உள்ளடக்கத்துக்குச் செல்

சிறப்பு வான்சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறப்பு வான்சேவை
Special Air Service

இரண்டாம் உலகப் போரின் போது சிறப்பு வான்சேவை வீரர்கள்
சேவையில் ஜூலை 1, 1941அக்டோபர் 8, 1945[1]
ஜனவரி 1 1947– தற்காலம் வரை[2]
நாடு ஐக்கிய இராச்சியம்
பிரிவு பிரிட்டானியத் தரைப்படை
வகை சிறப்புப் படைகள்
பங்கு சிறப்புப் நடவடிக்கைகள்
தீவிரவாத எதிர்ப்பு
அளவு ஒரு ரெஜிமண்ட்[3]
பகுதி ஐக்கிய இராச்சியத்தின் சிறப்புப் படைகள்
தலைமையகம் 21வது ரெஜிமண்ட் - லண்டன்
22வது ரெஜிமண்ட் - கிரெடென்ஹில்
23வது ரெஜிமண்ட் : ப்ரிமிங்காம்
வேறு பெயர் Blades[4]
கொள்கை துணிந்தவன் ஜெயிப்பான் (Who Dares Wins)
கொடி/நிறம் போம்படோர் நீலம்
அணிவகுப்பு இசை வேகம்: Marche des Parachutistes Belges
மெது: Lili Marlene
போர்கள் இரண்டாம் உலகப் போர்
மலேசிய நெருக்கடி
இந்தோனேசிய-மலேசிய மோதல்
தோஃபார் புரட்சி
ஏடன் நெருக்கடி
வடக்கு அயர்லாந்து போர்
ஃபால்க்லாந்து போர்
வளைகுடாப் போர்
யுகோஸ்லாவிய உள்நாட்டுப் போர்
பர்ராஸ் நடவடிக்கை
ஆஃப்கானிசுத்தான் போர் (2001–தற்காலம்)
இராக் போர்
தளபதிகள்
கர்னல்-கமாண்டண்ட் ஜெனரல் சார்லஸ் குத்ரி[5]
குறிப்பிடத்தக்க
தளபதிகள்
Colonel David Stirling
Lieutenant-Colonel Paddy Mayne
Brigadier Mike Calvert
Major-General Anthony Deane-Drummond
General Peter de la Billière
General Michael Rose
Lieutenant-General Cedric Delves

சிறப்பு வான்சேவை (ஸ்பெஷல் ஏர் சர்விஸ்; Special Air Service; SAS) ஐக்கிய இராச்சியத்தின் படைப்பிரிவுகளில் ஒன்று. இது அதிரடித் தாக்குதலில் ஈடுபடும் சிறப்பு படைப்பிரிவாகும். போர்க்காலத்தில் எதிரிப் பகுதிகளில் நாச வேலைகளில் ஈடுபடுதல், திடீர்த் தாக்குதல்களை நடத்துதல் போன்ற செயல்களிலும் அமைதிக் காலத்தில் தீவிரவாதிகளை படுகொலை செய்தல், பிணைக்கைதிகளை விடுவித்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கப் பட்ட இந்தப் படைப்பிரிவு பல உலக நாடுகளின் சிறப்புப் படைப்பிரிவுகளுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

1941ம் ஆண்டு வடக்கு ஆப்பிரிக்கா போர்முனையில் நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் திடீர்த் தாக்குதல்களை நடத்தி குழப்பம் விளைவிக்க இப்பிரிவு உருவாக்கப் பட்டது. இப்பிரிவின் படைகள் கமாண்டோ படை வீரகளைப் போன்றே சாதாரண படைவீரர்களைப் போல செயல்படுவதில்லை. நேரடித் தாக்குதல்களில் ஈடுபடுவதில்லை. பிற படைப்பிரிவுகளின் வீரர்களே இதில் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். மிகக் கடுமையான பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. போர்காலத்தில் நாச வேலைகளிலும் அமைதிக்காலத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர். இரண்டாம் உலகப் போருக்கு பல ஆண்டுகளுக்கு பின்வரை இப்படைப்பிரிவு பரவலாக அறியப்படவில்லை. மிக இரகசியமாகவே செயல்பட்டு வந்தது. 1980ல் லண்டனில் உள்ள ஈரானியத் தூதரகத்தை தீவிரவாதிகள் தாக்கிக் கைப்பற்றிய போது இப்படைப்பிரிவினர் தூதரகக் கட்டிடத்தின் மீது அதிரடியாகத் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளைக் கொன்று பிணைக்கைதிகளை விடுவித்தனர். இந்த நிகழ்வுக்குப் பின்னரே இப்படைப்பிரிவு மக்களிடையே பரவலாக அறியப்பட்டது.

சிறப்பு வான்சேவையில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை தரைப்படையின் 22வது சிறப்பு வான்சேவை ரெஜிமண்ட், 21வது சிறப்பு வான்சேவை ரெஜிமண்ட் மற்றும் ஊர்க்காவல் படையின் (Territorial army) 23வது சிறப்பு வான்சேவை ரெஜிமண்ட். இப்படைப்பிரிவைப் போன்றே கடல் பகுதிகளிலும், கப்பல்களிலும் தாக்குதல் நடத்த [சிறப்பு படகுசேவை]] (Special Boat Service) என்ற படைப்பிரிவும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Shortt & McBride, p.16
  2. Shortt & McBride,p.18
  3. "UK Defence Statistics 2009". Defence Analytical Services Agency. Archived from the original on 18 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 26 March 2010.
  4. Ryan, p.216
  5. Moreton, Cole (11 November 2007). "Lord Guthrie: 'Tony's General' turns defence into an attack". London: The Independent. http://www.independent.co.uk/news/people/profiles/lord-guthrie-tonys-general-turns-defence-into-an-attack-399865.html. பார்த்த நாள்: 18 March 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்பு_வான்சேவை&oldid=3554393" இலிருந்து மீள்விக்கப்பட்டது