய் குமாரை தோற்கடித்தார். 2016 ஆம் ஆண்டு பேட்மிண்டன் ஆசியா சாம்பியன்ஷிப்பில், அவரது அணி அரையிறுதியில் தோல்வி கண்ட போதிலும், அவர் தோல்வியுறவில்லை.. 2016 ரியோ ஒலிம்பிக்கில், உலக தரவரிசையில் 11 வது இடத்திலிருந்த கிடாம்பி, லினோ முனொஸ் மற்றும் ஹென்றி ஹர்ஸ்கைன்னை வீழ்த்தி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 16 ஆவது சுற்றுக்கு நுழைந்தார். அவர் கால் இறுதிக்கு தகுதி பெற உலகின் 5 வது ஜோர்கன்சன் 21-19, 21-19 என்ற கணக்கை வென்றார் [17], ஆனால் லின் டான் 6-21, 21-11, 18-21 என்ற செட்கணக்கில் கிடாம்பியை தோற்கடித்தார்.

2017[தொகு]

இறகுப்பந்துப்போட்டி அகிலஉலகத் தரவரிசையில் முதல் முறையாக நுழைந்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை கே.ஸ்ரீகாந்த் கடம்பியும், சாய் பிரனீத்தும் பகிர்ந்துகொண்டனர். இருவரும் ஹைதராபாத்தில், புல்லல கோபிசந்த்தால் பயிற்சி பெற்றவர்களாவர்.[18] இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரீஸ் 2017 ல், ஜப்பானின் கஜுமச சாகாயை 21-11, 21-19 என்ற செட்கணக்கில் வென்றார்.மேலும் அவர் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் தொடரில் சீனாவின் சென் லாங்கை 22-20, 21-16 என்ற கணக்கில் தோல்வியுறச்செய்தார், மூன்று தொடர்ச்சியான சூப்பர் சீரிஸ் இறுதிப்போட்டியில் நுழைந்த சாதனையைப் படைத்தார்.[19]

அக்டோபர், 2017ல் பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியில், ஜப்பானின் நிசிமோட்டாவை வென்று, கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இவ்வெற்றி மூலம் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஸ்ரீகாந்த். 2017ம் ஆண்டில் கிடாம்பி வெல்லும் 4வது பட்டம் இதுவாகும்.[20]

விருதுகள்[தொகு]

2015ஆம் ஆண்டு அருச்சுனா விருதினையும்[21] 2018ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினையும் சிறீகாந்த் பெற்றார்[22].

மேற்கோள்கள்[தொகு]

 1. "BWF". பார்க்கப்பட்ட நாள் 13 December 2015.
 2. "BWF rankings: Kidambi Srikanth returns to top 10". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 22 Dec 2021.
 3. "Saina Nehwal, Kidambi Srikanth Win China Open Titles". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-08-12.
 4. "GoSports Foundation".
 5. "When brain fever almost got Kidambi Srikanth". The Times of India.
 6. Dev Sukumar (21 December 2012). "sportskeeda.com". {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
 7. "Brothers from Guntur create history". The Times of India.
 8. Commonwealth Youth Games, 2011
 9. "Maldives International Challenge 2012". Archived from the original on 2016-08-20. பார்க்கப்பட்ட நாள் 2017-07-02.
 10. "Thailand Open Grand Prix, 2013". The Times of India.
 11. "All India Senior Nationals, Delhi, 2013". The Times of India.
 12. "Malaysian Open, 2014". Deccan Chronicle.
 13. "Srikanth Glasgow, 2014". Archived from the original on 2022-05-17. பார்க்கப்பட்ட நாள் 2017-07-02.
 14. Rakesh Rao. "Badminton: Srikanth stuns Ajay Jayaram". The Hindu.
 15. "Saina Nehwal, Kidambi Srikanth boost their semifinal chances with second win". timesofindia-economictimes. பார்க்கப்பட்ட நாள் 13 December 2015.
 16. name=Kridangan>"Kidambi Srikanth Is the First Ever Indian Man to Win Swiss Open Grand Prix Gold , 2015". Kridangan.
 17. "Kidambi Srikanth storms into quarters". SportsCafe.in. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
 18. Sportswallah Desk (16 April 2017). "sportswallah.com". Archived from the original on 18 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 2 ஜூலை 2017. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
 19. The GenX Times (26 June 2017). "Srikanth defeated Olympic champion Chen Long to win the Australian Open Super Series title". Archived from the original on 15 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 2 ஜூலை 2017. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
 20. கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன்
 21. "Arjuna Award big boost for Hyderabad shuttler". deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 22 Dec 2021.
 22. "Padma awards 2018 announced". indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 22 திசம்பர் 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீகாந்த்_கிடம்பி&oldid=3929911" இலிருந்து மீள்விக்கப்பட்டது