சிறிய அந்தமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அந்தமான் தீவுகளின் வரைபடத்தில் சிறிய அந்தமான் தீவு சிவப்பில் காட்டப்பட்டுள்ளது.

சிறிய அந்தமான் (Little Andaman) தீவு (ஒன்கே: "கௌபொலாம்பே", Gaubolambe)அந்தமான் தீவுகளின் நான்காவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 739 கிமீ². அந்தமான் தீவுக்கூட்டத்தில் தென்முனையில் அமைந்திருக்கிறது. ஒன்கே என்ற பழங்குடியினர் வாழும் இத்தீவு 1957 ஆம் ஆண்டு முதல் பழங்குடி மக்களுக்கான சிறப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய அந்தமான் தீவின் செய்மதிப்படம் (1990)

தாழ்பகுதித் தீவான இதில் மழைக்காடுகள் நிறைந்திருக்கின்றன. அத்துடன் மிக அரிதான கடல் ஆமைகள் பல உள்ளன. 1960களில் இந்திய அரசு இங்குள்ள காடுகளைச் சுற்றி குடியேற்றத்திட்டத்தை ஆரம்பித்திருந்தது. ஆனாலும் இது பின்னர் ந்றுத்தப்பட்டு 2002 ஆண்டில் இருந்து பாதுகாக்கப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டது.

சிறிய அந்தமான் பொதுவாக பெரிய அந்தமான் தீவுக்கூட்டத்தின் ஒத்தபகுதியாகக் கருதப்படுகிறது.


ஆள்கூற்று: 10°45′N 92°30′E / 10.750°N 92.500°E / 10.750; 92.500

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_அந்தமான்&oldid=2228336" இருந்து மீள்விக்கப்பட்டது