பாசுக்கல் (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கிஇணைப்பு: oc:Pascal (unitat) |
சி தானியங்கிஇணைப்பு: bo:ཕ་སི་ཁལ། |
||
வரிசை 81: | வரிசை 81: | ||
[[bg:Паскал (единица)]] |
[[bg:Паскал (единица)]] |
||
[[bn:প্যাস্কেল]] |
[[bn:প্যাস্কেল]] |
||
[[bo:ཕ་སི་ཁལ།]] |
|||
[[br:Pascal]] |
[[br:Pascal]] |
||
[[bs:Paskal (jedinica)]] |
[[bs:Paskal (jedinica)]] |
23:46, 29 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்
பாசுக்கல் ( pascal ) (குறியீடு Pa) என்பது அழுத்தத்தின் SI அலகு ஆகும். பாசுக்கல் என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு நியூட்டன் அழுத்தம் ஆகும். அதாவது ஒரு பாசுக்கல் என்பது நியூட்டன்/மீட்டர்2 க்குச் சமமாகும். புகழ் பெற்ற பிரெஞ்ச்சு கணித அறிஞரும், இயற்பியலாளரும், தத்துவ அறிஞருமான Blaise Pascal நினைவாக இந்த அலகு பெயரிடப்பட்டுள்ளது.
- 1 Pa
- = 1 N/m2 = 1 (kg·m/s2)/m2 = 1 kg/m·s2
- = 0.01 மில்லிபார்
- = 0.00001 பார்
இதே அலகு தகைவு அல்லது விசையடர்த்தி (stress (physics)|stress), யங் கெழு அல்லது யங் எண் (Young's modulus) மற்றும் நீட்சித்தகைவு (tensile strength) முதலியவற்றை அளக்கவும் பயன்படுகிறது.
தரையில், கடல்மட்டத்தில், சீரான காற்றுமண்டல அழுத்தம் 101,325 Pa = 101.325 kPa = 1013.25 hPa = 1013.25 mbar = 760 டார் (ISO 2533) ஆகும்.
உலகெங்கிலும் வானிலையாளர்கள் (Meteorologists) வெகு காலமாக காற்றின் அழுத்தத்தை மில்லிபார் என்னும் அலகால் அளந்துவந்தனர். SI அலகுகள் வந்தபிறகும் இந்த மில்லிபார் அளவை பின்பற்றும் முகமாக மில்லிபாருக்கு இணையான ஹெக்டோ-பாஸ்கல் என்னும் அலகைப் பயன்படுத்துகின்றனர். ஒரு ஹெக்டோ பாஸ்கல் என்பது 100 பாஸ்கலுக்கு ஈடு. ஒரு மில்லிபார் என்பது 100 பாஸ்கல் ஆகும். பிற துறைகளில் கிலோபாஸ்கல் போன்ற SI அலகுகளையே பயன்படுத்துகின்றனர். குறைக்கடத்தி இயலிலும் பாஸ்கல் என்னும் அழுத்த அளவு பயன்படுத்தினாலும், கூடவே டார் (Torr) என்னும் அளவையும் பயன்படுத்துகின்றனர்.
- 1 ஹெக்டோபாஸ்கல் (hectopascal) (hPa)
- = 100 Pa = 1 (மில்லிபார்) mbar
- 1 கிலோபாஸ்கல் (kilopascal) (kPa)
- = 1000 Pa = 10 hPa
முன்னாளைய சோவியத் யூனியனில் மீட்டர்-டன்-நொடி அலகுமுறையில் (mts system) பீசே (pieze) என்னும் அலகை அழுத்தத்திற்குப் பயன்படுத்தினர். அது ஒரு கிலோபாஸ்கலுக்கு ஈடு ஆகும்.
பல்வேறு (தோராயமான) மதிப்புகளின் எடுத்துக்காட்டுக்கள்
(அறிமுகத்துக்கு SI முன்னொட்டு பார்க்கவும்)
0.5 Pa | புளூட்டோவின் காற்றுமண்டல அழுத்தம் (1988 ஆம் ஆண்டு கணிப்பு) |
10 Pa | ஒரு செங்குத்துக்குழாயில் ஒரு மில்லிமீட்டர் உயரம் நீரின் உயர்ச்சியால் கூடும் அழுத்தம்; |
1 kPa | செவ்வாய் கோளின் வளிமண்டலத்தின் அழுத்தம், ∼ பூமியின் கடல்மட்ட அழுத்தத்தில் 1 %. |
10 kPa | 1 மீட்டர் உயரம் நீர் ஏறுவதால் ஏற்படும் அசுத்தம்¹, அல்லது பூமியின் கடல் மட்டம்கடல்மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரம் ஏறினால் காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் தணிவு (குறைப்பு) |
101.325 kPa | Standard atmospheric pressure for Earth sea level = 1013.25 hPa |
10 MPa | Pressure washers force out water at this pressure |
100 MPa | பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா பெருங்குழி (Mariana Trench )யில், ஏறத்தாழ 10 கிலோமீட்டர் (km) ஆழத்தில் |
10 GPa | வைரம் உருவாகும் அழுத்தம்;. |
100 GPa | கருத்தியல் கணிப்புப்படி கரிம நானோகுழாய் (கார்பன் னானோகுழாய்) (CNTs) இன் நீட்சிவலு (tensile strength) |
¹பூமியின் நிலப்பரப்பில்
மற்ற அழுத்த அலகுகளுடன் ஒப்பீடு
1 பார் | 100 000 Pa |
1 மில்லிபார் | 100 Pa |
1 காற்றுமண்டல அழுத்தம் | 101 325 Pa |
1 மில்லிமீட்டர் பாதரசம் (mmHg) (அல்லது டார் (Torr)) | 133.332 Pa |
1 அங்குல பாதரசம் (1 mmHg) | 3 386.833 Pa |